வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

நடிகைகளை வளைத்த வருமானவரி துறை அதிகாரி.

                    நடிகைகளை வளைத்த வருமானவரி துறை அதிகாரி.

            கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர்  சென்னை வருமானவரிதுறை
 அலுவலகத்தில் சி.பி.ஐ நடத்திய சோதனையில் அலுவலகத்தில் ரூ50 லட்சம்
 கைப்பற்றப்பட்டது.

          இது தொடர்பாக மேல் முறையீட்டு உதவி ஆணையாளர் ரவீந்ரா
கைது செய்யப்பட்டார்.

     இவருடன் தொடர்புடையவர்களாக ஒரு  ஆன்லைன் கல்வி நிறுவனத்தின்
நிர்வாக இயக்குனர் இருவரும் சி.பி.ஐ பிடியில் சிக்கினர்.

  பிடிபட்ட ரவீந்ரா இந்தியாவின் 18 நகரங்களில் உள்ள பொழுதுபோக்கு
 கிளப்புகளில் உறுப்பினராக உள்ளார். பல ரெய்டுகளை நடத்தி
அதில் வந்த தொகையில் கிளப்புகளில் தண்ணீராய் செலவழித்துள்ளார்.

    சினிமா நடிகர்,நடிகைகளின் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தி
நடிகைகளை வளைத்துப்போட்டுள்ளார்.

     கீழ் அதிகாரிகளை பயன்படுத்தி ரெய்டு நடத்தி நடிகைகளை பணிய
வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை, பெங்களூர், ஹைதராபாத்தில்
 உள்ள பல நடிகைகள் இவரது வளையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
  
     கைதான மற்றொருவர் கிஷோர்குமார் ஆன்லைன் மூலம் பாடங்களைக்
கற்றுத்தரும் நிறுவனம் நடத்திவருவதன் மூலம் ரூ116 கோடி அளவுக்கு
 வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும்,அதனை மறைக்க ரவீந்ராவிடம்
 ரூ50 லட்சம் தந்தபோதுதான்பிடிபட்டுள்ளார்.
                 
      கிஷோர்குமாரின் ஆன் லைன் நிறுவனத்துடன் ஐ.பி.எஸ் மற்றும்
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 10 பேருக்கு  தொடர்பு இருப்பதை தற்போது சி.பி.ஐ
கண்டுபிடித்துள்ளது.

  


.


கருத்துகள் இல்லை:

பக்கங்கள்