வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 3 செப்டம்பர், 2011

அண்ணாபிறந்தநாளில் விடுதலை.

                                                                  

                    அண்ணாபிறந்தநாளில் விடுதலை..வைகோ கோரிக்கை..

   ஆண்டுகள் பல கழிந்த பின்னும் சிறையில் இருப்போரை அரசு விடுதலை
செய்யவேண்டும் என தமிழக அரசுக்கு ம.தி.மு.க வின் பொதுச்செயலாளர் வை.கோ
வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
  அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:   ஆயுள் தண்டணை அடைந்தோர்,
பத்து ஆண்டுகள் தண்டிக்கப்பட்டோர், சில குற்றப்பிரிவுகளில் தண்டணை பெற்றதை
காரணம் காட்டி விடுவிக்கப்படாமலே சிறையில் உள்ளனர்.

  சிறைவாசிகளில் பலர் 15 ஆண்டுகள் கழிந்த பின்னும் சிறையில் வாடுகின்றனர்.
இதனால் அந்த சிறைவாசிகளின் குடும்பங்கள் சின்னாபின்னமாகி, மரணத்தை
விட கொடுமையான மனத்துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

  14 ஆண்டுகளுக்கு மேல் கைதிகள்சிறைவாசத்தை நீட்டிக்கவேண்டும் என
 இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் திருத்தத்தை நாடாளுமன்றத்தில்
கொண்டுவந்தபோது அதனை கடுமையாக எதிர்த்து உரையாற்றினேன்.

குற்றப்பிரிவுகளை காட்டி  விடுவிக்கப்படாத சிறைவாசிகளை பொதுமன்னிப்பில்
விடுவிக்க அரசு முன்வரவேண்டும்.
 பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல்
சிறையில் உள்ளவர்களை விடுவிக்கவேண்டும்.
பரோல் விடுப்பில் சென்றவர்கள் குறிப்பிட்டநாளில் திரும்பாததை காரணம் காட்டி
ஒருநாள் இருநாள் தாமதம் எனக்கூறி அவர்கள் விடுதலை பெற முடியாத இன்னலுக்கு
ஆளாக்காமல் மனிதாபிமானத்தோடு விடுதலை செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்