வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 3 செப்டம்பர், 2011

அண்ணாபிறந்தநாளில் விடுதலை.

                                                                  

                    அண்ணாபிறந்தநாளில் விடுதலை..வைகோ கோரிக்கை..

   ஆண்டுகள் பல கழிந்த பின்னும் சிறையில் இருப்போரை அரசு விடுதலை
செய்யவேண்டும் என தமிழக அரசுக்கு ம.தி.மு.க வின் பொதுச்செயலாளர் வை.கோ
வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
  அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:   ஆயுள் தண்டணை அடைந்தோர்,
பத்து ஆண்டுகள் தண்டிக்கப்பட்டோர், சில குற்றப்பிரிவுகளில் தண்டணை பெற்றதை
காரணம் காட்டி விடுவிக்கப்படாமலே சிறையில் உள்ளனர்.

  சிறைவாசிகளில் பலர் 15 ஆண்டுகள் கழிந்த பின்னும் சிறையில் வாடுகின்றனர்.
இதனால் அந்த சிறைவாசிகளின் குடும்பங்கள் சின்னாபின்னமாகி, மரணத்தை
விட கொடுமையான மனத்துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

  14 ஆண்டுகளுக்கு மேல் கைதிகள்சிறைவாசத்தை நீட்டிக்கவேண்டும் என
 இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் திருத்தத்தை நாடாளுமன்றத்தில்
கொண்டுவந்தபோது அதனை கடுமையாக எதிர்த்து உரையாற்றினேன்.

குற்றப்பிரிவுகளை காட்டி  விடுவிக்கப்படாத சிறைவாசிகளை பொதுமன்னிப்பில்
விடுவிக்க அரசு முன்வரவேண்டும்.
 பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல்
சிறையில் உள்ளவர்களை விடுவிக்கவேண்டும்.
பரோல் விடுப்பில் சென்றவர்கள் குறிப்பிட்டநாளில் திரும்பாததை காரணம் காட்டி
ஒருநாள் இருநாள் தாமதம் எனக்கூறி அவர்கள் விடுதலை பெற முடியாத இன்னலுக்கு
ஆளாக்காமல் மனிதாபிமானத்தோடு விடுதலை செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும்.

நாடு கொள்ளையடிக்கப்படுகிறது.

                                                               

              ஊழல் வாதிகளால்நாடு கொள்ளையடிக்கப்படுகிறது.


தற்போது நாடு ஊழல் வாதிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது.

 இந்த கொள்ளை முடிவுக்கு வந்தால்தான் நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்.

 நான் டெல்லியில் உண்ணா விரதம் இருந்த போது அதை சீர்குலைக்க

 மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பல வழிகளில் தொல்லை கொடுத்தார்.

அவர் ஒரு நயவஞ்சகர்.

திகார் ஜெயிலில் நான் இருந்த போது ஜெயில் டி.ஐ.ஜி.யால் எந்த நடவடிக்கையும்

எடுக்க முடியவில்லை. உள்துறை அமைச்சகம் தான் அவருக்கு உத்தரவுகள் பிறப்பித்தது.

 தற்போதுதான் ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடங்கி இருக்கிறோம்.

நமது எண்ணம் நிறைவேற இன்னும் 15 ஆண்டுகள் ஆகும். அதுவரை போராடுவோம்.

 மக்களிடையே சமுக மற்றும் பொருளாதார வேறுபாடு நிலவுகிறது.

டாக்டர் அம்பேத்கரின் கனவு இன்னும் நிறைவேறவில்லை.

ஏழைகளுக்கு நீதி கிடைக்க போராடுவேன்:- அன்னா ஹசாரே

இஸ்லாம் நாட்டு கரன்சியில் இந்து கடவுள் உருவம்.

                                                                      

                       இஸ்லாம் நாட்டு கரன்சியில் இந்து கடவுள் உருவம்.


                முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடான இந்தோனேசியாவில்

இந்துக்கடவுளானா விநாயகரின் உருவம் பொறித்த கரன்சி நோட்டு

வெளியிடப்பட்டுள்ளது.

                இது நடந்தது  இந்தோனேசியா பொருளாதார நெருக்கடியில்

சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டிருந்தபோது நடந்துள்ளது. நெருக்கடியில்

இருந்து தப்பிப்பதற்காக விநாயகரை துணைக்கு அழைத்து கரன்சி

வெளியிடப்பட்டபோது அந்த நாட்டை சுகர்தோ ஆண்டுகொண்டிருந்தார்....

செப்11 போராட்டத்தில் அன்னாஹசாரே..

