வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 12 ஜனவரி, 2012

செங்கரும்பு




மஞ்சள் பக்கம் விவசாயிகள் சாய்ந்ததால் இந்த ஆண்டு செங்கரும்புக்கான
விலை உயர்ந்துள்ளது.
ஆண்டுதோறும் தை திருநாள் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது செங்கரும்பு.

நல்ல ஜீரணசக்தியையும், சுறுசுறுப்பையும் தரக்கூடியதாக உள்ள செங்கரும்பை தைத்திருநாளை
மனதில் வைத்து விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே செங்கரும்பின் விலை உயர்ந்து வந்திருந்தது.

இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக சற்று அதிகமாகவே உயர்ந்துள்ளது.

செங்கரும்பு ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி பகுதியில் சற்று அதிகமாக பயிரிடப்படுவது வழக்கம்.
 இந்த ஆண்டு செங்கரும்பு உற்பத்தி குறைந்துள்ளது.

அதிகரித்துள்ள தேவைக்கு ஏற்றபடி உற்பத்தி உயராததால் கரும்பின் விலை உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு தங்கத்துக்கு நிகராக மஞ்சளுக்கு கிடைத்த விலையை பார்த்த விவசாயிகள்
 பலர் செங்கரும்பு பயிரிடுவதை தவிர்த்துவிட்டு மஞ்சள் விவசாயத்தின் பக்கம் கவனத்தை திருப்பி
 விட்டதால்  செங்கரும்பின் வழக்கமான  உற்பத்தி எட்டப்படவில்லை.

இதனால் செங்கரும்பு உற்பத்தியாகும் காடுகளில் அதன் ஒரு ஜோடி விலை
 ரூ 25க்கும் சந்தையில் ரூ60 க்கும் விற்கிறது.


கருத்துகள் இல்லை:

பக்கங்கள்