வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

தொகுதியின் தேவைகள் என்ன ? சட்டப்பேரவையி்ல் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., டாக்டர் சரஸ்வதி பேச்சு.

 தமிழக சட்டபேரவையின் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று மொடக்குறிச்சி பா.ஜக எம்.எல்.ஏ., டாக்டர் சரஸ்வதி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.

அவர் பேசியதாவது: 

மொடக்குறிச்சி தொகுதியில்  உள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையத்தை தாலுக்கா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தவேண்டும். மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடியி்ல் உள்ள மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டிட வசதி ஏற்படுத்தி தரவே

ண்டும்.

 பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி. அரசு மருத்துவ கல்லூரியில் ஈரோடு, கரூர், திருப்பூர், சேலம் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன்கூடிய புற்றுநோய் சிகிச்சை மையம் ஏற்படுத்தவேண்டும். 

அம்மா மினிகிளினிக் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். மொடக்குறிச்சி தொகுதியில் போதை மற்றும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைக்கவேண்டும்.

 ஈரோடு மாவட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் இருப்பதால் அவர்கள் பயன்பெறும் வகையில் ஈரோட்டில் ஒரு ஈ.எஸ்.ஐ மருத்துவமனை அமைக்க மாநில அரசு முயற்சிமேற்கொள்ளவேண்டும். 

மொடக்குறிச்சி தொகுதியில் தென்னை மற்றும் அதன் விளைபொருட்கள் சார்ந்த தொழிற்சாலைகள் மற்றும் குளிர்பதன கிடங்கு அமைக்கவேண்டும், 

மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதியி்ல் விவசாய உபகரணங்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கவேண்டும். மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள அனுமன்நதி என அழைக்கப்படும் குரங்கன்பள்ளம் ஓடையினை தூர்வாரி தடுப்பணைகள் அமைக்கவேண்டும். 

கொடுமுடி வட்டத்தில் உள்ள கொடுமுடி முதல் நாமக்கல்மாவட்டத்தில் உள்ள பிலிக்கல் பாளையம் வரை காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கவேண்டும். 

கொடுமுடி வட்டம் நஞ்சை கொளாநல்லி ஊராட்சியில் உள்ள சத்திரம் பகுதியில் அங்கன்வாடிக்கு செல்லும் குழந்தைகள் ஈரோடு கரூர் ரயில்வே சாலையை கடந்து செல்ல புதிய சாலை அமைக்கவேண்டும். 

மொடக்குறிச்சி தொகுதி கொடுமுடிவட்டம் வெங்கம்பூர் பேரூராட்சி பகுதியில் உள்ள காசிபாளையம் ஊர்பொதுமக்கள் மயானத்துக்கு சென்றுவர புகளூரான் வாய்க்கால் வழியாக பாலம் அமைக்கவேண்டும்.

 கொடுமுடி தாலுக்காவில் உள்ள கருவேலம்பாளையம் மற்றும் ஊஞ்சலூர் வெள்ளியம்பாளையம் இடையே கதவனை அமைக்கவேண்டும். 

கொடுமுடி தாலுக்காவில் உள்ள கிளாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட சொக்கநாச்சிஅம்மன்கோயி்லுக்கு செல்லும் வழியில் பழுந்தடைந்த நிலையி்ல் உள்ள மண்பாலத்தை சீரமைக்கவேண்டும். 

கொடுமுடி தாலுக்கா ஊஞ்சலூரில் உள்ள வள்ளியம்பாளையம் பகுதியில் உள்ள பாலத்தினை அகலப்படுத்தவேண்டும். 

கொடுமுடி தாலுக்காவில் உள்ள பாசூரில் ரயி்ல்வே பாலம் அமைக்கவேண்டும். கொமுடிவட்டத்தில் உள்ள வெற்றிக்கோனார்பாளையத்தில் அங்கன்வாடி மையம் அமைக்கவேண்டும். 

மொடக்குறிச்சி தொகுதியில்  தாலுக்கா விளையாட்டு உள் அரங்கம் அமைக்கவேண்டும்.  பூந்துறை குளத்தினை சுற்றுலாத்தலமாக அமைக்கவேண்டும். 

கொடுமுடியில் பழமைவாய்ந்த மற்றும் மும்மூர்த்தி ஸ்தலமாக விளங்கக்கூடிய மகுடேஸ்வரர் வீரநாராயணப்பெருமாள் திருக்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ஆன்மீக சுற்றுலாதலமாக அமைக்கவேண்டும்.  

