வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

நேரத்தை நீட்டிக்க வலியுறுத்தல்...






தமிழகத்தின்

சிறந்த சுற்றுலாத் தலமாகவும்,

நீதி மன்ற புறக்கணிப்பு..

             
 கொடுமுடியில் உள்ள மாஜிஸ்திரேட்

பூட்டை உடைத்து...


கொடுமுடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து

பேருந்துகளை இயக்க கோரிக்கை...




புதிய வழித்தடங்களில்
பேருந்துகளை இயக்க வேண்டுமென

முதல் இடம்...

        
ஈரோடு மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகளில்...

வியாழன், 8 செப்டம்பர், 2011

மனுநீதி நாள் முகாம்...

                                                              
    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள காகம் கிராமத்தில்..                                     

நகரில் நலப்பணிகள் செய்ய வேண்டும்..

 ஈரோடு மாவட்டம்   சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 32 வது கிளை

மாநாடு நடந்தது.


மாநாட்டிற்குகல்யாணசுந்தரம், ராஜசுலோச்சனா, ரணதிவேல்

ஆகியோர் தலைமை வகித்தனர்.

  முருகேசன் வரவேற்றார்.  சோமசுந்தரம் கொடி ஏற்றினார். செயல்பாடு மற்றும் அமைப்பு நிலை அறிக்கையை வரதராஜன் வாசித்தார். உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை கொடுமுடி ஒன்றிய செயலாளர் குணசேகரன் வழங்கினார்.

 தேசிய செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின்குணசேகரன்  அரசியல் விளக்க உரை நிகழ்த்தினார்.

   மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:

 சிவகிரியில் புதிய பேருந்து நிலையம் அருகிலும், பழைய பேருந்து நிலையம் அருகிலும்அரசு மதுபானக்கடைகள் இயங்கி வருகின்றன. மக்கள் நடமாட்டம் அதிகள் உள்ள இப்பகுதியில் பெண்கள், குழந்தைகள், செல்வதற்கு மிகவும்

சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகளும் கடும் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர்.

எனவே இந்த மதுபானக்கடைகளை ஊர் எல்லைப்பகுதிக்கு மாற்றிட நடவடிக்கை எடுக்குமாறுஈரோடு மாவட்ட  ஆட்சியரை கேட்டுக்கொள்கிறோம்.

  சிவகிரி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பொரசமேடு, மற்றும் ராமமூர்த்தி நகரில்

 புறம்போக்கு நிலத்தில் வசித்து வருபவர்கள் பலருக்கு  இன்னும் வீட்டுமனைப்பட்டா  கொடுக்கப்படவில்லை.

வருவாய் துறையில் பலமுறை முறையிட்டும் பட்டா வழங்கப்படாமல் உள்ளது.  வீடற்றஏழை மக்கள் தொடர்ந்து  வாடகை  வீடுகளில்  வசித்து வருகின்றனர். அவர்களுக்குஇலவச வீடு கட்டித்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஈரோடு வட்டத்தில் பெரிய ஊராக உள்ள சிவகிரியிலிருந்து அலுவல்களுக்காகவும்,

 பள்ளி கல்லூரிகளுக்கும் பெரும் எண்ணிக்கையில் பலர் பயணம் மேற்கொள்கின்றனர்.

 ஏற்கனவே சிவகிரி வழியாக முத்தூர் , வெள்ளகோயில், பகுதிகளுக்கு இயக்கப்பட்டுவந்த

 தனியார் பேருந்துகள் நேராக விளக்கேத்தி மோளபாளையம் வழியாகச்செல்ல அனுமதிக்கப்பட்டதன்

 விளைவாக சிவகிரி பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர், எனவே அலுவலகம் பள்ளி கல்லூரி

செல்லும் நேரங்களிலும், திரும்பும் நேரங்களிலும் சிவகிரிக்கும் ஈரோட்டுக்கும் கூடுதல் நகரப்பேருந்துகளை இயக்க வட்டார போக்குவரத்து அலுவலர்

நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 சிவகிரி வட்டாரத்தில் பல குழந்தைகள் காப்பகங்கள் வாடகை கட்டிடங்களிலும், தனியார் கட்டிடங்களிலும் இயங்கி வருகின்றன. அவை போதுமான இடவசதி இல்லாததால் சுகாதாரமற்ற நிலையில் குழந்தைகள் இருக்கவேண்டியுள்ளது. எனவே ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத்திட்ட அலுவலர்  தலையிட்டு உரிய கட்டிட வசதிகளை ஏற்படுத்தி தருமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

 சிவகிரியில் முக்கிய வணிகப்பகுதியாக உள்ள சிவகிரி பழையபேருந்துநிலையப்பகுதியில்  நிழற்குடை மற்றும் இலவச சிறுநீர் கழிப்பிடமும்  அமைத்து தரவேண்டும்.

 சிவகிரியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு குடிநீர் வசதியும் இலவச சிறுநீர் கழிப்பிட வசதியும்  ஏற்படுத்தி தரவேண்டும்.

 சிவகிரி குமரன் தெருவில் உள்ள  பாதுகாப்பற்ற நந்தவனக்கிணற்றுக்கு சுற்றுச்சுவர் ஏற்படுத்தி தரவேண்டும். அத்துடன் அந்தக்கிணற்றின் தண்ணீரை சுத்தப்படுத்தி தரவேண்டும்.

திரு.வி.க தெரு, நால்வர் மடம் அருகில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை பழுது பார்த்து தரவேண்டும்.

சிவகிரி வேளாண்மைத்துறை அலுவலகத்தின் தென்பகுதியில் உள்ளகாலியிடத்தில் சிறுவர் பூங்கா அமைத்துதரவேண்டும்.

 சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட எல்லப்பாளையத்தில் கழிப்பிட வசதியில்லை, போதுமான சாலை வசதியும், சாக்கடை வசதியும் இல்லை. இந்த வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

நெசவாளர் காலனிக்கு சாக்கடை வசதியும், சாக்கடை வசதியும்  ஏற்படுத்திதரவேண்டும்.

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

செருப்பு வாங்க தனிவிமானம் அனுப்பும் முதல்வர்...

                                   

      செருப்பு வாங்குவதற்காக தனிவிமானம் அனுப்பினார். இந்திய நாட்டின்
மாநில முதலமைச்சர் என்ற தகவலை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

திங்கள், 5 செப்டம்பர், 2011

சாலை ஆக்கிரமிப்பு....

                                                                 

                                                           சாலை ஆக்கிரமிப்பு....

        கொடுமுடியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடு

விலங்குகளின் புகழிடமாக மாறியுள்ளது.

 கொடுமுடியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், பொது நூலகம், நீதிமன்றம்,

அரசு மருத்துவமனை, பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

போன்றவைகள் அமைந்துள்ள பிரதான சாலை நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில்

உள்ளது.

     ஏமகண்டனூர் ரயில்வே கேட் முதல் கடைவீதி வரை உள்ள பகுதிகளில்

சாலை ஆக்கிரமிப்பு உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

மேலும், சாலை ஓரத்தில் குதிரை, ஒட்டகம், மாடு உள்ளிட்டவைகள் கட்டி

வைக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விலங்கினங்கள் கட்டப்படுவதால் இங்கு

வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தமுடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

  கழிவுகளால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்

கேடு ஏற்படுகிறது.
  
   இது குறித்து கொடுமுடி பொது நலச் சங்க அமைப்பாளர் பாலசுப்ரமணி

கூறியது: ரோடு ஆக்ரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டி

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தோம்.

இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
                                                         


  விலங்குகளால் பொது மக்களுக்கும்,

பள்ளிக் குழந்தைகளுக்கும் பய உணர்வு ஏற்படுகிறது  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு

 அவர் கூறினார்.

நகை ஏற்றுமதியில் ரூ611கோடி ஊழல்.

                                                                       

                                  தங்க நகை ஏற்றுமதியில் ரூ611கோடி ஊழல்.

 மத்திய அரசின் மினிரத்னா நிறுவனமாக கொல்கத்தாவைச்சேர்ந்த
எம்.எஸ்.டி.சி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் மத்திய இரும்பு மற்றும் எஃகு அமைச்சகத்தின்
கீழ் செயல்பட்டு வரும் துணைநிறுவனமாக உள்ளது.

    இந்த நிறுவனம்  வெளிநாடுகளுக்கு தங்க நகைகள் ஏற்றுமதி செய்வதை
ஒழுங்கு படுத்தும் நிறுவனமாக உள்ளது.

    இந்த நிறுவனத்திற்கான கணக்குகளை மத்திய தணிக்கை அதிகாரி தணிக்கை
செய்தார். தணிக்கை அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

 நிர்வாகத்தில் உள்ள சிலர் லாபம் பெறுவதற்காக

ஏற்றுமதி ஒப்பந்தத்தில் விலை நிர்ணயம் தொடர்பாக குளறுபடி நடந்துள்ளது.

  இடர்பாடுகள் பற்றி எண்ணாமல் தனிப்பட்டவர்களின் லாபம் குறித்தே எண்ணப்பட்டுள்ளது.

    தங்க நகை ஏற்றுமதிக்கா தேர்வு செய்யப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள்
47 ல் 18 நிறுவனங்கள் தங்க நகை வியாபாரத்தில் தொடர்பே இல்லாதவை.

