வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 29 டிசம்பர், 2011

வாங்கமறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்



 அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்கவேண்டும் என  கொடுமுடி நகர 

மனித கழிவுகள் எங்கே?தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் மனு

வேளாண் விளைபொருட்களின் கழிவுகளின் மனித கழிவுகளும் எங்கே? என்று கேட்டு தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ்

அரசு ஊழியர்களாக ஆக்கப்படவேண்டும்

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டப்பயனாளிகள் அனைவரும் அரசு ஊழியர்களாக ஆக்கப்படவேண்டும்

ரூ127.4 கோடி வீண்

                                                             
திருப்பூர் சாயக்கழிவு நீரை பூஜ்ய நிலைக்கு கொண்டுவர தரப்படும் ரூ127.4 கோடி வட்டியில்லா கடன் வீணாகும் என தமிழ்நாடு கள் இயக்கத்தலைவர் நல்லசாமி கூறியுள்ளார்.

பறிக்கப்பட்ட பதவிக்கு பலர் போட்டி

கொடுமுடி யூனியன் சேர்மன் தேர்தல் எதிரொளியால் அ.தி.மு.க வின் மாவட்ட பொறுப்பு மற்றும் ஒன்றிய பொருப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள்

புதன், 28 டிசம்பர், 2011

கொடுமுடி யூனியன் சேர்மன் தேர்தல் எதிரொளியால் அ.தி.மு.க வின் மாவட்ட பொறுப்பு மற்றும் ஒன்றிய பொருப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் வகித்துவந்த பதவிக்கான இடங்களை கைப்பற்ற தீவிர போட்டி ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி யூனியனுக்கான  மொத்த கவுன்சிலர் ஆறுபேர்.  மாநில அளவில் நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது இந்த ஆறு பேரும் மக்களால் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட ஆறுபேரில் சுப்பிரமணியம், விஜயலட்சுமி, தமிழ்செல்வி, வீரண்ணன் ஆகியோர் அ.தி.மு.க வைச்சேர்ந்தவர்கள். மற்ற இருவரான மணி என்கிற வேலுசாமி, வாசுதேவன் ஆகியோர் சுயேட்சை வேட்பாளர்கள்.
இவர்களில்  சுப்பிரமணியத்தை சேர்மன் பதவிக்கான வேட்பாளராக கட்சி அறிவித்தது.  இவரை சேர்மனாக தேர்வு சில கவுன்சிலர்கள் மறுத்தனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 29 ம்தேதி கொடுமுடியூனியன் சேர்மனுக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தேர்தல் நாளான்று சேர்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுப்பிரமணியத்தை சுயேட்சை கவுன்சிலர்களின் ஆதரவாளர்கள் சிலர் கடத்திவிட்டதாக  சுப்பிரமணித்தின் தந்தை குழந்தைசாமி கொடுமுடி போலிசாரிடம் புகார் தந்தார்.
இந்த புகாரின் விளைவால் தேர்தல் தள்ளிப்போனது. இதற்கிடையே சுயேட்சை கவுன்சிலர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் கொடுமுடி யூனியன் சேர்மன் தேர்தலை மாவட்ட கலெக்டர் மற்றும் சூப்பிரண்டின் மேற்பார்வையில் நடத்தவேண்டும். தங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் எனக்கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
இதே போல யூனியன் தேர்தலை விரைந்து நடத்தவேண்டும் எனக்கேட்டுதேர்தல் ஆணையத்துக்கும் ஒரு கோரிக்கை வைத்தனர்.
இந்த சம்பவங்களுக்கு  இடையில் கவுன்சிலர்களை நேரில் அழைத்து பல முறை பேச்சுவார்த்தைகளை நடத்தினர்  தமிழக அமைச்சர்கள்.  ஆனால் அது பயனின்றிப்போனது.
கோரிக்கைகளின் விளைவாக…நவம்பர் மாதம் 30ம்தேதி  கொடுமுஐ யூனியன் சேர்மன் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மாவட்ட கலெக்டர் மற்றும் சூப்பிரண்டு மேற்பார்வையிலும் வீடியோ காட்சி பதிவுடனும் தேர்தல் நடத்தப்படவேண்டும் என  உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் சென்ற மாத இருதியில் தேர்தல் நடந்தது. தேர்தல் நாளன்று கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கவுன்சிலர் சுப்பிரமணியம் சேர்மன் பதவிக்காக போட்டியிட வந்தார்.
மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை அ.தி.மு.க கவுன்சிலர் விஜயலட்சுமி முன்மொழிந்தார். மேற்கொண்டு வழிமொழிய எந்த கவுன்சிலரும் முன் வராததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இவருக்கு எதிராக சேர்மன் பதவிக்கு மற்றொரு அ.தி.மு.க கவுன்சிலர் தமிழ்செல்விமனுத்தாக்கல் செய்தார் . தமிழ்செல்வியின் மனுவை  அ.தி.மு.க கவுன்சிலர்களில் ஒருவரான வீரன் முன்மொழிந்தார். சுயேட்சை கவுன்சிலர் வேலுசாமி வழிமொழிந்தார்.
இதனால் தமிழ்செல்வி சேர்மனாக தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
அதேபோல துணை சேர்மனாக வேலுசாமி தேர்வு செய்யப்பட்டார்.
சேர்மன் தேர்தல் இந்தக்கட்டத்துடன் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு எதிராக வேலை செய்ததாக கூறி சம்பந்தப்பட்ட ஒன்றியத்தின் செயலாளர் கலைமணி, மற்றும் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செல்வகுமார சின்னையன், தொகுதி எம்.எல்.ஏ., கிட்டுச்சாமி ஆகியோர் மீது புகார்கள் சென்றன.
இதன்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒன்றிய செயலாளர் கலைமணியும், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சின்னையனும் அவர்கள் வகித்து வந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
எம்.எல்.ஏ., கிட்டுச்சாமி வகித்துவந்த மாவட்ட அண்ணாதொழிற்சங்க செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
தற்போது காலியாக உள்ள  கொடுமுடி ஒன்றிய செயலாளர் இடத்துக்கு… கடந்த முறை யூனியன் சேர்மனாகவும்,  தற்போது சுயேட்சை வேட்பாளர் வேலுசாமியால் தோல்விக்குள்ளானவருமான மாவட்ட இளைஞரணி செயலாளர் சந்திரசேகரின் ஆதரவாளர்களும், சென்னையில் முகாமிட்டு கட்சி தலைமையின் கவனத்தை பெற முயற்சி செய்துவருகின்றனர்.
இந்த நிலையில்  கொடுமுடி  ஒன்றியத்தில் வசித்துவருபவரும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் தனிச்செயலாளராக  இருந்த பரமசிவத்தின் சகோதரி மகனும், மொடக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர்களில் ஒருவராகிய அமராவதிபுதூர் சேகர் பெயர் ஒன்றிய செயலாளர் பதவிக்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை கோஷ்டி அரசியலில் சிக்கிகொள்ளாத இவரது பெயர் கட்சியினர் மத்தியில் தற்போது அதிகமாக பேசப்பட்டுவருகிறது.
இது தவிர கொடுமுடி ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் சுள்ளிமடை செல்வராசும் இந்த பதவிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பதவி பறிக்கப்பட்டவர்களும் மீண்டும் தங்களது இடத்தை கைப்பற்ற முயன்று வருகின்றனர்.

ஐயப்பனை வட்டமிடும் கருடன்

                                                   

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே  ஊஞ்சலூரில் உள்ள நாகேஸ்வரர்கோயிலில் ஐயப்ப சுவாமிக்கு ஆராதனை

கொலைவெறி அழைப்பு

 பிரதமருக்கு  விருந்தில் கொலைவெறி

திங்கள், 26 டிசம்பர், 2011

பெரியாறு…பெரியார்


                                           
கரூர் பஸ்நிலையம் பின்புறம் ரவுண்டான எதிரில் உள்ள சுவரில் முல்லைப்பெரியாறு  அணையைக்காக்க நடக்கும் பொதுக்கூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சுவர் விளம்பரத்தில் … பெரியாறு…பெரியார் ஆகியுள்ளது.
வரும் சந்ததியினருக்கு நமது கவனக்குறைவால் செய்யும் சிறு தவறு வரலாற்று போக்கை புரிந்துகொள்ள முடியாமல் செய்துவிடும் … தவறுகளை களைவோம்… கவனமுடன் செயல்படுவோம்.

