வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 23 செப்டம்பர், 2013

நரேந்திரமோடிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அறிவுரை.



        
 
                                                                                                                

     குஜராத் முதலமைச்சர் பதவியில் வேறு ஒருவரை அமரவைக்கவேண்டும் என
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை விட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திமோடி அறிவிக்கப்பட்டிருக்கிறார். எவ்வளவோ விமர்சனங்கள் அவருக்கு எதிராக வைக்கப்பட்டாலும் மக்கள் எதிர்பார்க்கின்ற இதைவிட ஒரு நல்ல முடிவை பா.ஜ.க எடுத்திருக்க முடியாது.

நாடு முழுவதும் மாற்றம் வேண்டும் என்று இருக்கின்ற உணர்வை தங்களுக்கு  ஆதரவாக மாற்றிக்கொள்வார்களா? பா.ஜ.கவினர் என்பதை இனி வருங்காலத்தில்  அவர்கள் எடுக்கின்ற முடிவை பொறுத்திருக்கிறது. பா.ஜ. க வின் பிரதமர் வேட்பாளர் என்பது மிகப்பெரிய பொறுப்பு.
 இந்தியா முழுவதும் சுற்றி ஆதரவை சேர்க்கின்ற ஒரு பொறுப்பு. மக்கள் ஆதரவு மட்டுமில்லாமல் மாநிலக்கட்சிகளையும் தங்கள் பக்கம் ஈர்க்ககூடிய வகையில் செயல்பாடுகளும். முடிவுகளும் இருக்கவேண்டும்.

அலை வீசுகிறதென்றல்லாம் யோசித்து தன்னிச்சையாக முடிவுகளையெடுத்தால் கனவுகள் கலைந்து போகும். பிரதமர் வேட்பாளருக்கு அளவில்லாத பொறுப்புகள் தேசிய அளவில் இருக்கும் போது மாநில முதலமைச்சர் பதவியையும் எப்போதும்போல் நிர்வகிக்க முடியுமா? தானேதான் அனைத்தையும் செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருக்ககூடாது. குஜராத் முதலமைச்சர் பதவியை தகுதியானவரிடம் ஒப்படைத்துவிட்டு முழு நேரமும் மக்களவை தேர்தலை கவனத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும்.

 இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு மாநில மக்களுக்கும் தங்கள் மாநிலத்தைச்சேர்ந்தவர் பிரதமராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஒவ்வொரு தமிழனுக்கும் கூட தமிழகத்தைச்சேர்ந்தவர்கள் பிரதமராக வேண்டும் என்ற ஆசை உள்ளது.

 அது நமது உரிமை அப்படி ஒரு வாய்ப்பு இருக்குமென்றால் அந்த வாய்ப்பை நாம் உபயோகப்படுத்தியாக வேண்டும். தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் பிரதமரானால் தமிழகத்தின் திட்டங்கள் தங்கு தடையின்றி நடக்கும். உலக அளவில் தமிழர் ஒருவர் இந்தியாவை ஆண்டால் நமக்கு பெருமைதானே. தமிழனை தமிழனே ஆதரிக்கவில்லையென்றால் யார் ஆதரிப்பர். தனிப்பட்ட வேறுபாடுகளை மறந்து தமிழகத்துக்கு அந்த வாய்ப்பு இருக்குமானால் தமிழ் மக்களுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டால் தவறிவிடக்கூடாது.

மறுபடியும் அப்படி ஒரு வாய்ப்பு வருமா? என்பது சந்தேகம். தேர்தலுக்கு முன்பாக இருந்தாலும், பின்பாக இருந்தாலும் தமிழனுக்கு பிரதமராக வாய்ப்பு கிடைத்தால் இன்னொரு தமிழனே தடுக்க கூடாது.

குஜராத்தில் நிர்வாகமும், வளர்ச்சியும் சிறப்பாக இருக்கின்றது. அதை இந்தியாவிற்கு நரேந்திரமோடி செயல்படுத்துவார் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனால் குஜராத் முதல்வர் பொறுப்பை சரிவர கவனிக்க முடியாமல் 2014 தேர்தலுக்குள்ளாக குஜராத்தின் நிர்வாகம் சீர்கெடுமென்று சொன்னால், வருகின்ற பாராளுமன்றத்தேர்தலில் அது எதிரொளிக்கும்.

அதனால் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்துவிட்டு தேசத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதுதான். அவருக்கும் நல்லது பா.ஜ.கவிற்கும் நல்லது. அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.




கருத்துகள் இல்லை:

பக்கங்கள்