     தங்க நகை ஏற்றுமதியில் இந்த நிறுவனங்கள் 39 சதவிகிதம்
நகைகளை வாங்கியுள்ளன. ஏற்றுமதியின்போது ஏற்படும் எதிர்பாராத இடர்பாடுகளை
சமாளிக்க இந்த நிறுவனங்கள் இன்ஷயூரன்ஸ் செய்யவில்லை.

  வெளிநாட்டு நிறுவனங்கள் சில, பெருமளவான தொகையை நிலுவையில் வைத்துள்ளன.

   இதனை வசூலிக்க தெரியாமல் எம்.எஸ்.டி.சி நிறுவனம் திணறிவருகிறது.

    இந்த நிலைக்கு தவறான ஏற்றுமதி ஒப்பந்தம் காரணமாக உள்ளது.

   இதனால் ரூ 611 கோடி மதிப்புக்கு ஊழல் நடந்துள்ளது. இவ்வாறு தணிக்கை
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வழக்குரைஞர்கள் மோதல்.

                               
                                                                              

                                     நீதிபதி முன்பு வழக்குரைஞர்கள் மோதல்.

 முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ஜாமின் வழங்ககோரி எழுந்த பிரச்சனையில்
விழுப்புரம் நீதி மன்றத்தில் அரசு வழக்குரைஞருக்கும், தி.மு.க தரப்பு வழக்குரைஞர்
களுக்கும் மோதலால் ஜாமின் மனு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

       தி.மு.க வின் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது நில அபகரிப்பு
தொடர்பாக வந்த புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் நீதி மன்றத்தில் அவருக்கு ஜாமின் தரக்கோரி மனு தரப்பட்டது.
அந்த மனு விசாரணைக்கு வந்தபோது அதற்கு அரசு தரப்பு வழக்குரைஞர்
சுப்பிரமணியன் ஆட்சேபம் தெரிவித்தாரர்.

இதனை தி.மு.க தரப்பு வழக்குரைஞர்கள் எதிர்த்தனர். இதனால் அரசு தரப்பு
வழக்குரைஞர் பிரிவுக்கும் தி.மு.க தரப்பு வழக்குரைஞர் பிரிவுக்கும் மோதல்
ஏற்படும் சூழ்நிலை உருவானது.

 இதனை உணர்ந்த நீதிபதி மனோஜ்குமார்  வழக்கு விசாரணையை
 செப்டம்பர் 8 ம்தேதிக்கு தள்ளி வைத்தார்.

வாக்குசாவடி இறுதி பட்டியல் செப்12க்குள் தயாரிக்க உத்தரவு

                    


                                       வாக்குசாவடி இறுதி பட்டியல் செப்12க்குள்
                                         தேர்தல் ஆணையம்  தயாரிக்க உத்தரவு
                                              
                            
 தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்த பணிகளை மேற்கொள்ள தமிழக தேர்தல்
 ஆணையம் உத்தரவு ஒன்றினை
வெளியிட்டுள்ளது.


(1).அதன்படி செப்டம்பர்7 ம்தேதிக்குள் வாக்குச்சாவடி பட்டியல்கள் இறுதி
செய்யப்படவேண்டும்.

(2.)8 ம்தேதிக்குள் அந்தப்பட்டியல் விளம்பரப்படுத்தபடவேண்டும்.

(3.) 10 ம்தேதிக்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளாட்சி பிரதி
நிதகளுடன் தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டங்களை கலெக்டர்
தலைமையில் நடத்தவேண்டும்.

(4)12 ம்தேதி வாக்குச்சாவடி தொடர்பான இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட
வேண்டும்.

(5)14 ம்தேதி வாக்குசாவடி பட்டியலை அச்சிடுவதற்கு வழங்கவேண்டும்
        என அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு சிவகிரி தி.மு.க கண்டணம்.

                               தமிழக அரசுக்கு சிவகிரி தி.மு.க கண்டணம்.

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் நகர தி.மு.க வின் பொது உறுப்பினர்கள் கூட்டம்
நடந்தது.

  கூட்டத்துக்கு  நகர அவைத்தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார்.
 பொதுக்குழு  உறுப்பினர் கதிர்வேல், மாவட்ட முன்னாள்  துணை செயலாளர்
இளஞ்செழியன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அரசு, ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.

  நகர செயலாளர் கோபால் வரவேற்றார்.
  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:

  தமிழக உள்ளாட்சி தேர்தலில் சிவகிரி பேரூராட்சியில் உள்ள வார்டு உறுப்பினர்,
மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க வின் சார்பில் போட்டியிடுவது.

தி.மு.க வின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்ட கழக அலுவலகத்தில்
வேட்பாளருக்கான தகுதி விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிப்பது.

 தி.மு.க வின் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள்
மீது  நில அபகரிப்பு பொய் வழக்கு போடும் ஜெயலலிதா தலைமையிலான
அ.இ.அ.தி.மு.க அரசை வன்மையாக கண்டிப்பது.

