வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 6 டிசம்பர், 2013

நிறுத்தப்பட இருந்த போரை நிறுத்த விடாமல் தடுத்ததே


 

 மீபத்தில் சென்னையில் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,


மற்றும் அக் கட்சியைச் சேர்ந்த கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேசிய பேச்சு,


அந்த நேரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அது அத்துடன் முடிந்து போகும் என்று பார்த்தால், தற்போது அது பற்றிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி என்னதான் பேசினார்கள் அவர்கள் இருவரும்?
ப.சிதம்பரம், “ …இலங்கை உள்நாட்டுப் போரை நிறுத்த, இந்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால், இலங்கை அரசும் புலிகள் தரப்பிலும் அதற்கு செவிசாய்க்கவில்லை. மத்திய அரசு சொன்னபடி நடந்திருந்தால், பிரபாகரன் உயிர் தப்பியிருக்க வாய்ப்பு உண்டு..
இலங்கை இறையாண்மை பெற்ற தனி நாடு. அங்கு, தனி நாடு கேட்க முடியாது. இந்தியாவில் காஷ்மீர், நாகலாந்து, மணிப்பூர் மாநிலங்களில் தனி நாடு கோருகின்றனர். அதை சரி என்று இந்தியா ஏற்றுக் கொள்கிறதா? அப்படித்தான் இலங்கை ஏற்கவில்லை..என்றார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, “இலங்கைப் போரில் இதற்கு மேல் சமாளிக்க முடியாது என்றதும், புலிகள் தரப்பில் நடேசன் மூலமாக, குமரன் பத்மநாதன் வழியே இந்திய அரசிடம் உதவி கேட்டனர். மத்திய அமைச்சர் சிதம்பரம் அதற்கு முயற்சி மேற்கொண்டு, புலிகள் தரப்பிலும் இலங்கை தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டுக்கு வர முயற்சித்தார்.

ஆனால், தமிழகத்தில் உள்ள பழ.நெடுமாறனும் வைகோவும், ‘நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். அவர்கள் மூலம் தனி நாடு பெறலாம்என்று கூறி புலிகளை குழப்பிவிட்டனர். அதனால் நிலைமை மாறிப்போனது. இதற்கு ஆதாரங்கள் உள்ளனஎன்றார்.
இது தொடர்பாக ஆரம்பத்தில் இருந்த சலசலப்பு, தற்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

ஒரு தரப்பினர், “கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை முள்ளிவாய்க்காலில் எல்லாமே முடிந்தபின் இவர்கள் கதை விடுகிறார்கள்என்று கூறுகிறார்கள்.
மற்றொரு தரப்பினரோ, “இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், அரசியல் பிரிவு தலைவர் நடேசன் ஆகியோர் இறந்து விட்டதால், தாம் கூறுவதை மறுத்துப் பேச ஆளில்லை என்பதால், தேர்தல் சமயத்தில் இவ்வாறு திசை திருப்பி விடுகிறார்கள்என்று குற்றம்சாட்டுகின்றனர்.
இவர்கள் கூறுவது நிஜமா? அல்லது காங்கிரஸ்காரர்கள் எமது பேச்சை கேட்டிருந்தால், பிரபாகரன் உயிரோடு இருந்திருக்கலாம்என்று கூறுவது நிஜமா என்பதில் பலத்த சர்ச்சை. (நெடுமாறன் ஐயா, சீமான் ஆகியோருக்கு இந்த சர்ச்சையில் சிக்கல் கிடையாது. காரணம், அவர்களுக்கு பிரபாகரன் உயிருடன் உள்ளார்)

முதலில் ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறோம். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், அரசியல் பிரிவு தலைவர் நடேசன் ஆகியோரை தவிர, புலிகள் தரப்பில் இந்த விவகாரத்தை டீல் பண்ணிய மூவர் இன்னமும் உயிருடன் உள்ளார்கள். இந்தியாவில், அமைச்சர் ப.சிதம்பரத்தை தவிர, இந்த விவகாரத்துடன் தொடர்புடைய வேறு இருவர், இன்னமும் இந்தியாவிலேயே உள்ளார்கள்.

