வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

8 வார காலத்துக்குதடை...

                                                                           

                                                        தடை....


   ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டணை விதிக்கப்பட்ட

பேரறிவாளன்,முருகன், சாந்தன்

 ஆகியோருக்கு தண்டணையை 8 வார காலத்துக்கு நிறுத்தி வைக்கவேண்டும் என சென்னை

உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

     பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் கடந்த 21 ஆண்டுகளாக வேலூர் சிறையில் உள்ளனர்.

 தூக்கு தண்டணை விதிக்கப்பட்ட இவர்கள் தங்களுக்கு கருணைகாட்டவேண்டும் எனக்கோரி

 குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பியிருந்தனர்.

   அந்த மனுவை தற்போதைய குடியரசு தலைவர் பிரதீபாபாட்டில் நிராகரித்தார்.

 இதனை அடுத்து பேரறிவாளன், சாந்தன்,முருகன் ஆகியோருக்கு செப்டம்பர் முதல்வாரத்தில்

தூக்கு தண்டணையை நிறைவேற்றுவதற்கான ஆயத்தபணி நடந்தது.

   தூக்கு தண்டணையை ரத்துசெய்யக்கோரி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம்,

 ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், தீக்குளிப்பு சம்பவங்கள் நடந்துவந்தன.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தண்டணைக்கான தடைகேட்டு

 மூத்தவழக்கறிஞர் ராம்ஜெத்மலானி தலைமையிலான வழக்கறிஞர் குழு நேற்று வாதாடியது.

 இவர்களின் வாதத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள்

 நாகப்பன்,சத்யநாராயணா ஆகியோர் தூக்கு தண்டணையை

நிறைவேற்றுவதற்கு 8 வார இடைக்கால தடை வழங்கினர்.

இதனை அடுத்து தமிழகம் முழுவதும் மக்களும் தமிழ்ஆர்வலர்களும்,

பல்வேறு தரப்பினரும் பட்டாசுகள் கொளுத்தியும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்