                                                                     

                                      செப்11  போராட்டத்தில் அன்னாஹசாரே..

தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி கூடங்குளம்
அணு உலைஎதிர்ப்பு இயக்கம் போராடி வருகிறது.

  வருகிற 11 ம்தேதி கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி இந்த இயக்கம்
உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து இந்த இயக்கத்தின் நிர்வாகி உதயகுமார் மற்றும் அகில இந்திய மீனவர்கள்
சங்கத்தின் தேசியத்தலைவர் கோமஸ் கூறியுள்ளதாவது: பொதுமக்களுக்கு பல்வேறு
பாதிப்புகளை கூடங்குளத்தில் துவக்கப்போகும் அணு உலை ஏற்படுத்தும் அபாயம்
உள்ளது. இந்த அணு உலையை மூடவேண்டும்.

   நாங்கள் நடத்துகின்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் சமூகசேவகர்கள்
 அன்னாஹசாரே, அருந்ததிராய், மேதாபட்கர் ஆகியோரை பங்கு கொள்ள செய்ய
முடிவு செய்துள்ளோம் என்றனர்.

பரம ஏழையானார் பாதுகாப்பு துறை அமைச்சர்...

                                                                     

                             பரம ஏழையானார் பாதுகாப்பு துறை அமைச்சர்...

மத்திய அமைச்சர்களின் சொத்து விவரத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
   அதில் டாப்பில் இருக்கிறார் மத்திய நகர் புற அமைச்சர் கமல்நாத் இவரது
சொத்து மதிப்பு ரூ263 கோடிகள்.
நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜியின் சொத்து மதிப்பு1.8 கோடி.
  கபில் சிபில் சொத்து மதிப்பு 30 கோடி.
 மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவாரின் சொத்து மதிப்புரூ12 கோடி.
 பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளிதியோராவின் சொத்து மதிப்பு ரூ15.2 கோடி.
பிரதமர் மன்மோகன் சிங்கின் சொத்து மதிப்பு ரூ 4.8 கோடி
    அது சரி தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களின் சொத்துக்களின்
மதிப்பு என்ன என்பது நீங்கள் கேட்பது புரிகிறது.
இதோ...மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் சொத்து மதிப்பு ரூ11கோடி.
இவரது மனைவி திருமதி நளினி சிதம்பரத்தின் சொத்து மதிப்பு 12.8 கோடி.
 மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க அழகிரியின் சொத்து மதிப்பு ரூ30 கோடி.
 இந்த பட்டியலில் குறைந்த சொத்துக்களை வைத்திருப்பவர் யார் என்கிறீர்களா?
அட நம்புங்கள் நம்ம நாட்டோட பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனியின்
சொத்து மதிப்புதாங்க ரொம்ப கொறைச்சலானது அட நம்புங்க அவருக்கு
1.8 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் மட்டும் தாங்க இருக்குது.. இது நான்
சொன்னதில்லைங்க  நம்ம நாட்டோடு பிரதமர் அலுவலக இணையம்
சொல்லுதுங்க.. அது சரி மத்த அமைச்சர்கள் சொத்து விபரத்தை காணலையே
என்கிறீர்களா?  இன்னும் 18 அமைச்சர்கள் தங்கள் சொத்து விபரத்தை இன்னும்
தரலீங்க.. ஜெய்ஹிந்த்.

துவக்க விழா...


                                                        துவக்க விழா...

   
  சிவகிரியில் உள்ள ஆயுள்காப்பீட்டுக்கழக அலுவலகத்தில்

 ஆயுள் காப்பீட்டுக்கழகம் துவக்கப்பட்டு 55 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு விழா நடந்தது.
  
விழாவுக்கு  ஆயுள்காப்பீட்டுக்கழகத்தின்  சிவகிரி கிளை மேலாளர் ரபியுதீன்

 தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக  கனரா வங்கி மேலாளர் 

சந்திரசேகர்,   சிவகிரி  காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயசுதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
  
 விழாவில் குத்துவிளக்கினை சிறப்பு விருந்தினர்கள் ஜெயசுதா, சந்திரசேகர்,மற்றும்

 அலுவலக பணியாளர் மோகனவடிவேல், வளர்ச்சி அதிகாரி செந்தில்நாயகம்,

 முகவர்கள், வாடிக்கையாளர்கள்  உள்ளிட்டோர் ஏற்றி வைத்தனர்.
 
 முன்னதாக  உதவி நிர்வாக அதிகாரி கோவிந்தராஜ் வரவேற்றார்.

 பின்னர்  மற்றும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

 முடிவில் வளர்ச்சி  அதிகாரி ஜாகிர்ஹீசைன் நன்றி கூறினார்.