வெள்ளி, 9 டிசம்பர், 2011

வியாழன், 1 டிசம்பர், 2011

ஞாயிறு, 27 நவம்பர், 2011

சம்ப்ரோஷ்ண விழா

                                                               

 சிவகிரி திரு.வி.க தெருவில் உள்ள ஸ்ரீவிஜயலட்சுமி தாயார் சமேத கல்யாண வெங்கடேசப்பெருமாள் கோயிலுக்கு புதிய உற்சவர் திருமேனி செய்யப்பட்டுள்ளது.

இந்த திருமேனிக்கான சம்ப்ரோஷ்ண விழா நேற்று கோயிலில் நடந்தது. காலை 9 மணிக்கு நடந்த சம்ரோஷ்ண விழாவில் ப்ராணபிரதிஷ்டையும், புருஷ்ஸீக்த, ஸ்ரீ ஸீக்ரத, சுதர்ஸன, சகஸ்ரநாம, ஸரனாகதி சத்ய ஹோமங்கள் நடைபெற்றன.

இதனை அடுத்து சுவாமிக்கு திருமஞ்சனமும், அதனை அடுத்து மஹாதீபாரதனையும் நடந்தன. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

முற்றுப்புள்ளி

ஈரோடு மாவட்டம் கொடுமுடி யூனியன் சேர்மன் தேர்தல் கடந்த மாதம் 29 ம்தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த  யூனியனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க கவுன்சிலர்களில் 4 பேர் அ.தி.மு.க வைச்சேர்ந்தவர்கள். மீதம் 2 பேர் சுயேட்சைகள்.

வெள்ளி, 25 நவம்பர், 2011

பலி வாங்கிய பாதை

                                                    

ஈரோடு மாவட்டம்
கொடுமுடி யூனியனில் உள்ள கிளாம்பாடி பஞ்சாயத்தில் உள்ள காளிங்கராயன் கால்வாயின் வெள்ளத்தடுப்பு மதகுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர்

கொடுமுடி ஒன்றியக்குழு தேர்தல் முடிவுக்கு கொண்டுவர அமைச்சர் முயற்சி.


  கொடுமுடி யூனியன் சேர்மன் தேர்தலில் நடந்துவரும் குழப்பங்களை தீர்க்க

அரசு மருத்துவ மனைக்கு பணியாளர்கள்...

                                                            
                                                                                                    


ஐ.எஸ்.ஓ தரத்துக்கு இணையாக செயல்பட்டுவரும் அரசு மருத்துவ மனைக்கு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால்

கடத்தப்பட்ட கவுன்சிலர் சரண்டர்?! காத்துக்கிடக்கும் கட்சி பிரமுகர்கள்.


 கொடுமுடி யூனியனுக்கான  சேர்மன் வேட்பாளராக அ.தி.மு.க வால் அறிவிக்கப்பட்டு தேர்தல் நாளன்று கடத்தப்பட்டவர்

நடவடிக்கை எடுக்கவேண்டும்....

ஈரோடு மாவட்டம்
கொடுமுடி யூனியன் சேர்மன் தேர்தலில் கட்சி அறிவித்த சேர்மன் வேட்பாளருக்கு எதிராக செயல்படும் அ.தி.மு.க வினர் மீது கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும் என

செவ்வாய், 22 நவம்பர், 2011

நன்றி...

                                                                

ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழுவின் 19வது வார்டு உறுப்பினர் தேவகிசேகர்

திங்கள், 21 நவம்பர், 2011

மாடுகள் கொத்து கொத்தாக...

                                                     
ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியில் இனம் புரியாத நோயால்

பஸ்கட்டணம்...பால் விலை



 கொடுமுடி புதிய பஸ்நிலையம் அருகே...

நவம்பர் 30ல் கொடுமுடி யூனியன் சேர்மன் தேர்தல். வீடியோ பதிவு, போலிஸ்பாதுகாப்பு தர ,உயர்நீதி மன்றம் உத்தரவு

.

கொடுமுடி ஒன்றியக்குழுவின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலை 
போலிஸ்பாதுகாப்புடனும் மாவட்ட கலெக்டர் மேற்பார்வையிலும், நடத்தவேண்டும் அத்துடன் தேர்தலை வீடியோவில் பதிவும் செய்யவேண்டும் என

சனி, 12 நவம்பர், 2011

உண்மையா?

