வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 31 ஆகஸ்ட், 2011

முல்லைப்பெரியாறு இடிக்கப்படும்: கேரளா.

                                                       
                     முல்லைப்பெரியாறு அணை இடிக்கப்படும்: கேரளா.

தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இடையே நடந்துவரும் முல்லை பெரியாறு குறித்த
பிரச்சனைக்காக அமைக்கப்பட்ட ஐவர்குழு முன்பு இன்று தமிழக மற்றும் கேரளா
வழக்கறிஞர்கள் வாதாடினர்.
  நீதிபதி ஆனந்த் முன்னிலையில் நடந்த இந்த விவாதத்தின்போது“ புதிய அணையை
கட்டக்கூடாது, தற்போதுள்ள அணை பலம் வாய்ந்துள்ளது. அதன் <உறுதி குறித்து
பலமுறை ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தரப்பட்டுள்ளது தற்போதுள்ள
அணைப்பகுதியை தவிர்த்துவிட்டு  தங்கள்பகுதியில் கேரள அரசு அணையை
கட்ட முயற்சிப்பது தவறு,அவ்வாறு புதிய அணையை கட்டினால், அந்த அணையின்
பாதுகாப்பு மற்றும் கையாளும் அதிகாரம்  கேரளாவின் கைவசம் இருக்கும்
”  என்று தமிழகத்தின்
சார்பில் வாதாடிய வழக்குரைஞர்கள் கிருஷ்ணகுமார், உமாபதி ஆகியோர்
கூறினர்.

  அணை 136 அடி மேலுக்குள் இருக்கக்கூடாது, புதிய அணையை கட்டியபின்னர்
பழைய அணையை இடித்துவிடவேண்டும் என தெரிவித்தனர்.

   நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு விவாதங்கள் முடிந்தபின்னர் வருகிற
அக்டோபர் மாதம் தங்களது அறிக்கையினை தாக்கல் செய்யும் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்