மத்திய அரசின் திட்டத்தை குழப்பினார்கள் என்று காங்கிரஸ் தரப்பால் குற்றம் சாட்டப்பட்ட பழ.நெடுமாறன், வைகோ ஆகியோரை, மேலே சொன்ன கணக்கில் சேர்க்கவில்லை. இவர்கள் இருவரை தவிர, இந்த விவகாரத்தில் தொடர்புடைய வேறு இருவர் இந்தியாவில் உள்ளார்கள்.
அவர்களில் ஒருவர், தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி குடும்ப உறுப்பினர் ஒருவருடன் நெருக்கமான, ஆனால் அரசியல்வாதி அல்லாத நபர். இரண்டாவது நபர், இந்தியாவின் தேசிய கட்சி ஒன்றின் தமிழகத்தை சேர்ந்த மாநில அரசியல்வாதி.


இவர்கள் இருவருக்கும் இந்த விவகாரத்தில் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இந்த விவகாரம் பற்றி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கே.எஸ்.அழகிரி கூறுவதை பார்த்தால், இது ஒரு தடவை மேற்கொள்ளப்பட்ட முயற்சி போன்ற தோற்றம் ஏற்படுகிறது அல்லவா? ஆனால், நிஜம் அதுவல்லை.
இது இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி. இரு கட்டங்களுக்கும் இடையே சில மாதங்கள் இடைவெளி உண்டு. முதலாவது கட்டத்தில் பழ.நெடுமாறன், வைகோ ஆகியோருக்கு தொடர்பு உண்டு. இரண்டாவது கட்டத்தில் தொடர்பு இல்லை.

சரி. அமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டதுபோல, “மத்திய அரசு சொன்னதை கேட்டிருந்தால், பிரபாகரன் ஒருவேளை உயிர் தப்பியிருக்கலாம்என்பது எந்தளவுக்கு உண்மை?

அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும்  இந்த விஷயத்தில் அவர் கூறுவது, ஏறக்குறைய நிஜம். கே.எஸ்.அழகிரி கூறுவதும் அப்படியே.


 உண்மையில் இந்த விவகாரத்தில் என்னதான் நடந்தது? இதோ, முழுமையான விபரங்கள்:

இந்த விவகாரம், யுத்தத்தின் இறுதி நாட்களில் தொடங்கியது அல்ல. யுத்தம் முக்கால் பங்கு முடிவடைந்து, கிளிநொச்சி நகரம் எந்த நேரத்திலும் ராணுவத்தால் கைப்பற்றப்படலாம் என்று இருந்த நிலையில், 2009-ம் ஆண்டு ஜனவரியில் நடந்தது.

அந்த நிலையில் தமிழ் மீடியா பிரசாரம், “விடுதலைப் புலிகள் தந்திரமாக பின்வாங்கி செல்கிறார்கள்என்பதாக இருந்தது. ஆனால், நிஜ நிலைமை அப்படி இருக்கவில்லை. 

ராணுவ படைப்பிரிவுகளின் வெவ்வேறு திசையிலான தாக்குதல்கள் காரணமாக, விடுதலைப் புலிகள் ஒவ்வொரு நகரத்தையும் கைவிட்டு, கைவிட்டு பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் நிர்வாக தலைநகராக இருந்த கிளிநொச்சி அடுத்து ராணுவத்தின் கைகளில் விழப் போகிறது என்று புலிகள் உயர்மட்டத்தில் இருந்தவர்களுக்கு நன்றாக தெரிந்து இருந்தது. கிளிநொச்சியை கைவிட்டு பின்வாங்கினால், அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனை புலிகளின் தளபதிகள் மட்டத்தில் நடந்து கொண்டிருந்தது.   

மீடியாக்களில் காட்டப்பட்ட பிம்பம் வேறு என்ற போதிலும், நிஜ நிலைமை இலங்கைக்கு வெளியே மிகச் சிலருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வகையில், வட அமெரிக்காவில் வசிக்கும் ஈழத் தமிழர் ஒருவருக்கு, புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசனால் நிலைமை படுமோசம்என்ற தகவல் 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே தெரிவிக்கப்பட்டது.
வட அமெரிக்காவில் வசித்தவருக்கு, தமிழக அரசியல் வட்டாரங்களில் நல்ல தொடர்பு உண்டு. அவர் தமக்கு கிடைத்த தகவல் பற்றி, இந்திய தேசியக் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவருடன் விவாதித்திருக்கிறார். இந்திய மத்திய அரசால், ஏதாவது செய்ய முடியுமாஎன்று கேட்டிருக்கிறார்.