தமிழக விவசாயிகளுக்கு ஆட்கள் கூலி உயர்ந்துவிட்டதால் விவசாயம் செய்ய சிரமமாக உள்ளது. இதற்கு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வரும் ஆட்களை விவசாய வேலை செய்ய உதவி செய்தால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் விவசாயிகளுக்கு பெரும்  உதவியாக இருக்கும். 

மொடக்குறிச்சி தொகுதியில் விவசாய விளைபொருட்களான வாழைக்காய் மண்டி மஞ்சள் மண்டி மற்றும் ஒழுங்குமுறை விற்பனைகூடம் அமைக்கவேண்டும்.

 வளந்தான்கோட்டையில் பகுதிநேர கால்நடை மருத்துவமனை உள்ளது. அதற்கு பத்து வருடமாக கட்டிடம் இல்லாமல் தனியார் கட்டிடத்தில் உள்ளது. இதற்கு அரசு கட்டிடம் அமைக்கவேண்டும்.

 சிவகிரி கிராமம் சிலுவம்பாளையத்தில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகம் அமைய புதிய கட்டிடம் அமைக்கவேண்டும் என்று பேசினார்.



சிவகிரி , அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ 36 .56இலட்சத்துக்கு விளைபொருட்கள் விற்பனை.

 ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று எள்  விற்பனைக்கான  ஏலம் நடைபெற்றது.

இதில்  சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 216 மூட்டைகளில் 16 ஆயிரத்து126 கிலோ எடையுள்ள எள்ளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். 

இதில் கருப்பு ரக எள் குறைந்தபட்ச விலையாக ரூ76 . 39 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ101. 99 காசுகள், சராசரி விலையாக ரூ96 .59 காசுகள் , 

சிவப்பு ரக எள் குறைந்தபட்ச விலையாக ரூ75 .19 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ124 .11 காசுகள், சராசரி விலையாக ரூ 92 .72 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ15 இலட்சத்து 36 ஆயிரத்து 878 ரூபாய்க்கு விற்பனை  செய்யப்பட்டது.

இதேபோல

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  நடந்த தேங்காய் பருப்பு விற்பனையில்  22 ஆயிரத்து 72 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு  விற்பனை செய்யப்பட்டது. இதில் முதல் தர பருப்பு குறைந்தபட்ச விலையாகரூ 99 . 39 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ103 .49 காசுகள், சராசரி விலையாக ரூ103 39 காசுகள்,இரண்டாம் தர பருப்பு  குறைந்தபட்ச விலையாக ரூ75  89 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ 95 .32 காசுகள், சராசரி விலையாக ரூ91 . 99 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ21 இலட்சத்து 19 ஆயிரத்து 270 ரூபாய்க்கு விற்பனையானது.

ஆக சிவகிரி அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மொத்தம் ரூ36லட்சத்து 56 ஆயிரத்து 148க்கு விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.


புதன், 1 செப்டம்பர், 2021

இந்த வருடம் அதிகம்....

 தமிழகத்தில் 2021,க்கான பருவமழை  ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை,  வழக்கமான இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது. 

வழக்கமாக இந்த காலகட்டத்தில்,  தமிழகம் பெறவேண்டிய மழைப்பொழிவு 217.8 மி.மீ ஆக இருந்துவந்த நிலையி்ல் நடப்பு ஆண்டில்  275.8 மி.மீ   பெய்து , இயல்பை விட 27 சதவிகிதம்  அதிகமாக பெய்துள்ளது. 



அறைக்குள் சிக்கிய குழந்தை...

 திண்டுக்கல்லில் உள்ள  மேங்கில்ஸ்ரோடு  பகுதியில் கே.எஸ்.ஆர் என்ற அப்பார்ட்மெண்ட்டில் உள்ள ஒரு  வீட்டினுள் குழந்தை ஒன்று  வீட்டின் உள் பக்கம் சென்று கதவை தாளிட்டுக் கொண்டு விட்டது.

இதனால் அறைக்குள் சிக்கிக்கொண்டு குழந்தை தவிப்பதை அறிந்த திண்டுக்கல் மாவட்ட தீயணைப்புத் துறையினர் குழுவினருடன் சென்று குழந்தையை  பத்திரமாக மீட்டுள்ளனர்.





முருங்கைக் கீரை : முக்கிய பயன்கள்.

 முருங்கை மரத்தில் ("Moringa oleifera") இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை, முருங்கைப் பூ தமிழர்களால் அதிகம் உண்ணப்படும் ஒரு உணவு ஆகும்.  

