வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 8 செப்டம்பர், 2021

ரயில்வர தாமதம்:பயணிகளுக்கு இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

 கடந்த 2016ல் ஜம்முவிலிருந்து ஸ்ரீ நகருக்கு ஒரு குடும்பத்தினர் ரயில்பயணம் மேற்கொள்ளவிருந்தனர். அவர்கள் செல்லவேண்டிய ரயில் வருவதற்கு நான்குமணிே நேரம் தாமதமாகியது.

இதனால் செல்லவேண்டிய இடத்துக்கு வாடகைக்காருக்கு  அதிக வாடகை கொடுத்து  அந்த குடும்பத்தினர் சென்றனர். 

பின்னர் இது  குறித்து அந்த குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். 

தேவையற்ற தாமதம், சேவைக்குறைபாடு என்று தொடரப்பட்ட இந்த வழக்கு  மாவட்டநுகர்வோர் மன்றம்,  மாநில நுகர்வோர் தீர்ப்பாயம், தேசியநுகர்வோர் தீர்ப்பாயம், என பல நீதிமன்றங்களுக்கு சென்றது.

அனைத்து நீதிமன்றங்களும் நுகர்வோருக்கு சாதகமாக தீர்ப்பளித்தநிலையில் அந்த தீர்ப்பை எதிர்த்து ரயில்வே துறை மேல்முறையீடு செய்துகொண்டிருந்தது. கடைசியாக உச்சநீதிமன்றத்துக்கு இந்த வழக்கு சென்றது.

விசாரணையின்முடிவில்  நீதிபதிகள் ஏழு பக்கங்களில் தீர்ப்பளித்தனர். 

‘‘போட்டியும் நம்பக்தன்மையும், தேவைப்படும் நாட்கள் இப்போது உள்ள நிலையில், பொதுத்துறை போக்குவரத்து நிலைத்திருக்க தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடவேண்டும். 

பணிக்கலாச்சாரத்தையும், செயல்முறையையும் மேம்படுத்தவேண்டும். 

அதிகாரிகள்  மற்றும் நிர்வாகத்தின் கருணையில் பயணிகள் இருக்கமுடியாது. 

ரயில்தாமதமாக  இயக்கப்பட்டதற்கு எந்தவிதமான ஆதாரங்களையும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கவில்லை. 

ஜம்முவிற்கு தாமதமாக  ரயில்வந்ததற்கான காரணம் இல்லை.  காரணங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதபோது  ரயில் தாமதமாக வந்ததற்கும் , புறப்பட்டதற்கும் ரயி்ல்வே சரியான காரணங்களை கூறுவது அவசியம். 

குறைந்த பட்சம் ரயில்தாமதாக வந்ததற்கு விளக்கம் அளிக்கவேண்டும் , அதிலும் ரயில்வே தோல்வி அடைந்துவிட்டது.

 பயணிகளுக்கு பயணி்க்கும் நேரம் விலைமதிப்பில்லாதது அடுத்தடுத்த பயணத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருப்பார்கள். 

இந்த வழக்கில்  ஜம்முவிலிருந்து ஸ்ரீ நகருக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்கள். 

ரயில் தாமதமாக இயக்கப்பட்டதற்கு எந்தவிதமான காரணமும், ஆதாரமும் இல்லாத நிலையில்  தாமதத்தை நியாயப்படுத்தாத நிலையில் , பயணிக்கு இழப்பீடு வழங்க ரயில்வே கடமைப்பட்டுள்ளது.

 எனவே ரயில்வேயின் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என நீதிபதிகள் தீர்பளித்தனர்.



ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு.

 தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தவறி விட்டனர், ஆக்ரமிப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நீர்நிலைகள் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டால் தான் வருங்கால தலைமுறைக்கு பயனுள்ளதாக இருக்கும்அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்  என அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தக்கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு.

 தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



உயர் கல்விக்கு ஊக்கத்தொகை : தமிழக அரசு அரசாணை வெளியீடு.

 ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதலாக பயின்ற உயர் கல்விக்கு ஊக்கத்தொகை வழங்க ,தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் நடைமுறையைப் பின்பற்றி ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. பி.எச்டி அல்லது அதற்கு நிகரான படிப்பு முடித்திருந்தால் ரூ.30ஆயிரம்  ஊக்கத்தொகை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.



குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம்.

 குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும், மதநல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை என்று பேரவை கருதுகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம், அகதிகளாக வருபவர்களை அவர்களின் நிலை கருதி அரவணைக்காமல் மத ரீதியாகவும், எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள் என்பதைப் பொருத்தும் ,பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்கவும்,  மதசார்பின்மை கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்திட ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



விநாயகர் சதுர்த்தி உத்தரவு.

 விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும் எ


ன்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


சார்நிலை பணி தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு.

 தமிழ்நாட்டில் வருகின்ற செப்.18ல் நடைபெறுகிற

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

www.tnpsc.gov.in. 

என்ற இணையதளத்தில் எழுத்துத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.



பக்கங்கள்