கருணாநிதி கொண்டுவந்த சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தொடர நீதி மன்ற
அங்கீகாரம் பெற போராடிய கழக தலைவருக்கும், முன்னணியினர், மற்றும்
தோழர்களுக்கும் பாராட்டு தெரிவிப்பது.

 தூக்கு தண்டணை கைதிகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன்,
முருகன், ஆகியோரின் தண்டணையை ஆயுள் தண்டணையாக குறைக்க
தமிழக அமைச்சரவை கூடி மத்திய அரசை வலியுறுத்தவேண்டும்.
என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



                                                        

  முடிவில் பேரூர் துணை செயலாளர் பாபுராஜா நன்றி கூறினார்.

நேரில் ஆஜராக உத்தரவு...

                                                                        

                       சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக உத்தரவு.

சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என
பெங்களூரு நீதி மன்றம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
வருமானத்து அதிகமாக சொத்துசேர்த்ததாக கூறப்படும் வழக்கு பெங்களூரு நீதி
மன்றத்தில் நடந்து வருகிறது.

  இந்த வழக்கில் தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா
,இளவரசி, மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

   இந்த வழக்கில்  தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதாலும்,
மாநில முதல்வராக இருப்பதாலும், அதி உயர் பாதுகாப்பு வளையத்தில் இருப்பதாலும்,
நேரில் ஆஜராக முடியவில்லை. அதற்கு பதிலாக வீடியோ கான்பரசிங் முறையில்
வழக்கில் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதிக்கவேண்டும் என
எழுத்துபூர்வமான மனு மூலம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.

   இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் வழக்கில் நேரில் ஆஜர் ஆவதிலிருந்து விலக்கு
கேட்பது என்பது வழக்கை தாமதப்படுத்தும் செயல், நேரில் ஆஜராகவேண்டும்
என அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

எட்டுலட்சம் மக்கள்உயிர்விடப்போகும்எச்சரிக்கை செய்தி..

                               
 
                                       உணவில்லாமல்  உயிர்விடப்போகும்
                                    எட்டுலட்சம் மக்கள்: எச்சரிக்கை செய்தி


ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றானசோமாலியாவில் தற்போது மிகவும் மோசமான வறுமை நிலவிவருகிறது.
உள்நாட்டுப்போர், போதைபொருள் கும்பலின் அட்டகாசம், பொருளாதார சீர்குலைவு, இனக்குழுக்களுக்கி
டையேயான மோதல் என பல்வேறு வடிவங்களில் அந்த நாடு கடந்த சில வருடங்களாகவே சின்னாபின்னமாகி
வருகிறது.
மக்கள் தங்கள் உணவு தேவைக்கு ஆயுதம் ஏந்தவேண்டிய கட்டாய நிலையும் காணப்படுகிறது. இந்த நிலை


தொடருமானால் வரும் 4 மாதங்களுக்குள்  அந்த நாட்டில்

 7 லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானபேர் பட்டினியில் உயிரை இழப்பார்கள்  என ஐ.நா எச்சரிக்கிறது.

 60 வருடங்களில் கிழக்கு ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பஞ்சம்

இது, தெற்கு ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை

 அல் கைதாவுடன் தொடர்புடைய அல் ஷாபாப் இஸ்லாமிய குழு தனது

 கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதõல், அங்கு  மிக மோசமான
 பட்டினி நிலைமை காணப்படுகிறது என ஐ.நா கூறியுள்ளது.

தற்போது மிக அவசரமாக 12 மில்லியன் சோமாலியர்களுக்கு உணவு உதவி
தேவைப்படுவதாக அவசர கோரிக்கை விடுத்துள்ள ஐ.நா, பே நகரத்தை
சோமாலியாவின் 6 வது பஞ்சம் தலைவிரித்தாடும் பிரதேசமாக ஐ.நா. அறிவித்துள்ளது.

 4 மில்லியனுக்கு மேற்பட்ட சோமாலிய மக்கள் வறுமையில்
 வாடிவருகின்ற போதும், 7. லட்சத்துஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பேர் அடுத்து வரும் நான்கு
 மாதங்களில்
உயிரிழக்கும் நிலையில் உள்ளனர் என ஐ.நா எச்சரித்துள்ளது.

சோமாலியாவில் இது வரை  உயிரிழந்தோரின் அரைவாசிப்பேருக்கு மேல் சிறுவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பட்டினி, பஞ்சம் ஆகியவை டிஜிபுட்டி, எரித்திரியா,
எதியோப்பியா, கென்யா மற்றும் உகண்டா போன்ற நாடுகளையும் பாதிக்க
 தொடங்கியுள்ளது.
பஞ்சம் தலைவிரித்தாடும் பகுதிகளை ஐ.நா பேமன் பகுதிகள் என உத்தியோகபூர்வமாக
அறிவிக்கிறது. இந்த பேமன் பகுதிகள் என்பது

அப்பகுதியில் உள்ள 30% வீதத்துக்கு மேலான குழந்தைகள் ஊட்டசத்து
 குறைபாட்டினால் பாதிக்கபட்டிருத்தல், தினந்தோறும் 10,000 பேர்களில்
 இரு ஆண்கள் அல்லது நான்கு சிறுவர்கள்  உண்ண உணவின்றி உயிரிழத்தல்
 என்ற அறிகுறிகள் கொண்டது.