உயிரற்றபொருள்...உயிருள்ளதை ஆட்டுவிப்பது உண்மையா?

அமைதியாக இருக்கும் ஒரு வஸ்து..

அசையும் வஸ்துவை இயக்கினால் அதற்குபெயர் என்ன?

உயிர்...உயிரற்றது என்பதன் அர்த்தம் என்ன?

உயிருள்ளதை இயக்கும் வஸ்துவை

உயிரற்றது என்பது எந்த விதத்தில் சரி?

மதுவுக்கும் மாதுவுக்கும் உள்ள வித்யாசம் கால் மட்டுமா?...

இரண்டுமே சிலநேரங்களில்...  உணர்ச்சிகளை உருவாக்குவதில்

ஒத்துப்போவது எந்த விதத்தில்  புரிதலாகிறது.

நெடில் விலகும்போது குறில்...ஆக்ரமிப்புசெய்கிறது.

குறிலும் நெடிலும் ஒன்றாகும்போது...

பிரம்மம் விழித்தெழுகிறது என்பது சரியா?

பிரம்மம் உருவாகிறது என்பது சரியா?

விழிப்பா? உயிர்ப்பா?! .

உயிரிழிலிருந்து படைப்பா?

படைப்பிலிருந்து உயிரா?

எது சரி?.. எண்ணிப்பார்த்ததுண்டா?  

வியாழன், 10 நவம்பர், 2011

கோமாரிநோய் தடுப்பூசி முகாம்.

ஈரோடு மாவட்டம்  சிவகிரி பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரிநோய் பரவாமல் இருப்பதற்கான தடுப்பூசி மற்றும் சிகிச்சை கள்

ஐப்பசி பௌர்ணமி அன்னபிஸேகம்...

                                                ஈரோடு மாவட்டத்தில்
 ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று கொடுமுடி , மற்றும் சிவகிரி, ஊஞ்சலூர் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில்

செவ்வாய், 8 நவம்பர், 2011

குறுகிய தொலைவு அதிக நேரம் ....

                                                       

ஈரோட்டிலிருந்து கொடுமுடி வழியாக தொலை தூரத்துக்கு இயக்கப்படும்  சில அரசு பேருந்துகளில் அதிககட்டணம் வசூலிக்கப்படுவதாக

மழையால் நிகழ்ந்த சம்பவ காட்சிகள்

  ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே  காகம் குளத்துப்பாளையத்தில் உள்ள மிகப்பழமையான குளம் உடைந்ததால் வெளியேறிய நீர் குளத்துப்பாளையத்துக்கு செல்லும் முக்கிய சாலையை சூழ்ந்துள்ள காட்சி.








                                                       

காகம் குளத்துப்பாளையத்தில் உள்ள மிகப்பழமையான குளம் உடைந்து நீர் வெளியேறிய காட்சி.

விஷ ஜந்துக்களின் வசிப்பிடமான நூலகம்


                                                                  


ஈரோடு மாவட்டம்  கொடுமுடியில் பலரும் பயன்படுத்திவரும் நூலகத்துக்கு

விருந்தினர் மாளிகையில்...

                                                            
        ஈரோடு மாவட்டம்
      கொடுமுடியில் உள்ள விருந்தினர் மாளிகை

வெள்ளி, 4 நவம்பர், 2011

பசுமை …

பசுமை …பலநேரங்களில்.. உயிர்களுக்கு  ஜீவாதாரமாய் அமைவதுண்டு..
இது தான் உலக நியதி..
இருந்தபோதிலும்… களைகளும் பசுமையாய் இருப்பதுண்டு.
அதனால் அவற்றை  இனங்கண்டு அழிப்பதுண்டு நாம்.
இதனை கடமையாய் கொண்டவர்கள் விவசாயிகள்.
விவசாயத்துக்கு ஆதரமாய் உள்ள நீர் கொண்டு செல்லும்
அரசின் கால்வாய்,  களைகளால் பசுமையாய் காட்சி தந்தால்
அது பார்பதற்கு நன்றாய் இருக்கும் .மற்றபடி அதனால் ஆபத்தே
அதிகமிருக்கும்…அந்த வகையில் ஆகாயத்தாமரை(களை)
உடலில் அணிந்துகொண்டு…  ஓடும் கடமையை மறந்து,

காண்பவருக்கு அச்சத்தை தரும் இந்த  கால்வாயின் பெயர் காலிங்கராயன்.
அமைந்துள்ள இடம் கொடுமுடி  தீ அணைப்பு நிலையம் அருகே.

