வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 16 அக்டோபர், 2014

செவ்வாய், 7 அக்டோபர், 2014

கரைபுரண்டது உற்சாகம்: கரைபோட்டது கர்நாடகா உயர்நீதிமன்றம்

         தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  மீதான சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரூ தனி நீதிமன்றம் கடந்த  செப்டம்பர் 27 ம்தேதி நான்கு வருட சிறை தண்டணையும் ரூ100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்ததை  அடுத்து தமிழக முதல்வராக  நீதிமன்றத்துக்கு சென்ற ஜெயலலிதா குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டார்.
       
             இதனை அடுத்து கடந்த பத்துநாட்களாக சிறையில் உள்ள ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கவேண்டும் எனக்கோரி அ.தி.மு.க வழக்கறிஞர்கள் மற்றும் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆகியோர் பெங்களூரு உயர்நீதி மன்றத்தில் வாதிட்டனர்.
          
           உயர்நீதிமன்றத்தில் 73 வது வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில்
வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியின் ஒன்னறை மணி நேர விவாதத்துக்கு பின்னர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
           
           இந்த விவாதங்களை       நீதிபதி      சந்திரசேகரா
 கவனமாக கேட்டுக்கொண்டிருந்தார்.
      
           இதனை அடுத்து அ.தி.மு.க தரப்பில் பிணை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இதன் எதிரொளியாக மீடியாக்களில் ஜெயலலிதாவுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை என்ற செய்தி ஓடியது.
     
             இதன் தாக்கத்தால் மாநிலம் முழுவதும் அ.தி.மு.க தொண்டர்கள் http://youtu.be/3pbRgXgpUbcபட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
    
              ஈரோடு மாவட்டம் சிவகிரியிலும் அந்த நிகழ்வு தொடர்ந்தது. சிவகிரி பேரூராட்சி தலைவர் பரமு தலைமையில் சிவகிரி பேரூர் அ.தி.மு.க துணை செயலாளர் குமார், பெரியசாமி, சுந்தரம், பூபாலன் உள்ளிட்டோர் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகளிரணியினருடன் பட்டாசுக்களை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது உற்சாகத்தை பங்கிட்டுக்கொண்டனர்.
    
           இதனை அடுத்து சிவகிரி நகரின் முக்கிய சாலைகள் வழியாக  பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியவாறு  ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலம் தொடங்கிய சற்று நேரத்திலேயே ஜெயலலிதாவுக்கு பிணை கிடைக்கவில்லை என்ற செய்தி தெரியவந்தவுடன் சோர்வுடன் ஊர்வலத்தை நிறுத்திக்கொண்டு திரும்பினர்


செவ்வாய், 30 செப்டம்பர், 2014

மொடக்குறிச்சி தொகுதியில்உண்ணாவிரதம்



            மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டணையைக்கண்டித்து

திங்கள், 29 செப்டம்பர், 2014

சிலோன்காலனி அ.தி.மு.க தொண்டர் மரணம்

                                                                  



ரோடு மாவட்டம் சிவகிரி அருகே அ.தி.மு.க தொண்டர் அதிர்ச்சியால் மரணம் அடைந்தார். ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள சிலோன்காலனியை சேர்ந்தவர் கணேசன்(58) கூலி தொழிலாளி. இவர் அ.தி.மு.க வில் தீவிர தொண்டராக இருந்தவர்.

       கடந்த 27 ம்தேதி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் அவருக்கு பெங்களூரு தனி நீதி மன்றம் சிறை தண்டணை வழங்கி தீர்ப்பளித்ததினால் கடந்த மூன்று நாட்களாக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க வினர் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

      அந்த வகையில் சிவகிரியிலும் கடை அடைப்பு ஆர்ப்பாட்டம் சாலை மறியல், கொடும்பாவி எரிப்பு என பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களில் பங்கு கொண்ட கணேசன். தொடர்ந்து மன உளைச்சலில் இருந்துள்ளார்.

      தீக்குளிக்கவும் முயன்றுள்ளார். இதனை அவரது பக்கத்து வீட்டினர் தடுத்துவிட்டனர். இந்த நிலையில்  இன்று அதிகாலை கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு  மரணம் அடைந்துள்ளார்.

 
                                     
                                            
     அந்த கடிதத்தில்  உங்களை கைது செய்த காரணத்தால் நான் என் உயிரை தியாகம் செய்கிறேன். உங்களுக்கு சிறைவாசம் நான்கு ஆண்டுகள் என கோரினா<லும் உங்களுக்காக என் முழு சிறையை ஏற்று என் உயிரை தியாகம் செய்கிறேன் என எழுதி வைத்துள்ளார்.

     இறந்த கணேசனது  மனைவி இல்லை. பிரபாகரன், கோபாலகிருஷ்ணன் என இரு மகன்கள் உள்ளனர். கணேசனது இறுதி சடங்கில் அ.தி.மு,க சார்பில் சிவகிரி பேரூராட்சி தலைவர் பரமு, கொடுமுடி ஒன்றிய செயலாளர் கலைமணி, இளைஞரணி இணை செயலாளர் பிரபாகரன், அ.தி.மு.க பிரமுகர் ரவி, உள்ளிட்டோர் கலந்துகொண்டு அவரது உடலுக்கு  மரியாதை செய்தனர்.



சனி, 27 செப்டம்பர், 2014

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டணை , சிவகிரியில் ஊர்வலம் , கொடும்பாவி எரிப்பு, ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது.

              

           
         ருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது பெங்களூரு நீதி மன்றம் குற்றவாளி என அறிவித்ததை அடுத்து தமிழகம் முழுவதும் அதிமுக வினர் பல்வேறு போரட்டங்களை நடத்தினர்.