பள்ளிக்கு சொத்து அமைச்சரவை அதிரடி முடிவு.

                                       

                                              ஊழல் அதிகாரி சொத்து பள்ளிக்கு
                                                அமைச்சரவை அதிரடி முடிவு.

 கடந்த 2007ம் ஆண்டு பீகார் மாநில சிறிய நீர் பாசனத்துறை செயலாளராக
இருந்தவர் சிவசங்கர்வர்மா. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவழக்கில்
கைதானார்.

    அவருக்கு சொந்தமான இடங்களிலிருந்து ரூ1.5 கோடி கைப்பற்றப்பட்டது.
இது தவர ரூ5 கோடி பெறுமானமான இருமாடி வீடுகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து வழக்கு நடந்தது.

  ஊழல் பணத்தில் கட்டப்பட்ட மாடிவீடு ஜப்தி செய்யப்பட்டன.
 ஜப்தி செய்யப்பட்ட கட்டிடத்தை பள்ளிக்கட்டிடமாக மாற்றி செயல்படுத்துவது
என தற்போதைய பீகார் அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளது.

மீட்பு....


                                                                   மீட்பு....

     தமிழகத்தில் நில ஆக்ரமிப்பாளர்களிடமிருந்து நிலத்தை மீட்ககோரி வந்துள்ள புகார்களில்
நாமக்கல் மாவட்டம்  அதிக புகார் மனுக்களை பெற்றுள்ளது.

   புதிய அரசு பதவி ஏற்றவுடன் நிலமோசடி குறித்து விசாரணை செய்ய அனைத்து
மாவட்டங்களிலும் தனிப்பிரிவு தொடங்கப்பட்டது.

இந்த பிரிவிடம் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இது வரை வந்த
புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுத்த வகையில்  மொத்தம்
 ஆக்ரமிப்பாளர்களிடமிருந்து ரூ450 கோடி மதிப்பிலான
700 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

   நில மோசடிவழக்கில் தி.மு.க மட்டும் அல்லாதுஆளுங்கட்சியை சேர்ந்த சிலரும்
சிக்கி வருகின்றனர்.

   அந்த வகையில் தி.மு.க வைச்சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டிஆறுமுகம்,
பொன்முடி, நேரு ஆகியோர் சிக்கியுள்ளனர்.

   நீலகிரி, கோவை, திருப்பூர்,  ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி,
நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டல போலிஸ் பிரிவில்
 கடந்த மே மாதம் 15 ம்தேதி முதல்  கடந்த 3 ம்தேதி வரையில் மொத்தம்
ஆயிரத்து 820 மோசடி புகார்கள் பெறப்பட்டுள்ளன.

     கோவை மாவட்டத்தில் 21 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை
பதியப்பட்டுள்ளது. இதன்பேரில் 78 பேர் கைதாகியுள்ளனர்.

  ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட  748 புகார்களில் முதல் தகவல் அறிக்கை8 மனுக்களில் மீது
பதியப்பட்டுள்ளது.

    நீலகிரி, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா106,433,867
புகார்கள் பெறப்பட்டுள்ளன.

மேற்கு மண்டலத்தில் மொத்தம்168 முதல் தகவல் அறிக்கைகள்
பதியப்பட்டுள்ளன. அவற்றில் 941பேர் குற்றவாளிகளாக
சேர்க்கப்பட்டுள்ளனர்.

       147பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும்
பெறப்பட்ட மொத்த புகார்கள் 4 ஆயிரத்து820. இந்த புகார்களில்
இன்னும் 168 புகார்களுக்கு  மட்டுமே ரசீதுகள் தரவேண்டியுள்ளது.

    விசாரணையில் 2 ஆயிரத்து 133 புகார்கள் உள்ளன. மற்றவை
விசாரிக்கப்பட்டுவிட்டன.

   நாமக்கல் மாவட்டத்தில்  வந்த  ஆயிரத்து 24 புகார்களில் 20 புகார்கள் மட்டுமே
முதல் தகவல் அறிக்கைக்கு தகுதியானதாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

   நில மோசடி பிரிவின் கீழ்  சிக்கியுள்ளவர்களில் 87 பேர் அரசியல்
வாதிகள். தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் ரூ162 கோடியே 45 லட்சத்து20 ஆயிரத்து100
மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.
   