அரங்கேற்றத்தில் உயிரை விட்டார் தந்தை...

                                                            

                         அரங்கேற்றத்தில் உயிரை விட்டார் தந்தை...

 கனடாவில் வசிப்பவர் கதிர்காந்தன். இவரது மகன் துஷ்யந்தன், மகள் சிரோமி
இவர்கள் இருவரும் மிருதங்கம் மற்றும் பரதநாட்டியம் கற்றுவந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடாவில் உள்ள புராகிரஸ் வீதியில் உள்ள
ஒரு கலையரங்கில் இவர்களது அரங்கேற்றம் நடந்தது.

   முதலில் துஷ்யந்தனின் மிருதங்க அரங்கேற்றமும் அதனை அடுத்து சிரோமியின்
பரதநாட்டிய அரங்கேற்றமும் நடைபெறுவதாக இருந்தது.

  அட்டவணைப்படி துஷ்யந்தனின் மிருதங்க அரங்கேற்றம் முடிந்தது.
அந்த அரங்கேற்றத்தில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு நன்றி சொல்லிக்
கொண்டிருந்தார்.

சில நிமிடங்களில் மகள் சிரோமியின் பரதநாட்டிய அரங்கேற்றத்தை காணும்
ஆவலோடு உற்சாகம் பீறிட்டபடி இருந்தது அவர் முகத்தில். அந்த நேரத்தில்
நெஞ்சை பிடித்தபடி சாய்ந்தார். கனப்பொழுதில் அவரது உயிர் பிறிந்தது.
மகளின் அரங்கேற்றத்தை காணமுடியாதபடி அவர் உயிர் பிறிந்தது.
அரங்கே சோகத்தில் மிதந்தது.

அமெரிக்கா வரவேற்பு...

                                                                         
                                                     அமெரிக்கா வரவேற்பு...
                                                        
   
   இலங்கையில் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை

விடுவிக்கவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. இது குறித்து அமெரிக்க

அரசின் பேச்சாளர் மார்க் பேசியதாவது:  இலங்கையில் அவசரகால சட்டம்

விலக்கிகொள்ளப்படுவதாக தகவல் வந்துள்ளது.

இது வரவேற்க தக்கது.

இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்

களின் மீது  குற்றப்பத்திரிக்கைகளை அரசு தாக்கல் செய்யவேண்டும்.

அப்படி செய்யாவிட்டால் அவர்களை விடுதலை செய்யவேண்டும்.

   பழைய சட்டம் நீக்கப்பட்டு தற்போது புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது

அந்த சட்டங்களை அந்நாட்டு அரசு எவ்வாறு கையாள்கிறது என்பதினை

அமெரிக்கா உன்னிப்புடன் கவனித்து வருகிறது  என்றார்.

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

எல்லையில் மோதல்....

                                    

                                                      
                   எல்லையில் மோதல்....


  இந்திய எல்லையில்  கடந்த சில மாதங்களாக

 இருதரப்புக்கும்துப்பாக்கி சண்டை ஏதும் நடைபெறாமல் அமைதியாக இருந்தது.
    
    தற்போது இந்திய எல்லைப்பகுதியான பாலா பகுதியில் இந்திய ராணுவத்தின்

தேடுதல் வேட்டை நடந்தபோது, அடையாளம் காணமுடியாத ஒரு தீவிரவாதி

கொல்லப்பட்டிருக்கிறார். இந்த மோதலின் போது இரு இந்திய ராணுவ வீரர்கள்

காயம் அடைந்துள்ளனர்.

    காஷ்மீரின் கேரன் பகுதியில்  இரு நாட்டு ராணுவமும்

 மோதிக்கொண்டதில்பாகிஸ்தான் தரப்பைச்சேர்ந்த 3 வீரர்களும்,

ஒரு  இந்திய அதிகாரியும் பலியாகினர்.

சபாநாயகரின் செயலாளர் வீடுகளில் சி.பி.ஐ சோதனை.


                                                                   
                                சபாநாயகரின் செயலாளர் வீடுகளில் சி.பி.ஐ சோதனை.

இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமாரின் செயலாளராக கடந்த ஆறு
மாதங்களுக்கு முன் பணி ஏற்றவர் ஏ.பி.பதக். இவர் மீது பல்வேறு ஊழல்
புகார்கள் ஊழல் கண்காணிப்பு ஆணையாளருக்கு சென்றதை ஒட்டி
லக்னோ, மற்றும், டில்லியில் உள்ள பதக்கின் வீடுகளில் சி.பி.ஐ
சோதனை நடத்தியது.

பக்கங்கள்