வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 8 நவம்பர், 2013

கர்ப்ப காலத்தில் கடைபிடிக்கவேண்டியவை எவை? ஈரோட்டில் பதினெட்டு நாள் பயிற்சி வகுப்பு


.
 ஈரோட்டில்  கர்ப்பிணி பெண்களுக்கு
கர்ப்ப காலத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிப்பது குறித்த செவிலியர்களுக்கான பயிற்சி நடந்து வருகிறது.

ஈரோடு மாவட்ட தலைமை மருத்துவமனையில்  மாவட்டத்தில் செயல்பட்டுவரும் துணை  கிராம சுகாதார நிலையங்களின் செவிலியர்கள் 311 பேருக்கு இயற்கை மருத்துவம், கர்ப்ப காலத்தில் யோகா என்ற தலைப்பில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகிறது.
கிராமபுற கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக செவிலியர்களுக்கு தரப்படும் இந்த பயிற்சி மொத்தம் 18 நாட்களுக்கு 6 கட்டமாக வழங்கப்படுகிறது.

கர்ப்பிணிபெண்களுக்கு கர்ப்பகாலத்தின்போது ஏற்படும் மன அழுத்தம் நீங்கவும், சுகப்பிரசவம் ஏற்படவும், பேறு காலத்திற்கு முன்னும் பின்னும் எற்படும் சிக்கல்களை தவிர்க்கும் வகையி<லும்  எதிர்மறை சிந்தனைகள் மற்றும் பயம் ஆகியவற்றை போக்கும் விதமாகவும், கர்ப்பமாக இருக்கும்போது சத்தான உணவுகளை தயார் செய்வது எப்படி, உண்ணவேண்டிய உணவின் முறை, அளவு, தவிர்க்கவேண்டிய உணவுகள் போன்றவை குறித்த்தும் இந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது.

பயிற்சியை யோகா உதவி மருத்துவர் திருமுருகன் அளிக்கிறார். சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மணிவண்ணன், ஆகியோர்  பயிற்சி வகுப்பினை நடத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்