    
  

30 கிலோ தங்கம் ரூ 1.5 கோடி ...

                                                                       

                                              30 கிலோ தங்கம்  ரூ 1.5 கோடி
                               

ஜனார்த்தன ரெட்டி, சீனுவாச ரெட்டி வீடுகளில் கோடிக்கணக்கில் பணம், 30 கிலோ தங்கம் பறிமுதல்

சட்டவிரோத சுரங்க முறைகேடு தொடர்பாக  கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

 அவரதுவீட்டில் இருந்து 30 கிலோ தங்கம் மற்றும் ரூ 1.5 கோடி பணத்தை சிபிஐ போலீசார்கைப்பற்றினர் .  ஜனார்த்தன ரெட்டியின்  சுரங்க  நிர்வாக
இயக்குனர் சீனுவாச ரெட்டியின் வீட்டில் ரூ 3 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.

ஆயுதங்கள் கடத்தத் தயாராக  இருந்த ஜனார்த்தன ரெட்டியின் ஹெலிகாப்டர்களும் கைப்பற்றப்பட்டதாக  தெரிகிறது.

கைது செய்யப்பட்ட இருவரும் ஹைதராபாத் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்படுவார்கள். இருவரையும் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க  சிபிஐ தரப்பில்
திட்டமிடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில லோகயுக்தா அமைப்பு  சட்டவிரோத சுரங்க முறைகேடுகள் குறித்து  வெளியிட்ட  அறிக்கையில்   சட்டவிரோத சுரங்கத் தொழிலில்  ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி இருவருக்கும் தொடர்பு இருப்பதாக புகார் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  சிபிஐ அதிகாரிகள்  ஜனார்த்தன் ரெட்டியின் பெல்லாரி வீட்டில் இன்று  அதிரடி சோதனை நடத்தி  ஜனார்த்தன்
ரெட்டி,  டிவி சீனுவாச ரெட்டி இருவரையும்  கைது செய்தனர்.

14 பேர் பலி

                                                 

                                                                   14 பேர் பலி.

புதுவையிலிருந்து மதுரைநோக்கி தனியார் பஸ் ஒன்று பயணிகளுடன்
சென்று கொண்டிருந்தது.

அந்த பஸ் துவரங்குறிச்சியை அடுத்த கோவில் பட்டி
என்ற இடத்தில் பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்தபோது எதிர்
திசையில் வந்த அரசு போக்குவரத்துக்கழக பஸ்மீது நேருக்கு நேர்
 மோதியது.

  இந்த சம்பவத்தில்  இரண்டு பஸ்களிலும் பயணித்த மூன்று
குழந்தைகள் உள்ளிட்ட14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
  50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

திருப்பூர் மாவட்ட நிர்வாகம்...குமுறுகிறார் எம்.எல்.ஏ.,

                                                                      
                         திருப்பூர் மாவட்ட நிர்வாகம்...குமுறுகிறார் எம்.எல்.ஏ.,

  திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவிக்காமல் உள்ளதால் திருப்பூர் மாவட்டத்தில்
<உள்ள எனது தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் என்ன நடக்கிறது என தெரியாமல்
உள்ளது என வருதப்படுகிறார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.

    தமிழ்நாட்டில் உள்ள அவிநாசி தொகுதியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வாக
இருப்பவர் கருப்பசாமி. இவரது தொகுதியில் திருப்பூர் மாவட்டத்தில் 33 கிராமங்கள்
உள்ளன.
  இந்த கிராமங்களில் அரசு நலத்திட்ட <உதவிகள், மற்றும் பணிகள் குறித்த எந்த
தகவலையும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தனக்கு தெரிவிப்பதில்லை என குமுறுகிறார்.
முதல்வர் எங்களை மக்களிடம் நல்லபெயர் எடுக்கவேண்டும் எனக்கூறியுள்ளார்.
ஆனால் அரசு அதிகாரிகளால் அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுகிறது. என்றார்.

கனிமொழி... விக்கிலீக்ஸ்..

                                                                  

                                           

                                            கனிமொழி...   விக்கிலீக்ஸ்..

   அமெரிக்க     முன்னாள்        துணைத் தூதர் டென்னிஸ் ஹாப்பர், அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு

அனுப்பிய கேபிளில் தெரிவித்துள்ளதாக.           விக்கிலீக்ஸ் கூறியிருப்பதாவது:

கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில்

 துணைத் தூதராக இருந்த டென்னிஸ் ஹாப்பர் அனுப்பிய கேபிளில், மூத்த காங்கிரஸ்

உறுப்பினர் சிவப்பிரகாசம் என்பவர்  தெரிவித் ததாக   தகவல்களை அமெரிக்க

  வெளியுறவுத்துறைக்கு கேபிள் அனுப்பியுள்ளார்.

  பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங் சற்றும் பொருத்தமில்லாதவர்.  மோசமான பிரதமராக இருப்பார்.

 அவர் அடிப்படையில் அவர்   ஒரு அதிகாரி.

விலைவாசிப் பிரச்சினையால் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்,

 திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார். அப்போது, பிரதமர் பதவிக்கு போட்டியிட

 தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அர்ஜூன் சிங், கருணாநிதியைக் கேட்டுக் கொண்டார்.

 அதற்கு கருணாநிதி ஆதரவு தெரிவிக்கவில்லை. மாறாக சோனியா காந்தி

 பிரதமராக விரும்புவதாக கூறினார்.

 கனிமொழியை அரசியலுக்குக் கொண்டு வருவதில் கருணாநிதிக்கு விருப்பம் இல்லை .

 ராஜாத்தி அம்மாளின்  வற்புறுத்தல் காரணமாகவே கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி சீட்டை

 கருணாநிதி கனிமொழிக்கு கொடுத்தார்.

 தயாளு அம்மாளின்  மகன்களான அழகிரி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் செல்வாக்கோடு இருப்பதைப்

 பொறுக்க முடியாமல்தான் கனிமொழியை அரசியலுக்கு கொண்டு வர ராஜாத்தி அம்மாள்

 துடித்ததாகவும் சிவப்பிரகாசம் தெரிவித்ததாக ஹாப்பர் தனது கேபிளில்அனுப்பி யிருப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

கர்நாடகா பா.ஜ.க எம்.எல்.ஏ.,ராஜினமா!

                                                                            

                                கர்நாடகா பா.ஜ.க எம்.எல்.ஏ.,ராஜினமா!

கர்நாடாக பா.ஜ.கவில் மீண்டும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. லோக்ஆயுக்தாவின்
அறிக்கையில் அப்போதைய முதல்வர் எடியூரப்பாவின் பெயர் இருப்பதாகவும்,
சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கம் தோண்டிய சர்ச்சையில் எடியூரப்பாவின்
பங்கும் உள்ளதாக கர்நாடகாவில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன.
இதன் விளைவாக எடியூரப்பா பதவி விலகினார்.
 
  இதனை அடுத்து கர்நாடகா முதல்வர் நாற்காலியில் சதானந்த கவுடா
 அமர்ந்தார். இவரது அமைச்சரவையில் முன்பு எடியூரப்பா முதல்வராக இருந்த
ரெட்டி சகோதரர்களுக்கு பதவி கிடைக்கவில்லை. தற்போது ரெட்டி சகோதரர்களிவன்
ஆதரவாளராக கருதப்படும் எம்.எல்.ஏ, ராமுலு தனது பதவியை ராஜினமா செய்துள்ளார்.

      அவர் தனிக்கட்சி துவங்க இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

ராஜீவ் காந்தி படுகொலைசந்தேகங்கள்..

                                                                     

ராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம் தொடர்பாக திருச்சி வேலுச்சாமி குமுதம் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில் இதுவரை வெளிவராத இரகசியங்கள் பலதை வெளியிட்டுள்ளார்.

ராஜீவ்காந்தியைக் கொல்வதற்கு வெடிகுண்டு கட்டிச் சென்ற பெண் என்று கூறப்படும் தனுவின் நெற்றியில் உள்ள பொட்டை முக்கிய தடயமாக அவர் முன் வைத்தார்.

வெடிகுண்டு வெடிப்பதற்கு சுமார் 15 நிமிடங்கள் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சிவராசனுக்கு அருகில் மாலையுடன் நிற்கும் தனுவின் நெற்றியில் பொட்டு இல்லை.

வெடிகுண்டு வெடித்து சிதறிக்கிடக்கும் தனுவின் சிதறிய உடலின் நெற்றியில் பொட்டு காணப்படுகிறது. இரண்டு படங்களையும் அவர் பகிரங்கமாகக் காட்டினார். பின் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.

பொட்டு வைத்தபடி குண்டைக் காவிச்சென்ற தனுவின் நெற்றியில் இருந்த பொட்டு குண்டு வெடிப்பில் அழிந்துவிட்டதென்றால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் இறந்த பின்னர் அவருடைய நெற்றியில் பொட்டு வந்ததென்றால் அதில் என்ன நியாயம் இருக்கப்போகிறது..?

கொலையாளி ஒரு தமிழ் பெண்தான் என்று காட்டுவதற்காக அந்தப் பொட்டு அணிவிக்கப்பட்டதா..?

இல்லை சிதறிக் கிடக்கும் உடலம் தனுவின் உடலம் இல்லாமல் வேறொரு பெண்ணின் உடலமா..?

இல்லை புகைப்படம் எடுத்த பின் தனு பொட்டு வைத்தாரா..? அப்படி வைத்தால் அந்த நேரம் அவருக்கு எங்கிருந்து வந்தது பொட்டு..?

