வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 29 டிசம்பர், 2011

வாங்கமறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்



 அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்கவேண்டும் என  கொடுமுடி நகர 

மனித கழிவுகள் எங்கே?தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் மனு

வேளாண் விளைபொருட்களின் கழிவுகளின் மனித கழிவுகளும் எங்கே? என்று கேட்டு தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ்

அரசு ஊழியர்களாக ஆக்கப்படவேண்டும்

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டப்பயனாளிகள் அனைவரும் அரசு ஊழியர்களாக ஆக்கப்படவேண்டும்

ரூ127.4 கோடி வீண்

                                                             
திருப்பூர் சாயக்கழிவு நீரை பூஜ்ய நிலைக்கு கொண்டுவர தரப்படும் ரூ127.4 கோடி வட்டியில்லா கடன் வீணாகும் என தமிழ்நாடு கள் இயக்கத்தலைவர் நல்லசாமி கூறியுள்ளார்.

பறிக்கப்பட்ட பதவிக்கு பலர் போட்டி

கொடுமுடி யூனியன் சேர்மன் தேர்தல் எதிரொளியால் அ.தி.மு.க வின் மாவட்ட பொறுப்பு மற்றும் ஒன்றிய பொருப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள்

புதன், 28 டிசம்பர், 2011

கொடுமுடி யூனியன் சேர்மன் தேர்தல் எதிரொளியால் அ.தி.மு.க வின் மாவட்ட பொறுப்பு மற்றும் ஒன்றிய பொருப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் வகித்துவந்த பதவிக்கான இடங்களை கைப்பற்ற தீவிர போட்டி ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி யூனியனுக்கான  மொத்த கவுன்சிலர் ஆறுபேர்.  மாநில அளவில் நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது இந்த ஆறு பேரும் மக்களால் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட ஆறுபேரில் சுப்பிரமணியம், விஜயலட்சுமி, தமிழ்செல்வி, வீரண்ணன் ஆகியோர் அ.தி.மு.க வைச்சேர்ந்தவர்கள். மற்ற இருவரான மணி என்கிற வேலுசாமி, வாசுதேவன் ஆகியோர் சுயேட்சை வேட்பாளர்கள்.
இவர்களில்  சுப்பிரமணியத்தை சேர்மன் பதவிக்கான வேட்பாளராக கட்சி அறிவித்தது.  இவரை சேர்மனாக தேர்வு சில கவுன்சிலர்கள் மறுத்தனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 29 ம்தேதி கொடுமுடியூனியன் சேர்மனுக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தேர்தல் நாளான்று சேர்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுப்பிரமணியத்தை சுயேட்சை கவுன்சிலர்களின் ஆதரவாளர்கள் சிலர் கடத்திவிட்டதாக  சுப்பிரமணித்தின் தந்தை குழந்தைசாமி கொடுமுடி போலிசாரிடம் புகார் தந்தார்.
இந்த புகாரின் விளைவால் தேர்தல் தள்ளிப்போனது. இதற்கிடையே சுயேட்சை கவுன்சிலர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் கொடுமுடி யூனியன் சேர்மன் தேர்தலை மாவட்ட கலெக்டர் மற்றும் சூப்பிரண்டின் மேற்பார்வையில் நடத்தவேண்டும். தங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் எனக்கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
இதே போல யூனியன் தேர்தலை விரைந்து நடத்தவேண்டும் எனக்கேட்டுதேர்தல் ஆணையத்துக்கும் ஒரு கோரிக்கை வைத்தனர்.
இந்த சம்பவங்களுக்கு  இடையில் கவுன்சிலர்களை நேரில் அழைத்து பல முறை பேச்சுவார்த்தைகளை நடத்தினர்  தமிழக அமைச்சர்கள்.  ஆனால் அது பயனின்றிப்போனது.
கோரிக்கைகளின் விளைவாக…நவம்பர் மாதம் 30ம்தேதி  கொடுமுஐ யூனியன் சேர்மன் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மாவட்ட கலெக்டர் மற்றும் சூப்பிரண்டு மேற்பார்வையிலும் வீடியோ காட்சி பதிவுடனும் தேர்தல் நடத்தப்படவேண்டும் என  உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் சென்ற மாத இருதியில் தேர்தல் நடந்தது. தேர்தல் நாளன்று கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கவுன்சிலர் சுப்பிரமணியம் சேர்மன் பதவிக்காக போட்டியிட வந்தார்.
மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை அ.தி.மு.க கவுன்சிலர் விஜயலட்சுமி முன்மொழிந்தார். மேற்கொண்டு வழிமொழிய எந்த கவுன்சிலரும் முன் வராததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இவருக்கு எதிராக சேர்மன் பதவிக்கு மற்றொரு அ.தி.மு.க கவுன்சிலர் தமிழ்செல்விமனுத்தாக்கல் செய்தார் . தமிழ்செல்வியின் மனுவை  அ.தி.மு.க கவுன்சிலர்களில் ஒருவரான வீரன் முன்மொழிந்தார். சுயேட்சை கவுன்சிலர் வேலுசாமி வழிமொழிந்தார்.
இதனால் தமிழ்செல்வி சேர்மனாக தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
அதேபோல துணை சேர்மனாக வேலுசாமி தேர்வு செய்யப்பட்டார்.
சேர்மன் தேர்தல் இந்தக்கட்டத்துடன் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு எதிராக வேலை செய்ததாக கூறி சம்பந்தப்பட்ட ஒன்றியத்தின் செயலாளர் கலைமணி, மற்றும் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செல்வகுமார சின்னையன், தொகுதி எம்.எல்.ஏ., கிட்டுச்சாமி ஆகியோர் மீது புகார்கள் சென்றன.
இதன்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒன்றிய செயலாளர் கலைமணியும், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சின்னையனும் அவர்கள் வகித்து வந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
எம்.எல்.ஏ., கிட்டுச்சாமி வகித்துவந்த மாவட்ட அண்ணாதொழிற்சங்க செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
தற்போது காலியாக உள்ள  கொடுமுடி ஒன்றிய செயலாளர் இடத்துக்கு… கடந்த முறை யூனியன் சேர்மனாகவும்,  தற்போது சுயேட்சை வேட்பாளர் வேலுசாமியால் தோல்விக்குள்ளானவருமான மாவட்ட இளைஞரணி செயலாளர் சந்திரசேகரின் ஆதரவாளர்களும், சென்னையில் முகாமிட்டு கட்சி தலைமையின் கவனத்தை பெற முயற்சி செய்துவருகின்றனர்.
இந்த நிலையில்  கொடுமுடி  ஒன்றியத்தில் வசித்துவருபவரும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் தனிச்செயலாளராக  இருந்த பரமசிவத்தின் சகோதரி மகனும், மொடக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர்களில் ஒருவராகிய அமராவதிபுதூர் சேகர் பெயர் ஒன்றிய செயலாளர் பதவிக்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை கோஷ்டி அரசியலில் சிக்கிகொள்ளாத இவரது பெயர் கட்சியினர் மத்தியில் தற்போது அதிகமாக பேசப்பட்டுவருகிறது.
இது தவிர கொடுமுடி ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் சுள்ளிமடை செல்வராசும் இந்த பதவிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பதவி பறிக்கப்பட்டவர்களும் மீண்டும் தங்களது இடத்தை கைப்பற்ற முயன்று வருகின்றனர்.

ஐயப்பனை வட்டமிடும் கருடன்

                                                   

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே  ஊஞ்சலூரில் உள்ள நாகேஸ்வரர்கோயிலில் ஐயப்ப சுவாமிக்கு ஆராதனை

கொலைவெறி அழைப்பு

 பிரதமருக்கு  விருந்தில் கொலைவெறி

திங்கள், 26 டிசம்பர், 2011

பெரியாறு…பெரியார்


                                           
கரூர் பஸ்நிலையம் பின்புறம் ரவுண்டான எதிரில் உள்ள சுவரில் முல்லைப்பெரியாறு  அணையைக்காக்க நடக்கும் பொதுக்கூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சுவர் விளம்பரத்தில் … பெரியாறு…பெரியார் ஆகியுள்ளது.
வரும் சந்ததியினருக்கு நமது கவனக்குறைவால் செய்யும் சிறு தவறு வரலாற்று போக்கை புரிந்துகொள்ள முடியாமல் செய்துவிடும் … தவறுகளை களைவோம்… கவனமுடன் செயல்படுவோம்.

பக்கங்கள்