மழைநீர்

த மிழகம் முழுவதும் பெய்த தொடர்மழையால் பல்வேறு ஊர்களில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வருகின்றன.
ஈரோடு மாவட்டத்தில்  ஒரு காலத்தில் கொளாநல்லி நஞ்சையும் சரி,
கொல்லங்கோயில் புஞ்சையும் சரி, என அடைமொழியால் அழகு பெற்ற  கொல்லங்கோயில் கிராமத்தில் அமைந்துள்ள  ஒரு மழைநீர்  ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து … சாலையை தழுவிக்கொண்டு ஓடும் காட்சி.

சிந்தின துளிகள்


 வானம் விழி திறக்க…
  சிந்தின மழைத்துளிகள்
துளிகளில் நீராடிய நிலமகள்…ஓடவிட்ட நீர்..
உள்ளங்கள் மகிழவும்…உயிர்கள் வாழவும்…
வெள்ளமாய் பெருக்கெடுத்து  சென்ற  காட்சி..
இடம் : சிவகிரி அருகே உள்ள கொளத்துப்பாளையம் குரங்கன் ஓடை…

திங்கள், 26 செப்டம்பர், 2011

மீண்டும் ஏவுகணை சோதனை.

  
                                              இந்தியா   ஒரிசாவில் மீண்டும் ஏவுகணை சோதனையை  நடத்தியது.

செல்போன் பயன்படுத்த தடை, பெயருக்கு பதில் சின்னம் மட்டுமே தேர்தல் ஆணையம் அதிரடி

                                                                  
          
                                   .தமிழக உள்ளாட்சித்தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம்

மத்திய அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்கவேண்டும். ராஜா வழக்குரைஞர் வாதம்.

                                                              
மத்திய அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்கவேண்டும் என ஸ்பெக்ட்ரம்  வழக்கில் கைதாகியுள்ள

பாகிஸ்தானின் அணு ஆயுத ரகசியம் விற்பனை அம்பலம்

                                                              

                             பாகிஸ்தானின் அணு ஆயுத ரகசியம் லிபியா உள்ளிட்ட நாடுகளுக்கு  விற்பனை

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

இந்தியா பரிசோதனை....ஒலியை விஞ்சும் ஏவுகணை

      இந்தியாவில்  ஒரிசாவில் உள்ள சண்டிப்பூரில் அணுஆயுதங்களை தாங்கிச்சென்று
தாக்கும் திறன் படைத்த

குண்டுவெடிப்பு....ஐ.நா அலுவலகத்தில்

                                                                  
                        
சோமாலியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நடந்ததில்

பாகிஸ்தான் புகார்...அமெரிக்கா மீது

        

பாகிஸ்தானில் வாழும் மக்களின் நலனுக்காக எல்லா நடவடிக்கைகளையும்
 பாகிஸ்தான் எடுக்கும்,

வியாழன், 22 செப்டம்பர், 2011

புதன், 21 செப்டம்பர், 2011

சி.பி.ஐ வேட்டை.. தொடர்கிறது...

                                                                       

கர்நாடாகவை சேர்ந்த ரெட்டி சகோதரர்களின் சட்டவிரோத சுரங்க தொழிலுக்கு
எதிரான நடவடிக்கையை செப்டம்பர் 5ம்

ராணுவம்+ பக்தர்கள்+ தலீபான்கள் =பலி 47.









 பாகிஸ்தானில் ராணுவத்துக்கும் தலீபான் தீவிரவாதிகளுக்கும் நடந்த மோதலில்

அணு உலை பணியை நிறுத்தக்கோரி அமைச்சரவை முதல்பதிவு.





 கூடங்குளம் அணு உலை திட்டப்பணிகளை கைவிடக்கோரி தமிழக அமைச்சரவை முடிவு
எடுக்கிறது.