பின்னாட்களில் இந்த விஷயம் தெரியவந்தபோது வட அமெரிக்காவில் வசித்தவரிடம் நாம் ஒரு கேள்வி கேட்டோம். தமிழகத்தில் ஈழ அரசியல் பற்றி அதிகம் பேசும் பலர் இருக்க, அவர்களுடன் தொடர்பு கொள்ளாமல், ஏன் இந்த இந்திய தேசியக் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவரை தொடர்பு கொண்டீர்கள்?” என்பதே நாம் அவரிடம் கேட்ட கேள்வி.

இந்திய தேசியக் கட்சியின் இந்த தமிழக தலைவர் ஆர்ப்பாட்ட அரசியல் செய்யாதவர். மிகவும் நியாயமானவர். இவர் மூலம் செய்யப்படும் இப்படியான காரியங்களை தமது சுய அரசியல் லாபத்துக்காக வெளியிடவோ, பயன்படுத்தவோ மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதனால்தான் அவருடன் இதுபற்றி பேசினேன்என்பது நமக்கு கூறப்பட்ட பதில்.

அந்த நம்பிக்கையை, குறிப்பிட்ட அரசியல் தலைவர் இன்னமும் காப்பாற்றி வருகிறார் என்பது, தமிழக அரசியலின் பெருமைக்குரிய விஷயங்களில் ஒன்று.

இந்த தமிழக தலைவர், அமைச்சர் ப.சிதம்பரத்துடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியிருக்கிறார்.

இவர் தெரிவிப்பதற்கு முன்னரே, இந்திய உளவுத்துறை மூலம், விடுதலைப் புலிகளின் அப்போதைய இக்கட்டான நிலை அமைச்சர் சிதம்பரத்துக்கு தெரிந்திருந்தது. ஆனால், புலிகள் தரப்பில் இருந்து யாரும், அமைச்சர் சிதம்பரத்துடனோ, மத்திய அரசுடனோ தொடர்பில் இருக்கவில்லை.
தமிழகத் தலைவர், ப.சிதம்பரத்துடன் தொடர்பு கொண்டதன் மூலம், அந்த சந்தர்ப்பத்தில் முதல் தடவையாக மத்திய அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஒரு indirect தொடர்பு ஏற்பட்டது.

வட அமெரிக்காவில் உள்ளவர் யார்? அவருடன் தொடர்பில் உள்ள புலிகளின் தளபதி (நா.நடேசன்) யார்? என்ற விபரங்களை கேட்டு தெரிந்துகொண்ட அமைச்சர் சிதம்பரம், இதுபற்றி ஆலோசித்து சொல்வதாக தகவல் அமெரிக்காவுக்கு கிடைத்தது. அந்த தகவல், வன்னியில் இருந்த நடேசனிடம் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின், அடுத்தடுத்த தினங்களில் டில்லிக்கும், சென்னைக்கும், அமெரிக்காவுக்கும், வன்னியில் உள்ள புலிகளுக்கும் இடையில் சங்கிலித் தொடராக செய்திப் பரிமாற்றம் நடந்தது. ஒரு கட்டத்தில், அமெரிக்காவுக்கும், டில்லிக்கும் இடையே சில நேரடி உரையாடல்களும் இடம்பெற்றன. அமைச்சர் சிதம்பரத்தின் சில சந்தேகங்களுக்கான பதில், வன்னியில் இருந்து பெறப்பட்டு தெரிவிக்கப்பட்டது.

சரியாக சொல்வதென்றால், இது ஜனவரி 1-ம் தேதி (2008) நடந்தது. அன்று மாலை வன்னியில், பரந்தன் நகரை ராணுவம் நெருங்கிக் கொண்டிருந்தது. பரந்தன் வீழ்ந்தால், அடுத்த இலக்கு கிளிநொச்சி நகரம்தான் என்பது புலிகளுக்கு தெரிந்திருந்தது.

