வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 10 நவம்பர், 2011

ஐப்பசி பௌர்ணமி அன்னபிஸேகம்...

                                                ஈரோடு மாவட்டத்தில்
 ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று கொடுமுடி , மற்றும் சிவகிரி, ஊஞ்சலூர் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில்
அன்னபிஸேகம் நடந்தது.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

நேற்று ஐப்பசி மாத பௌர்ணமி. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிவனுக்கு அன்னாபிஸேகம் நடந்தது. பிரசித்திபெற்ற கொடுமுடி மகுடேஸ்வரர்கோயில், ஊஞ்சலூர் நாகேஸ்வரர்கோயில், சிவகிரி வேலாயுதசுவாமிகோயில், தலையநல்லூர் நாகேஸ்வரர்கோயில்களில் மூலவருக்கு அன்னாபிஸேகம் நடந்தது.

சமைக்கப்பட்ட வெண்சாதத்தால் சிவனுக்கு அபிஸேகம் நடந்தது. இதனை அடுத்து சிறப்பு அபிஸேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. இதனை அடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.

சிவகிரி நாகேஸ்வரர்கோயிலில் அன்னாபிஸேகமும், அதனை அடுத்து சுவாமிக்கு சிறப்பு அபிஸேகமும், அதனை அடுத்துசுமங்கலிபூஜையும்,  பின்னர் மூலவருக்கு சிறப்பு ஆராதனைகளும் நடந்தன.
                                                    
இந்த பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.பின்னர் பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னபிஸேக விழாவை முன்னிட்டு அன்பே சிவம் என்ற தலைப்பில் ஈரோடு  நாகசரஸ்வதியின் பக்தி சொற்பொழிவு நடந்தது.
                    

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்