வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபரில்?.

                                                               

                                                      அக்டோபரில்?. 
                                                           
தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான
அறிகுறிகள்
தெரிகின்றன.

   தமிழக சட்டசபை தற்போது நடந்துவருகிறது. இந்த கூட்டத்தொடரின் முடிவில்
தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. தற்போது நடைபெற
உள்ள தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சிகளுக்கான
தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்காமல் மக்களே நேரடியாக
தேர்ந்தெடுக்க உள்ளதாக தெரிகிறது.

   பேரூராட்சிகளில் வசிப்பவர்கள் தங்களது பஞ்சாயத்து தலைவர்களுக்கு
ஒரு ஓட்டும், கவுன்சிலர்களுக்கு ஒரு ஓட்டும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரை
தேர்ந்தெடுக்க ஒரு ஓட்டும், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலருக்கு ஒரு ஓட்டு என
மொத்தம் நான்கு ஓட்டுக்கள் போடும்படி இருக்கும், ஓட்டுச்சீட்டு முறையில்
தேர்தல் நடைபெறும்.

   அக்டோபரில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதனை நடத்ததேவையான
 ஆயத்தங்களை தேர்தல்ஆணையம் செய்துவருகிறது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்