வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

மொடக்குறிச்சி தொகுதியில்உண்ணாவிரதம்



            மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டணையைக்கண்டித்து

திங்கள், 29 செப்டம்பர், 2014

சிலோன்காலனி அ.தி.மு.க தொண்டர் மரணம்

                                                                  



ரோடு மாவட்டம் சிவகிரி அருகே அ.தி.மு.க தொண்டர் அதிர்ச்சியால் மரணம் அடைந்தார். ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள சிலோன்காலனியை சேர்ந்தவர் கணேசன்(58) கூலி தொழிலாளி. இவர் அ.தி.மு.க வில் தீவிர தொண்டராக இருந்தவர்.

       கடந்த 27 ம்தேதி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் அவருக்கு பெங்களூரு தனி நீதி மன்றம் சிறை தண்டணை வழங்கி தீர்ப்பளித்ததினால் கடந்த மூன்று நாட்களாக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க வினர் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

      அந்த வகையில் சிவகிரியிலும் கடை அடைப்பு ஆர்ப்பாட்டம் சாலை மறியல், கொடும்பாவி எரிப்பு என பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களில் பங்கு கொண்ட கணேசன். தொடர்ந்து மன உளைச்சலில் இருந்துள்ளார்.

      தீக்குளிக்கவும் முயன்றுள்ளார். இதனை அவரது பக்கத்து வீட்டினர் தடுத்துவிட்டனர். இந்த நிலையில்  இன்று அதிகாலை கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு  மரணம் அடைந்துள்ளார்.

 
                                     
                                            
     அந்த கடிதத்தில்  உங்களை கைது செய்த காரணத்தால் நான் என் உயிரை தியாகம் செய்கிறேன். உங்களுக்கு சிறைவாசம் நான்கு ஆண்டுகள் என கோரினா<லும் உங்களுக்காக என் முழு சிறையை ஏற்று என் உயிரை தியாகம் செய்கிறேன் என எழுதி வைத்துள்ளார்.

     இறந்த கணேசனது  மனைவி இல்லை. பிரபாகரன், கோபாலகிருஷ்ணன் என இரு மகன்கள் உள்ளனர். கணேசனது இறுதி சடங்கில் அ.தி.மு,க சார்பில் சிவகிரி பேரூராட்சி தலைவர் பரமு, கொடுமுடி ஒன்றிய செயலாளர் கலைமணி, இளைஞரணி இணை செயலாளர் பிரபாகரன், அ.தி.மு.க பிரமுகர் ரவி, உள்ளிட்டோர் கலந்துகொண்டு அவரது உடலுக்கு  மரியாதை செய்தனர்.



பக்கங்கள்