ஜனவரி 2-ம் தேதி, காலை 11.15க்கு இலங்கை ராணுவ தலைமையகம் நியூஸ் பிளாஷ் ஒன்றை அரசு டி.வி. சேனல் ரூபவாஹினியில் வெளியிட்டது. பிளாஷ்: கிளிநொச்சி எந்த நிமிடமும் விழலாம். கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட செய்திக்கு தயாராக இருங்கள்”. ஆனால், அடுத்த சில மணி நேரத்துக்கு எந்த அப்டேட்டும் இல்லை.

சுமார் 3 மணிக்கு, இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பில், விசித்திரமான தகவல் ஒன்று இருந்தது. ஓமந்தை முதல் பரந்தன் வரையிலான A-9 நெடுஞ்சாலை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதுஎன்பதே அந்த செய்தி.

இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட செய்தி வெளியாக இல்லை. ஆனால், “ஓமந்தை முதல் பரந்தன் வரையிலான A-9 நெடுஞ்சாலை கைப்பற்றப்பட்டதுஎன்கிறது பாதுகாப்பு அமைச்சு.

பரபரப்புக்கு காரணம், இந்த நெடுஞ்சாலை, கிளிநொச்சி ஊடாக செல்கிறது! அப்படியானால் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டு விட்டதா?
இந்த நேரத்தில் பா.நடேசன் அமெரிக்காவில் இருந்த நபரை தொடர்புகொண்டு, “கிளிநொச்சி ராணுவத்திடம் எந்த நிமிடமும் வீழ்ந்து விடும். நாம் முல்லைத்தீவு நோக்கி நகர்கிறோம். இந்திய மத்திய அரசை தொடர்புகொண்டு இந்த தகவலை தெரிவித்து, ஏதாவது செய்ய சொல்லுங்கள்என்று தெரிவித்தார்.

இந்த தகவல் அமெரிக்காவில் இருந்து டில்லிக்கு போகுமுன், “கிளிநொச்சி நகரை தெற்கில் இருந்து 57-ம் டிவிஷன் படைப்பிரிவு நெருங்கிவிட்டது. வடக்கே இருந்து நகர்ந்து வரும் அதிரடிப்படை-1 கரடிப்போங்கு ஜங்ஷனை கைப்பற்றிவிட்டு, கிளிநொச்சியை அண்மித்து விட்டதுஎன்ற செய்தியை வெளியிட்டது ராணுவ தகவல் மையம்.

இந்த அவசர சூழ்நிலையில் அமைச்சர் சிதம்பரம், தமது நிலைப்பாட்டையும், மத்திய அரசின் நிலைப்பாட்டையும் தெளிவாக தெரிவித்தார். இப்போது அவர் கூறிய அதே வார்த்தைகளைதான் அப்போதும் (2008-ல்) இடைப்பட்ட தொடர்பாளர்கள் மூலம் பா.நடேசனுக்கு தெரிவித்தார்.

இலங்கை என்ற நாட்டை பிரித்து ஈழம் அமைவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. புலிகள் அந்த நிலைப்பாட்டில் இருக்கும் வரை எம்மால் உதவவும் முடியாது. புலிகள் தற்போதைக்கு அந்த நிலைப்பாட்டை கைவிட தயாரா என்பதை நடேசனிடம் கேட்டு சொல்லுங்கள். அதன்பின், என்ன செய்ய வேண்டும் என்பதற்கு எம்மிடம் ஒரு திட்டம் உள்ளதுஎன்றார் ப.சிதம்பரம்.

இந்த தகவல், பா.நடேசனிடம் தெரிவிக்கப்பட்டது. புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பேசிவிட்டு பதில் சொல்வதாக சொன்னார் நடேசன். அப்போது, கிளிநொச்சி முற்றாக ராணுவத்திடம் வீழ்ந்து விட்டிருந்தது.

நன்றி விறுவிறுப்பு.