    ஈரோடு மாவட்டம் சிவகிரியில் சிவகிரி பேரூராட்சி தலைவர் பரமசிவம் மற்றும் கொடுமுடி ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் பிரபாகரன் , சிவகிரி நகர துணை செயலாளர எம்..எஸ் உதயகுமார் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.கவினர் திரண்டனர்.

               இவர்கள் அனைவரும்  நகரின் முக்கிய வீதிகள் வழியாக  தி.மு.க தலைவர் கருணாநிதியின் உருவபொம்மையை ஏந்திக்கொண்டு கோஷங்களை இட்டவாறு சென்றனர். பின்னர் சிவகிரியின்  கடைவீதியில்  தீரன் சின்னமலை உருவச்சிலை அமைந்திருக்கும் இடம் அருகே ஒன்று கூடினர். பின்னர் தி.மு.க தலைவர்  கருணாநிதியின் உருவபொம்மையை ஆவேசமாக எரித்தனர்.

     இந்த சம்பவத்துக்கு பின்னர் மேலும் மேலும் திரண்ட அ.தி.மு.க வினர் சிவகிரியில் உள்ள கடைவீதியின் முன்பு பேருந்துகளை செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி மறியல் செய்தனர்.

      இதனைக்கண்ட கொடுமுடி போலிஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான குழுவினர் அவர்களை கைது செய்து கொங்குவேளாளர் திருமண மண்டபத்தில்  அடைத்து வைத்தனர்.

         இந்த நிகழ்வுகளில் சிவகிரி கூட்டுறவு வேளாண்மை தொழிற்மைய தலைவர் ராமசாமி, மாவட்ட துணை செயலாளர் லிங்கப்பன், சிவகிரி பேரூர் அவைத்தலைவர் தங்கவேல், வார்டு செயலாளர்கள் சுரேந்தர், சின்னியம்பாளையம் ராமலிங்கம், சன் டெக்ஸ் துணை தலைவர் கோபிநாத், முன்னாள் பேரூர் செயலாளர் மோகனசுந்தரம், கூட்டுறவு சங்க இயக்குனர்கள் குணசேகரன், 14 வது வார்டு செயலாளர் குணசேகரன், 6வது வார்டு செயலாளர் சபாபதி, 3வது வார்டுசெயலாளர் சோமசுந்தரம், கனகராஜ், தங்கவேல், சிற்றரசு, வரதராஜன் மற்றும் மகளிர் அணியினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கு கொண்டனர்.






திங்கள், 5 மே, 2014

ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அழைப்பு.


ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆர்.என்.புதூரில்  காவலர் குடியிருப்பு அருகில்  அரசு குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது.
இந்த காப்பகத்தில் 25 குழந்தைகள் தங்கி கல்வி பயிலும் வகையில் அரசு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

6வயது முதல் 10 வயது வரை உள்ள சிறுவர்கள் மற்றும்6 வயது முதல் 21 வரையுள்ள சிறுமிகள் வரை தாய் தந்தை இல்லாத அல்லது பெற்றோரே இல்லாத குழந்தைகள்  இந்த காப்பகத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

இந்த காப்பகத்துக்கு அருகிலேயே 10 அடி தூரத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது.

இங்கு தங்கி பயிலும் மாணவியர் +2 ல் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் அரசே  கல்லூரி செலவை ஏற்று உயர்கல்வி அளிக்கிறது. பொதுமக்கள் இந்த இல்லத்தில் குழந்தைகளை சேர்த்து பயன்பெறலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் மதுமதி அறிவித்துள்ளார்.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

கும்பாபிஸேக விழா

       ரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பெருமாள்கோயில்புதூரில்

ஸ்ரீ நந்தகோபாலகிருஷ்ணர் மற்றும் சித்திவிநாயகர், செல்வகணபதி,

விஸ்வக்சேனமகாகணபதி செல்வவிநாயகர்கோயில்களின் கும்பாபிஸேக

விழா  இன்று அதிகாலை 3.30 மணி முதல் 4.15 மணிவரை  நடந்தது.


       விழாவில் முன்னதாக  மகாகணபதி வழிபாடு உள்ளிட்ட பூஜைகள்

நடந்தன. பின்னர் மகாகும்பாபிஸேக விழா நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான

 பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

        கும்பாபிஸேகத்தை பிச்சுமணிகுருக்கள் முன்னின்று நடத்தி வைத்தார்.

பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை

பெருமாள்கோயில் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
http://youtu.be/EXBuXmoVHJw

மக்கள் வைத்த கோரிக்கைகளை நூறு சதவிகிதம் நிறைவேற்றி இருக்கிறேன்.


        ரோடு மாவட்டம் சிவகிரி அடுத்துள்ள நம்மகவுண்டன்பாளையத்தில் கட்டப்பட்ட பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கக்கட்டிடத்தை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., ஆர். என் கிட்டுச்சாமி

சனி, 8 பிப்ரவரி, 2014

சி.பி.ஐ முதல் பெண் கூடுதல் இயக்குனர் நியமனம்.



 

             
தமிழ்நாடு டி.ஜி.பியான அர்ச்சனா ராமசுந்தரம்,,கடந்த 1980 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். 

 அதிகாரியாக பொறுப்பேற்றார்.




  மதுரையில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடங்கி, நீலகிரி மாவட்ட 

 போலீஸ் எஸ்.பி., வேலூர் டி.ஐ.ஜி, உட்பட  பல்வேறு  பொறுப்புகளில் பணியாற்றியவர்.

 
 
இவர் ஏற்கனவே சி.பி.ஐ. யில் டி.ஐ.ஜி மற்றும் முதல் பெண்  இணை-இயக்குனர் 

பொறுப்புகளை வகித்தவர்.

பக்கங்கள்