 

இதன் தாவரவியல் பெயர் "Moringa oleifera". இதில் "muringa" என்ற பெயர் , "முருங்கை" என்ற தமிழ் வார்த்தையில் இருந்து வந்தது ஆகும். 

இதில் உள்ள சத்துக்கள்.

 தண்ணீர் : 63.8% 

புரதம் : 6.1% 

கொழுப்பு : 10% 

தாதுஉப்புக்கள் : 4% 

நார்ச்சத்து : 6.4% 

மாவுச்சத்து : 18.7% 

வைட்டமின் ஏ : 11300/IU 

வைட்டமின் பி : 0.06 மில்லி கிராம் 

(தயாமின்) (100 மில்லி கிராம் கீரைக்கு) 

சுண்ணாம்புச் சத்து : 440 மில்லி கிராம் 

குளோரின் : 423 மில்லி கிராம் 

இரும்புச் சத்து : 259 மில்லி கிராம் 

ரைபோஃபிளேவின் : 0.05 மில்லி கிராம் 

கந்தகச் சத்து : 137 மில்லி கிராம் 

மாங்கனீஸ் : 110 மில்லி கிராம் 

நிகோடினிக் அமிலம்: 0.8 மில்லி கிராம் .

வைட்டமின் சி : 220 மில்லி கிராம் 

 *முருங்கைக் கீரையில் சிறந்த உயிர்ச்சத்துக்களும், தாதுஉப்புக்களும், மாவு, புரதப் பொருட்களும், சுண்ணாம்பு, மாங்கனிஸ், மணிச்சத்து, இரும்புச் சத்துக்களும் உள்ளன. 

முருங்கையின் பயன்கள்.....

  *கண்ணுக்கு மிகவும் நல்லது.  

*மலச் சிக்கலைத் தீர்க்கும். 

  *தாது உப்புகள் இந்த கீரையில் ஓரளவுக்கு இருப்பதால் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். எலும்பு உறுதி பெறும். 

 *வைட்டமின் சி அதிகமாக இருப்பதனால், அதை உணவாக உட்கொள்ளும்போது, சொறி சிரங்கு நோய்கள், பித்தமயக்கம், கண்நோய், செரியா மாந்தம், கபம் முதலியவை குணமாகின்றன. 

 * முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும். 

 *நன்கு பசுமையாகவும், இளசாகவும் உள்ள முருங்கை காய்களை எடுத்து, இடித்து சாறி பிழிந்து, அத்துடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட ஜலதோசம் குணமாகும். 

 *கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும். 

 *முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.  

 *முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும்.  இதை ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். 

 * முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும். 

 *முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. 

 * முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். 

 * இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.



காவல் ஆய்வாளர்களுக்கான பயிற்சி முகாம்: தமிழக முதல்வர் துவக்கி வைப்பு.

 சென்னை வண்டலூர் ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவலர் உடற்பயிற்சியகத்தில் உதவி ஆய்வாளர்களுக்கான ஒரு ஆண்டுக்கான பயிற்சி நடந்தது.

இதனை  தமிழக முதல்வர் மு.கஸ்டாலி்ன் காணொளி காட்சி மூலம்  துவக்கி வைத்தார்.



அதிகரிக்கும் விடுமுறை :குறையும் மாத சம்பளம் : அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது புதிய விதி!

 மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, ஒப்புதல் பெறப்பட்ட புதிய Wage Code கொள்கையின் மூலம் ஊழியர்களின் வேலை நேரம், சம்பள கணக்கீட்டு, பிஎப் தொகை, கிராஜுவிட்டி ஆகியவை முக்கிய மாற்றங்களை பெறவுள்ளது.

இந்த புதிய ஊதிய விதிகள் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய ஊதியக் குறியீடு சட்டம் 2019இதன்படி

ஊழியர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கவுள்ளது. 

தற்போது ஒரு நாளுக்கு 8 மணி நேர வீதம் 6 நாள்களுக்கு 48 மணி நேரமாக தொழில் நிறுவனங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

புதிய மாற்றங்களில் ஒரு வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்களிடம் வேலை வாங்க வேண்டும் என்ற விதி அப்படியே இருக்கும். 

மாறாக ஒரு நாளுக்கான வேலை நேரம் அதிகரிக்கப்படவுள்ளது. ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை வாங்கினால் 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை தர வேண்டும். 

மீதமிருக்கும் மூன்று நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இது ஒவ்வொரு தொழிலாளியின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டும். 

