வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 27 செப்டம்பர், 2014

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டணை , சிவகிரியில் ஊர்வலம் , கொடும்பாவி எரிப்பு, ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது.

              

           
         ருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது பெங்களூரு நீதி மன்றம் குற்றவாளி என அறிவித்ததை அடுத்து தமிழகம் முழுவதும் அதிமுக வினர் பல்வேறு போரட்டங்களை நடத்தினர்.

    ஈரோடு மாவட்டம் சிவகிரியில் சிவகிரி பேரூராட்சி தலைவர் பரமசிவம் மற்றும் கொடுமுடி ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் பிரபாகரன் , சிவகிரி நகர துணை செயலாளர எம்..எஸ் உதயகுமார் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.கவினர் திரண்டனர்.

               இவர்கள் அனைவரும்  நகரின் முக்கிய வீதிகள் வழியாக  தி.மு.க தலைவர் கருணாநிதியின் உருவபொம்மையை ஏந்திக்கொண்டு கோஷங்களை இட்டவாறு சென்றனர். பின்னர் சிவகிரியின்  கடைவீதியில்  தீரன் சின்னமலை உருவச்சிலை அமைந்திருக்கும் இடம் அருகே ஒன்று கூடினர். பின்னர் தி.மு.க தலைவர்  கருணாநிதியின் உருவபொம்மையை ஆவேசமாக எரித்தனர்.

     இந்த சம்பவத்துக்கு பின்னர் மேலும் மேலும் திரண்ட அ.தி.மு.க வினர் சிவகிரியில் உள்ள கடைவீதியின் முன்பு பேருந்துகளை செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி மறியல் செய்தனர்.

      இதனைக்கண்ட கொடுமுடி போலிஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான குழுவினர் அவர்களை கைது செய்து கொங்குவேளாளர் திருமண மண்டபத்தில்  அடைத்து வைத்தனர்.

         இந்த நிகழ்வுகளில் சிவகிரி கூட்டுறவு வேளாண்மை தொழிற்மைய தலைவர் ராமசாமி, மாவட்ட துணை செயலாளர் லிங்கப்பன், சிவகிரி பேரூர் அவைத்தலைவர் தங்கவேல், வார்டு செயலாளர்கள் சுரேந்தர், சின்னியம்பாளையம் ராமலிங்கம், சன் டெக்ஸ் துணை தலைவர் கோபிநாத், முன்னாள் பேரூர் செயலாளர் மோகனசுந்தரம், கூட்டுறவு சங்க இயக்குனர்கள் குணசேகரன், 14 வது வார்டு செயலாளர் குணசேகரன், 6வது வார்டு செயலாளர் சபாபதி, 3வது வார்டுசெயலாளர் சோமசுந்தரம், கனகராஜ், தங்கவேல், சிற்றரசு, வரதராஜன் மற்றும் மகளிர் அணியினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கு கொண்டனர்.






பக்கங்கள்