மேலும்…

சம்பவம் நடைபெற்றபோது ஒரு ஒளிப்படம் எடுக்கப்பட்டதாகவும், அதை இன்றுவரை உள்துறை செயலராக இருந்த கே.ஆர்.நாராயணன் விசாரணைக்காக ஒப்படைக்கவில்லை என்றும், இந்த வழக்கின் மர்மமே அதில்தான் புதைந்துள்ளதாகவும், சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மேலும் பல கேள்விகளை அவர் எழுப்பினார்.

கேள்வி 01. அன்று ராஜீவ்காந்தி விசாரணைகளுக்கு பொறுப்பாக இருந்த ப.சிதம்பரம் அந்த விசாரணை அறிக்கைகள் முற்றாக தொலைந்துவிட்டதாகக் கூறினார்.. இது சரியா..?

கேள்வி 02. கம்யூனிஸ்டான தா. பாண்டியன் அந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர். அவர் ப.சிதம்பரத்திடம் இதுபற்றி கேட்டபோது மழுப்பலான பதிலையே கொடுத்துள்ளார் ஏன் மழுப்பினார்..?

கேள்வி 03. அரசியலை விட்டு முற்றாக ஒதுங்குவதாகக் கூறிய நரசிம்மராவ் ராஜிவ் இறந்ததும் எப்படி மறுபடியும் பிரதமரானார்..?

கேள்வி 04. கொலை நடைபெற்று விசாரணைகள் தொடங்கவில்லை அதற்குள் புலிகளே காரணம் என்று சுப்பிரமணியசாமி முடிவுகட்டி சொன்னது எப்படி..?

கேள்வி 05. சாதாரண பஞ்சாயத்து தலைவராகக்கூட இல்லாத சுப்பிரமணியசுவாமிக்கு இன்றுகூட பூனைப்படையின் பாதுகாவல் எதற்கு..?

கேள்வி 06. ராஜிவின் சொத்துக்களையும் அரசியல் பலத்தையும் அனுபவிக்கும் முக்கியமான நால்வர் இந்த விவகாரத்தில் தொடர் மௌனம் காப்பது எதற்கு..?

கேள்வி 07. இந்த விவகாரத்தின் முக்கியமான சந்தேக நபர்கள் எல்லாம் உயர்ந்த பட்டம், பதவிகளில் தொடர்ந்து நீடிப்பது எப்படி..?

கேள்வி 08. சந்திராசாமிதான் அன்றைய வெடிகுண்டு பெல்டை பூசை செய்து சிவராசனிடம் எடுத்துக் கொடுத்தார் என்ற விவகாரத்தை சொன்ன நபரை கார்த்திகேயன் ஏன் தாக்கி பற்களை உடைத்தார்?

கேள்வி 09. கார்த்திகேயன் புலிகளை மட்டும் குற்றவாளிகளாகக் காட்டுவதற்கு மேல் விசாரணைகளை முன் நகரவிடாது ஏன் தடுத்தார்..?

மேற்கண்ட ஒன்பது கேள்விகளும் மேலும் பல புதிய கேள்விகளுக்கு தூண்டுதலாக அமைகின்றன. நேற்று முன்தினம் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டபோது பேரறிவாளன் உட்பட மூவருக்கும் தூக்குத்தண்டனை வழங்கலாம் என்ற முடிவை மு.கருணாநிதியே எடுத்தார்…என்றார். அப்படியானால் அந்த முடிவை அவர் எப்படி எடுத்தார். அவருக்கு பின்னால் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இருந்தாரா..?

கேள்வி 10. விடுதலைப்புலிகள் இதில் எப்படி மாட்டுப்பட்டார்கள்..? புதுமாத்தளன் இறுதி நேரத்திலாவது இந்த உண்மையை விடுவிக்காமல் அவர்கள் ஆடுகளத்தில் இறுகிய மௌனமாக இருநத்து ஏன்..?

கேள்வி 10. தென்னாசிய அரசியலில் என்ன நடக்கிறது.. என்ன நடந்தது.. ஈழத் தமிழர்கள் இதில் ஏன் பகடைக்காய்கள் ஆனார்கள்..?   

  நன்றி எதிரி

சென்னைமேயர் பதவிக்குமுன்னாள் அமைச்சர் விருப்பம்.

சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் விருப்பம். தமிழக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தங்களை தற்போது தமிழக கட்சிகள் செய்துவருகின்றன. உள்ளாட்சி தேர்தலில் தற்போது தி.மு.க வசம் இருக்கும் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். பா.ம.க வில் இருந்து வரும் அவர் சென்னை மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு போட்டியிடவிண்ணப்பித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்து கட்சியின் தலைவர் ஜி.கே. மணி இது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என கூறியுள்ளார்.

பக்கங்கள்