நிறுத்தப்பட இருந்த போரை நிறுத்த விடாமல் தடுத்ததே இந்தியாதான் ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய திருமுருகன்காந்தி


நிருபர் கேள்வி:இலங்கையில் இறுதிகட்ட போரின்போது போர் நிறுத்தம் கொண்டு வர இந்தியா முயற்சித்தது ஆனால் அதை தமிழகத்தில் உள்ள சிலர் தான் கெடுத்துவிட்டார்கள் என்று சிதம்பரம் அடிக்கடி கூறுகிறாரே.

மே 17 திருமுருகன் பதில்:ஒரு பச்சைபொய்யை இவர்கள் திரும்ப திரும்ப சொல்கிறார்கள்.இதைபற்றி சற்று விரிவாக பார்தோமேயானால் உண்மை வெளிப்படும். 2009 மார்ச் மாதம் 9ம் தேதியிலிருந்து 12ம் தேதி என்பது போர் உச்சகட்டத்தில் இருந்த நேரம்.

இந்த கால கட்டத்தில் ஐநாவின் உயர்மட்டகுழு இலங்கைக்கு விஜயம் செய்து எத்தனை மக்கள் இறந்திருக்கிறார்கள் என்ற ஆவணத்தை பார்த்து அதிர்ந்து போய் உடனடியாக ஐ.நாவின் பாதுகாப்பு சபையை கூட்ட வேண்டும் என்று அநத குழுவின் தலைவரான நவநீதம்பிள்ளை மார்ச் 13 2009 கூறுகிறார். இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடக்கவிருக்கிற நேரத்தில் முதல் நாள் இரவு ஒரு மின்னஞ்சல் வருகிறது.அதில் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை தவிர்க்கவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் விதமாக அது வருகிறது.இந்த மின்னஞ்சலை அனுப்பியது இந்தியாவிலிருந்து ஐநாவிற்க்கு அனுப்பப்பட்ட முன்னாள் துணைபாதுகாப்பு செயலாளர் விஜய் நம்பியார்.

இவர் தான் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எத்தனை மக்கள் இறந்திருக்கிறார்கள் என்று சர்வதேசத்திற்க்கு சொல்லக்கூடாது மற்றும் இலங்கை அரசை குற்றசொல்லாமல் விடுதலைப்புலிகளை குற்றம்சொல்லி அறிக்கை கொடுக்கவேண்டும் என்று கூறுகிறார்.இதன்படி பல செய்திகளை மறைத்து அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடக்கிறது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏன் முக்கியமென்றால் ஐநாவின் மிக அதிகாரம் கொண்ட மனித உரிமை அமைப்பானது அங்கு மனித குலத்திற்க்கு எதிரான குற்றங்கள் நடக்கிறது என்று அறிக்கை கொடுத்தால் உடனே பாதுகாப்பு சபையை கூட்டி போர் நிறுத்தப் பட்டிருக்க வேண்டும்.

இதுதான் உலகத்தில் எல்லா இடங்களிலும் நடக்கிறது.குறிப்பாக சிரியா மற்றும் பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே போர்நிறுத்தம் வ்ந்தது.ஆனால் இந்த அறிக்கை அப்பொழுது வரமால் தடுத்தது இந்திய அரசாங்கம்.குறிப்பாக அப்பொழுது பதவியிலிருந்த சிதம்பரம் அவர்களுக்கு இது தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.எனவே இவர்கள் போரை நிறுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சர்வதேசம் இதில் தலையிட நினைத்து தனது ஆட்களை அனுப்புகிறது இதையும் இந்தியாதான் தடுக்கிறது. இதனையடுத்து அங்கு 15ம்தேதி ஐநாவின் இனப்படுகொலை தடுப்பு ஆலோசகர் விஜய் நம்பியார் வருகிறார்.

