வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

என் தந்தையை... வாழ அனுமதியுங்கள்

                                                  வாழ அனுமதியுங்கள்



 முருகன்-நளினி தம்பதியின் மகள் அரித்ரா   காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முதல்வர்

 ஜெயலலிதாவுக்கு   எழுதியுள்ளார். 

20 வயதாகும் அரித்ரா  லண்டனில் வசித்து வருகிறார்.

 வேலூர் சிறையில் பிறந்தார்.   இன்று வரை பெற்றோருடன்

சேர்ந்து வாழ முடியாத நிலையில்  உள்ளார்


 காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும்

முதல்வர் கடிதம் ஜெயலலிதாவுக்கு  கடிதம்  எழுதியுள்ளார்.

சோனியாவுக்கு  எழுதியுள்ள கடிதத்தில்...

ஒரு பெண்ணாக, உங்களின் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

 உங்கள் மகள், மகன் தங்களது தந்தையை இழந்து வாடும் பிரிவை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

தந்தை, தாய் இல்லாமல் வாழும் எந்தக் குழந்தையும் எப்படிப்பட்ட சிரமங்களை சந்திக்கும்

என்பதை உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.

இன்று அதே நிலையில்தான் நான் உள்ளேன். பெற்றோர் இருந்தும் அவர்களுடன்

 சேர்ந்து வாழ முடியாத அவல நிலையில் உள்ளேன். உங்களது மகள் தந்தையை இழந்து

வாடுவதைப் போல நானும் தந்தையை இழந்து வாடப் போகிறேன்

 என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.

எனது தாயாருக்கு கருணை காட்டி, மனம் இரங்கி, மன்னித்து

ஆயுள் தண்டனையாக மாற்றி எனக்கு அருள் புரிந்தீர்கள்.

இன்று அதேபோல எனது தந்தைக்கும்

மனம் இரங்கி, அவரை மன்னித்து எனக்காக அவரது

 உயிரைக் காப்பாற்றுங்கள். எனது அப்பாவுடன் நான் சேர்ந்து வாழ அனுமதி கொடுங்கள். எனது

தந்தையை மன்னியுங்கள் :- அரித்ரா.


கருத்துகள் இல்லை:

பக்கங்கள்