உடல் நலம் பாதிப்பு, பிரசவம் போன்ற காரணங்களுக்காக அதிகபட்சம் 240 வரை விடுமுறை எடுக்கலாம் என்றிருந்தது.  தற்போது 300 நாட்களாக உயர்த்தப்படவுள்ளது.

புதிய விதிகளின்படி ஊழியர்களுக்குக் கொடுக்கும் அடிப்படை ஊதியம் (Basic Salary) குறைந்தபட்சம் 50 சதவீதம் இருக்க வேண்டும். 

இதுதவிர வழங்கப்படும் வீட்டு வாடகை படி, அகவிலைப் படி, பயண படி உள்ளிட்டபடி தொகை 50 சதவிகிதத்துக்கு மேல் செல்லக் கூடாது. 

அடிப்படை ஊதியம் அதிகமானால் பிஎஃப் பிடித்தமும் அதிகரிக்கும். இதனால் மாத சம்பளம் இனி குறையும்.  ஓய்வுபெற்ற பின் கிடைக்கும் தொகை உயரும்.



இந்தியாவில் ஆயுளை குறைக்கும் காற்று மாசு: அதிர்ச்சி தகவல்.

 இந்தியாவின்  டெல்லி  உள்ளிட்ட மத்திய , கிழக்கு  மற்றும் வட பகுதிகளில் வாழும் 4 கோடியே 80 லட்சம் மக்கள் அதிக அளவிலான காற்று மாசினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அந்த மக்களின் ஆயுள் 9 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்புள்ளது என அமெரிக்காவின் சிகாகோ  ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது.

முன்னதாக  சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஐக்யூ ஏர் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில் உலகின் மாசு அதிகமுள்ள தலைநகரங்களின் பட்டியலில் டெல்லி தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. 

 2019ஆம் ஆண்டு, இந்தியாவில் தொடங்கப்பட்ட இந்தியாவின் தேசிய தூய்மை காற்றுதிட்டம்  தொழிற்சாலைகளின் உமிழ்வுகள் மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசுவை குறைப்பது, உயிரி எரிப்பதிலும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் பயன்பாட்டிலும் கடுமையான விதிகளை அமல்படுத்துவது, தூசு மாசுவை குறைப்பது, கண்காணிப்பு உபகரணங்களை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.



சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ17. 6 லட்சத்துக்கு நிலக்கடலை காய் விற்பனை.

 ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை காய்  விற்பனைக்கான ஏலம் இன்று நடைபெற்றது. 

இதில் சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 829 மூட்டைகளில் 27 ஆயிரத்து 121 கிலோ எடையுள்ள நிலக்கடலை காயை  விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். 

இதில் ஒரு கிலோ நிலக்கடலைக்காய்  குறைந்தபட்ச விலையாக ரூ57 .06 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ67 .00 காசுகள், சராசரி விலையாக ரூ62 .39 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ 17 இலட்சத்து 6 ஆயிரத்து 238 க்கு விற்பனையானது.



ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு உடனுக்குடன் அடங்கல் சான்று வழங்க உத்தரவு.

 ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் நலனைக்கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 1431 ம்பசலி ஆண்டிற்கான அடங்கல் சான்றுகோரி வரும் விவசாயிகளுக்கு காலதாமதமின்றி உடனுக்குடன் அடங்கல் சான்று வழங்க அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்குமாறு சார்நிலை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என  ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன்  சுற்றிக்கை வெளியிட்டுள்ளார்.



செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

தாமரைப்பாளையம் , கருத்திபாளையத்தில் ரூ20லட்சத்தில் பணிகள் துவக்கம்: தி.மு.க மாநில நிர்வாகி பங்கேற்பு.

 கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இச்சிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கருத்திபாளையம் கிராமத்தில் இருந்துவரும் சுடுகாடு கடந்தபல வருடங்களாக சீரற்ற நிலையில் இருந்து வந்தது.

இதனை சீரமைத்து தருமாறு அந்தக்கிராமத்தை சேர்ந்த மக்கள் உங்கள் தொகுதியின் முதல்வர் திட்டத்தின் கீழ் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

இதனை ஏற்ற தமிழகஅரசு  ரூ10 லட்சம் மதிப்பில் கருத்திபாளையம் சுடுகாட்டை சீரமைக்கும்  முயற்சிக்கு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகள் இன்று கருத்திபாளையத்தில் நடந்தது.

அதேபோல தாமரைப்பாளையத்தில்  ரூ 10 லட்சம் மதிப்பில்  காங்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.இந்த இரண்டு பணிகளுக்குமான பூமி பூஜையில் தி.மு.க வின் மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப சச்சிதானந்தம், துவக்கி வைத்தார்.





எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ 85.15 இலட்சத்துக்கு தேங்காய்பருப்பு விற்பனை.

 ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு  விற்பனைக்கான ஏலம் இன்று  நடைபெற்றது. 

இதில்  சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1773 மூட்டைகளில் 83 ஆயிரத்து 774 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பை  விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர்.  

இது முதல்தரபருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ101.19 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ105 .25 காசுகள், சராசரி விலையாக ரூ105 .25 காசுகள்,

இரண்டாம் தர பருப்பு  குறைந்தபட்ச விலையாக ரூ74. 89 காசுகள், அதிகபட்ச விலையாகவிலையாக ரூ97 .39 காசுகள்,  சராசரி விலையாகவிலையாக ரூ 94 39 காசுகள் என்ற விலைகளில்  மொத்தம் ரூ85 இலட்சத்து 15 ஆயிரத்து 937 க்கு விற்பனை செய்யப்பட்டது.



சிவகிரியில் தி.மு.க கருத்துக்கேட்புக்கூட்டம்.

 சிவகிரி மகாமாரியம்மன்கோயில் திருமணமண்டபத்தில் இன்று தி.மு.க மாநில நெசவாளர் அணியின் சார்பில் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கருத்துக்கேட்புக்கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு தி.மு.க மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப சச்சிதானந்தம் தலைமை வகித்தார். கொடுமுடி மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் நடராஜன், கொல்லங்கோயில் பேரூர் செயலாளர் சந்திரசேகர், சிவகிரி பேரூர் செயலாளர் கோபால், ஒன்றிய துணை செயலாளர் பாபுராஜா, முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 

‘‘நெசவாளர்களுக்கான அடிப்படை ஊதியம் கடந்த 20 ஆண்டுகளாக  மாறாமல் உள்ளது அதனை மாற்றித்தரவேண்டும். கைத்தறி ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்பட்டுவருகின்றன அவற்றை தடை செய்யவேண்டும். நெசவாளர்களுக்கான ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்கவேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு அச்சு,மற்றும் நாடாக்களை முன்பிருந்ததுபோல அரசே வழங்கவேண்டும். விலைவாசிக்கேற்ப கூலி உயர்வு வழங்கவேண்டும். நெசவாளர் நல காப்பீட்டுத்தொகையை அதிகரித்து அதனை செயல்படுத்தவேண்டும்.  சங்க பணியாளர்களுக்கு வழங்கப்படும் போனஸ் மற்றும் கருணை தொகைய  ரூ6 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும்.

 கைத்தறி ஜவுளிகளுக்கு ஜி.எஸ்.டியிலிருந்து விலக்கு அளிக்க வழிவகை செய்யவேண்டும். நெசவாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழான மானிய தொகையை ரூ5 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும்.

 நெசவாளர் சங்க உறுப்பினர்களுக்கு வட்டி இல்லாமல் கடன் வழங்கவேண்டும். நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய  மனுக்களை நெசவாளர்கள் மற்றும் கைத்தறி சங்க பணியாளர்கள் அளித்தனர்.’’




கொரமங்களாவில் கோரவிபத்து ஏழு பேர் பலி.

 பெங்களூர் கொரமங்களாவில் அதிகவேகமாக சென்ற கார் சாலையின் பக்கவாட்டிலிருந்த மின்கம்பத்தில் மோதி நொறுங்கியதில் காரில் சென்ற மூன்றுபெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் பலியாகினர். 

பலியானவர்களில் ஒருவர் ஒசூர் எம்.எல்.ஏ.,  பிரகாஷ்சின்  மகன் கருணாசாகர் (24) என்பது தெரியவந்துள்ளது.

இன்று அதிகாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.



திங்கள், 30 ஆகஸ்ட், 2021

கடைசியில் ரயிலையும் தள்ளிவிட வேண்டியதாகிவிட்டது.

 மத்தியப் பிரதேசத்தில்  ஹர்த் என்ற இடத்தில் ரயிலில மின்சார வயர்களை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டபோது தொழில்நுட்பகோளாறால்  ஏற்பட்ட  பழுதான ரயிலை  ரயில்வே ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த மக்கள் பலர் சேர்ந்து ஒரு தண்டவாளத்திலிருந்து வேறு தண்டவாளத்துக்கு பேருந்து போல் கைகளால் தள்ளிச் சென்றனர்.

பக்கங்கள்