இவர் கொழும்புவிலிருந்த 5நாட்களும் தனது அறையைவிட்டு வெளியே வரவில்லை.ஏன் என்று கேட்டால் வெளியில் climate தட்பவெட்பம் சரியில்லை என்று சொல்லியிருக்கிறார். இந்த சமயத்தில்தான் மே 19அன்று கிட்டத்தட்ட 40,000 தமிழர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள் இது இந்தியாவின் ஒப்புதலோடு நடந்திருக்கிறது.இப்படி பொறுப்பற்ற அதிகாரியாக ஐநாவிலிருந்த இந்திய அதிகாரி விஜய் நம்பியாரின் அண்ணண் சதிஸ் நம்பியார்தான் இனப்படுகொலை செய்த இலங்கைக்கு இராணுவ பயிற்சி கொடுத்தவர்.

அண்ணண் இனப்படுகொலை செய்கிறவர் தம்பி அதனை வேடிக்கை பார்த்தவர் இவர்கள் இருவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள்.இவர்களை இந்த இடத்தில் கொண்டுவந்தது இந்தியாதான்.இது எதுவும் பா.சிதம்பரத்திற்க்கு தெரியாமல் நடந்திருக்காது. இது ஏதோ மே17இயக்கத்தின் கருத்தோ அல்லது திருமுருகனின் கருத்தோ இல்லை எல்லாமே ஆவணமாக விக்கிலீஸ் மற்றும் ஐநாவின் உள்ளக ஆய்வறிக்கையிலேயே இருக்கிறது.ஆகவே இவர்கள் செய்த அனைத்தும் ஆவணமாகவே இருக்கிறது. இதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்க்காகத்தான் அடுத்தவர்களின் மீது பழியை போடுகிறார்கள்.

மூன்றாவது நாடுகளின் முலம் முயற்சித்தோம் என்பதெல்லாம் சுத்த பொய் மற்ற நாடுகளின் தலையீட்டை தடுத்ததே இந்தியாதான்.இதை நாங்கள் ஆதாரபூர்வமாகவே சிதம்பரம் அவர்களுடன் விவாதிக்க தயாராக இருக்கின்றோம்.ஆனால் அவர் இதற்க்கு தயாரா என்பதுதான் எங்கள் கேள்வி.எனவே இந்த போரை நடத்தி இத்தனை மக்களை கொன்று குவித்ததற்க்கு முழுகாரணமும் இந்தியாதான்.


ஈரானுக்கு சொந்தமான ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் இரு போர்க்  

கப்பல்கள் கொழும்பு செல்வதற்காக புறப்பட்டு விட்டன அந்தக் கப்பல்கள் 

இன்னமும் கொழும்பு வந்து சேரவில்லை







 ஆனால் அதற்குமுன், ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான 5 போர்க்கப்பல்கள் ஒரே நேரத்தில் கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளன.

இந்த 5 கப்பல்களும் எதற்காக வந்துள்ளன?
 

