வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

சிவகிரி போலிசும்..பாஸ்ட்டன் நகர போலிசாரும்...

                                                                   

                 சிவகிரி நகர போலிசும்..பாஸ்ட்டன் நகர போலிசாரும்...

               
குடித்துவிட்டு காரை ஓட்டிச்சென்றவர் கைது செய்யப்பட்டார். அவரை 
பாஸ்ட்டன் நகரபோலிசார்

கைது செய்து விசாரித்தபோது அவர் அமெரிக்கா ஜனாதிபதியின் மாமா ஒனயன்கோ என்பது தெரிந்தது.

இருந்தபோதும் போலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

         ஒனயன்கோவிடம் அமெரிக்காவில் தங்குவதற்கான விசா இல்லாததால்

போலிசார் அவரை ஜாமினில் வரமுடியாத சட்டப்பிரிவில் கைது செய்துள்ளனர்.

இது போன்ற நடவடிக்கைகளை வெளிநாடுகளில் மட்டுமே நாம் காணமுடியும்.

தமிழ்நாட்டில் இது போன்ற நடவடிக்கைகளில் போலிசார் இறங்கினால் சாலையில்

போக்குவரத்து குறைவதுடன் விபத்துக்களும் குறையும், அது சரி போலிசார் சிலரே

குடித்துவிட்டு வாகனங்களில் செல்வதும் பணியில் இருப்பதும் தொடர்கிறதே என்கிறீர்களா?

அதுவும் சரிதான்.

       சின்ன  செய்தி:- ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள காவல் நிலையம் சிவில் கோர்ட்டாகவே

செயல்பட்டுவருகிறது. இந்த காவல் நிலையத்துக்கு சிவில் சம்பந்தமான புகார்கள்

வந்தால் சில போலிசாருக்கு  தேன் குடித்த குஷி வந்துவிடுகிறது.

  சில தினங்களுக்கு முன்னர் முத்தையன் வலசை சேர்ந்த ஒரு விவசாயியை காவல்

நிலையத்துக்கு வரசொல்லி அழைத்திருந்தனர்.

  வந்தவர் பயந்த சுபாவத்துடன் இருந்தார். தனது மனைவியையும் மகனான

சிறுவன் ஒருவனையும் அழைத்து வந்திருந்தார்.

 “ நீ உனது பக்கத்து தோட்டத்தில் உள்ள கிணற்று மோட்டாருக்கு உரிய ஸ்டார்டர் ஒயரை

சேதப்படுத்திவிட்டாய்...ரூ 30 ஆயிரத்தைக்கொடுத்து விட்டு செல். இல்லை என்றால்

உன் மீது வழக்கு போட்டு உள்ளே தள்ளப்படுவாய் ” என்று காவலர் ஒருவர் திருவாய்

மலர்ந்தருளியிருக்கிறார்.

பயந்தசுவாபம் உள்ள அந்த விவசாயி ஐயா எனக்கு 20 ஏக்கர் விவசாய பூமி உள்ளது.

நான் யாரிடமும் எந்த வம்புதும்பும் வைத்துக்கொள்வதில்லை. எவரது

பொருளையும் எடுப்பதில்லை. நீங்கள் கூறும் பக்கத்து தோட்டத்துக்காரர்

சில நாட்களுக்கு முன்னர் என்னை அடிக்க வந்தார். நான் ஓடிப்போய்விட்டேன்.

சம்பவம் குறித்து ஊரில் உள்ள பெரிய மனிதர்களிடம் சொன்னேன்.

அவர்களும் எதற்காக? உன்னை பக்கத்து தோட்டத்துக்காரர் அடிக்க வருகிறார் என்று என்னைகேட்டனர்.

அவரது தோட்டத்துநிலத்தை நான் ஆக்ரமிப்பு செய்துள்ளேன் என்று என்னை

அடிக்கவருகிறார்.

 ஒரு வேளை நான் அப்படி ஆக்ரமிப்பு செய்திருந்தால்

சர்வேயரை அழைத்து வந்து அவரை எடுத்துக்கொள்ளச்சொல்லுங்கள் என்றேன்.

அப்படி சர்வேயர் வந்து அளந்தால் பக்கத்துதோட்டத்துக்காரர் என் நிலத்தை

ஆக்ரமிப்பு செய்திருப்பது தெரிந்துவிடும் என்பதால் என்மீது இப்படி ஒரு புகார் தரப்பட்டுள்ளது.

என்று விளக்கி சொல்லிக்கொண்டிருந்தார்.
   
அவரது பேச்சு அம்பலம் ஏறவில்லை நீ நாளை வா... பேசிக்கொள்ளலாம் என்று

அவர் அனுப்பி வைக்கப்பட்டார். மறுநாள் என்ன நடந்தது என்று தெரியவில்லை.


இப்படி செல்கிறது. சிவகிரி போலிசார் சிலரின் திருவிளையாடல். சாதாரண சிவில் கேஸை

கிரிமினல் கேஸாக மாற்றி அதில் ஆதாயம் பார்ப்பது காவலர் சிலரின் கடமையாகி விட்டது. இதில்

ஒரு கொடுமை என்னவென்றால்.. இந்த கொடுமைகள் குறித்து காவல்துறையின் மாவட்ட

தலைமைக்கு தகவல் சொல்லவேண்டிய காவலரும் தகவலை தெரிவிக்காமல் கொடுமைக்கு துணை

போவது வெட்ககேடு.....



கொசுறு:  ஸ்டார்ட்டர்    சேதப்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்ட தோட்டத்துக்கு 
அருகில் இருந்த பக்கத்து தோட்டத்தைச்சேர்ந்த

இருவிவசாயிகளின் கிணறுகளிலும் தற்போது மோட்டார் வயர்கள்

திருடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்