வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 4 அக்டோபர், 2021

எந்தவொரு தியாகியையும் வைத்து அரசியல் செய்யும் கட்சி கிடையாது.



 ஈரோடு மாவட்டம் சிவகிரியில் மறைந்த சுதந்திரபோராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 118வது பிறந்தநாள் விழா நடந்தது.
இதில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டு  சிவகிரியில் உள்ள திருப்பூர் குமரனின் சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல தமிழக பாரதியஜனதா கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை மற்றும் மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ., டாக்டர் சரஸ்வதி ஆகியோர் கலந்துகொண்டு குமரனின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அண்ணாமலை பேசியதாவது:  எங்களை பொறுத்தவரை  ஒருவரை சாதியின்மூலமாக அடையாளப்படுத்தி அதன்மூலமாக வாக்குவருவாயை பார்க்ககூடிய கட்சி பா.ஜ.க கிடையாது.நாங்கள் தேசிய சித்தாந்திற்காக வேலை செய்கிறோம். 
தலைவர்களின் பிறந்தநாளில் ,நினைவுநாட்களில் அவர்களுக்கு மாலை அணிவித்துவித்தபின்னர் அவர்களை மறந்துவிடுகிறோம்.
அவர்களின் தியாகங்களை புரிந்துகொண்டு அதனை இளையசமுதாயத்துக்கு எடுத்து செல்லவேண்டும்.
 தமிழக பா.ஜ.க எந்தவொரு தியாகியையும் வைத்து அரசியல் செய்யும் கட்சி கிடையாது.
ஈரோட்டு மண்ணில் ஏதொவொன்று இருக்கிறது.இந்த மண்ணில் தேசியம் , ஆன்மீகம் கலந்துகிடக்கிறது.
இரண்டுநாட்களுக்கு முன்னர் நான் சென்னையில் உள்ள கர்மவீரர் காமராஜர் ஐயா சமாதிக்கு சென்றிருந்தேன். 
ஒரு பெரு மனிதரின் சமாதியை மோசமாக வைத்திருக்கிறார்கள்.அந்த சமாதி சிதிலமாக உள்ளது. 
ஆச்சர்யம் என்னவென்றால் காமராஜரின் சமாதி்க்கு இதுவரை சோனியாகாந்தியோ, ராகுல்காந்தியோ வந்தது கிடையாது.
ஓட்டுமட்டும்தான் ஒரு தலைவரை வைத்து வாங்கவேண்டும்,ஆனால் அந்த தலைவருக்கு கொடுக்கவேண்டிய கௌரவத்தை கொடுக்க கட்சிகள் இல்லாதபோது பா.ஜக அந்த கௌரவத்தை தரும்.
காமராஜர் ஒரு கட்சியின் சொத்தா? அவர் தமிழர்களின் சொத்து,அதனால்தான் பா.ஜ.க சார்பில் தமிழக முதல்வரிடம் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறோம்.
நீங்கள்  மூன்று, நான்கு  மாதங்களில் நிதி ஒதுக்கி காமராஜர் சமாதியை சரிசெய்யவில்லை என்றால் பா.ஜ.க இதனை மக்கள் இயக்கமாக மாற்றி 2022 அக்டோபர் 2 நாங்கள் அவருக்கு மணிமண்டபத்தை கட்டுவோம் என்று சொல்லியிருக்கிறோம்.
எங்களுக்கு பாரதிய ஜனதா கட்சி பாரதிய ஜனதா கட்சியாக ஆட்சியில் அமரவேண்டும் என்றிருக்கிறோம்.இதில் நாங்கள் மிகத்தெளிவாக இருக்கிறோம்.
  எங்களுடைய சித்தாந்தத்தையும் கொள்கையையும் இரண்டு கண்களாக வைத்து தேசியத்தையும் ஆன்மீகத்தையும் எந்தவொரு காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்காமல்  ஆட்சியில் அமரவேண்டும் என்றிருக்கிறோம்.
 மற்ற அரசியல் கட்சிகள் செய்த தவறை செய்யக்கூடாது என்றிருக்கிறோம்.
 அதனால் உங்களுக்கு சமுதாய புரட்சி வேண்டும் என்றிருந்தால் நிச்சயமாக ஒரு அரசியல் கட்சிமூலமாகத்தான் அது வேகமாக நடக்கும்.
 ஆகவே பா.ஜ.க தேசப்பணியை செய்வதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்று பேசினார்.

பக்கங்கள்