கொழும்புவில் உள்ள ரஷ்ய தூதரகம் இன்று (திங்கட்கிழமை) அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், “ஐந்து கப்பல்களில் உள்ளவர்களும் ஓய்வெடுத்து செல்வதற்காக இலங்கை வந்துள்ளார்கள்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐந்து கப்பல்களும், ரஷ்ய கடற்படையில் உள்ள பெரிய கப்பல்கள். Admiral Panteleyev, Peresvet, Admiral Nevelsky, Fotiy Krylov மற்றும், Pechenga என்பவைதான் அவற்றின் பெயர்கள். விளாடிவோஸ்டாக் என்ற கடற்படைத் தளத்தை சேர்ந்தவை. மெடிட்டரேனியன் கடலின் வெவ்வேறு பகுதிகளில் நடமாடிக்கொண்டிருந்த இந்த 5 கப்பல்களும், ஒரே தினத்தில், நேற்று கொழும்பு துறைமுகம் வந்து சேர்ந்திருக்கின்றன.
பொதுவாகவே, எந்தவொரு நாடும் தமது கடற்படையின் இரண்டுக்கு மேற்பட்ட கப்பல்களை தமது நாட்டுக்கு வெளியே ஒரேயிடத்தில் ஒரே நேரத்தில் கொண்டுவருவதில்லை. மெடிட்டரேனியன் கடலில் இருந்து ரஷ்யா செல்லும் கடல் பாதையிலும் இலங்கை இல்லை.
சுமார் 15 ஆண்டுகளின்பின் ரஷ்ய போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன. அத்துடன், இதுவரை இலங்கை பக்கமே எட்டிப் பார்த்திராத ஈரானிய நீர்மூழ்கிக் கப்பலும் இலங்கைக்கு வந்துகொண்டு இருக்கிறது. அதற்கு பாதுகாப்பாக வேறு இரு போர்க்கப்பல்கள் வருகின்றன.
இதே நேரத்தில், இலங்கையின் தென் பகுதியில் உள்ள காலியில், இலங்கை பாதுகாப்பு அமைச்சு, ஏற்பாடு செய்துள்ள சர்வதேச கடற்படை மாநாடு ஒன்று “Emerging Maritime Trends in the Indian Ocean” என்ற பெயரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதில் 35 நாடுகளைச் சேர்ந்த கடற்படை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
என்னங்க நடக்கிறது இலங்கையில்?
இதற்கெல்லாம் ஒரே அர்த்தம், இலங்கை இந்தியக் கடல் பகுதியில் ஒரு Maritime Hub ஆக மாறி வருகிறது.
1980களில் இருந்தே பல நாடுகள் இலங்கையின் துறைமுகங்களை தமது Maritime Hub ஆக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளன. அப்போதெல்லாம் அதை தடுத்துக் கொண்டிருந்த நாடு இந்தியா. காரணம், இலங்கையில் இப்படியொரு ட்ரான்சிட் தளம் அமைவது, இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்.
1980களின் ஆரம்பத்தில், அமெரிக்கா இப்படியொரு முயற்சியில் இறங்கியது. அவர்கள் திரிகோணமலை துறைமுகத்தில் கண் வைத்தார்கள். அப்போது இலங்கை ஜனாதிபதியாக இருந்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன.
இந்த விவகாரம் தமக்கு பின்னாட்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்று புரிந்துகொண்ட அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, அதை எதிர்த்தார்

இலங்கை அரசியல்வாதிகளில் மிகவும் தந்திரசாலிகளில் ஒருவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனே. அவர் உடனே என்ன செய்தார் என்றால், அமெரிக்கா கொல்லைப்புறமாக வருவதற்கு ஒரு ஏற்பாடு செய்து கொடுத்தார். வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா (VOA) தமது ட்ரான்ஸ்மிஷன் சென்டரை இலங்கையில் இரணவில என்ற இடத்தில் அமைப்பதற்கான அனுமதியை வழங்கினார்.
இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியால் அதை தடுக்க முடியவில்லை. அவர் தமது பங்குக்கு ஒரு தந்திரம் செய்து, இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுத்தார்.
ஆம். 1983-ல் ஈழ போராளி இயக்கங்களுக்கு இந்திய மத்திய அரசு ஆயுதங்களும், பயிற்சியும் வழங்கியதன் மெயின் பின்னணி இதுதான்.
ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இந்தியா எதற்காக பயிற்சி கொடுக்கிறது என்பதை ஜே.ஆர்.ஜெயவர்த்தனே புரிந்து கொண்டார். அதையடுத்து, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ஒப்பந்தத்தை அடுத்து அமெரிக்காவுடன் செய்துகொள்ள தயாராக இருந்த திரிகோணமலை துறைமுக ஒப்பந்தத்தை கைகழுவி விட்டார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்தார்.
இப்போது மீண்டும் சரித்திரம் திரும்புகிறது.
இலங்கை துறைமுகங்கள் வெவ்வேறு நாடுகளின் Maritime Hub ஆக மாறி வருகின்றன. ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனா முழுமையாக கட்டியே கொடுத்திருக்கிறது.
ஏன் இப்படி நடக்கிறது? இலங்கையில் Maritime Hub அமைப்பதை இந்தியா விரும்பாது என மற்றைய நாடுகளுக்கு தெரியும். தற்போது இலங்கை, இந்தியாவை பற்றி கவலைப்படாமல் மற்றைய நாடுகளுடன் டீல் பண்ண தொடங்கியிருக்கிறது. அதுதான், திடீரென போர்க்கப்பல்கள் எல்லாம் கொழும்புக்கு விசிட் அடிக்கின்றன.  













கருத்துகள் இல்லை:

பக்கங்கள்