வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 5 மே, 2014

ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அழைப்பு.


ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆர்.என்.புதூரில்  காவலர் குடியிருப்பு அருகில்  அரசு குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது.
இந்த காப்பகத்தில் 25 குழந்தைகள் தங்கி கல்வி பயிலும் வகையில் அரசு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

6வயது முதல் 10 வயது வரை உள்ள சிறுவர்கள் மற்றும்6 வயது முதல் 21 வரையுள்ள சிறுமிகள் வரை தாய் தந்தை இல்லாத அல்லது பெற்றோரே இல்லாத குழந்தைகள்  இந்த காப்பகத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

இந்த காப்பகத்துக்கு அருகிலேயே 10 அடி தூரத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது.

இங்கு தங்கி பயிலும் மாணவியர் +2 ல் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் அரசே  கல்லூரி செலவை ஏற்று உயர்கல்வி அளிக்கிறது. பொதுமக்கள் இந்த இல்லத்தில் குழந்தைகளை சேர்த்து பயன்பெறலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் மதுமதி அறிவித்துள்ளார்.

பக்கங்கள்