வரதட்சணை வாங்குவதை கைவிட வேண்டும்.




ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராலாவட்டா என்ற இடத்தில்

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

திங்கள், 19 செப்டம்பர், 2011

விளையாட்டுத் திடல்வேண்டும்

ஈரோடு மாவட்டம்     கொடுமுடி காவிரி ஆற்றங்கரையில்

பயணிகளைஅனுமதிக்க நடவடிக்கை


அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள்,

எழுமாத்தூர் ஊராட்சி அலுவலகம் முன்பு...






    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள எழுமாத்தூர் ஊராட்சியில் உள்ளது. புதுக்காலனி

வெற்றி மாலை..



நேற்றைய பொழுது..

உன் ஜனனத்தின்...

முற்று புள்ளி...

இன்றைய பொழுது...

உன் பிறவியின் முதல் புள்ளி...என்ற

நம்பிக்கையில்...நாளும் நடைபோடு..

வீழும் உன்காலடியில்...

வெற்றிமாலை.

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

அமெரிக்க போலிஸ் பணியில் இலங்கை தமிழர்கள்...

அமெரிக்காவில் உள்ள காவல் நிலையங்களுக்கு தமிழ்போலிஸாரை

2500 கி.மீ... 5 வருடம்...

 நமது செல்லவளர்ப்பு பிராணிகள் காணாமல்போனால் என்னசெய்வோம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பதவியிலிருந்து நீக்ககோரி நீதி மன்றத்தில் மனு





 தமிழக முதல்வர் ஜெயலலிதாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என

அறுபதுக்குள் அடங்கும் உயிர்கள்...

இந்தியாவில்

பஞ்சகால நிவாரண திட்டம்.. லஞ்ச நிவாரணத்திட்டமாக உள்ளது.

       
 ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த திட்டத்தை...

கள்ளுக்கான விவாதத்தில் பங்கேற்க தயாரா? கம்யூனிஸ்ட் கட்சிக்கு கள் இயக்கம் சவால்.

            
                                                             
கள்ளுக்கான விவாதத்தில் பங்கு கொண்டு வெற்றிபெற்றுவிட்டால் எங்களது கோரிக்கையை கைவிட்டு விடுகிறோம் . விவாதத்துக்கு தயாரா? என்று மார்க்ஸிஸ்ட் கட்சியின் மகளிர்பிரிவுக்கு  தமிழ்நாடு கள் இயக்கம் சவால் விட்டுள்ளது.

வியாழன், 15 செப்டம்பர், 2011

சுதந்திரநாட்டில் 550 பேர் மட்டுமே...

ஆதிக்கவெறிபிடித்து...

அடுத்த நாட்டின் கைபிடித்து... சொந்தமக்களையே.. அழித்தொழித்து..

மிஞ்சியவர்கள்... தஞ்சம் என வந்தவர்கள்...

அனைவரையும் சிறைகளுக்குள்... சிறகொடித்து...

சிறு அசைவும் குற்றம் என  சட்டம் வகுத்து...
  
மூச்சுவிடும்போதுகூட காற்றில் அசைவு கூடாது

என

முள்வேலிகளுக்குள் முக்கி வைத்து

அழகு பார்க்கும் நாடுகள் மத்தியில்...

 என்னைக்கேட்காமல்

அடுத்த நகரத்துடன் ....

எப்படி நீ என்னை இணைக்கலாம்.

என் சுதந்திரம் என்ன, உன் வீட்டின்

முற்றத்தில் முளைத்துள்ள புல்லா...?

என்ற கோபத்தில் கொப்பளித்த சிறுநகரம் ஒன்று...

தனது நகரத்தை சுதந்திர நகரமாக..நாடாக அறிவித்ததுடன்..நில்லாமல்..

தனது நகரின் அடையாளமாய்... தனி நாணயத்தையே வெளியிட்டுள்ளது..

எங்கே இது நடந்தது என்கிறீர்களா?

இந்தியாவின் மருமகளாய்.. மதிக்கப்படும்..

சோனியா பிறந்த தேசத்தில் நடந்துள்ளது இந்த சம்பவம்.

இத்தாலியில் உள்ள சிறுநகரம் பிலெட்டினோ...பிரேசினன் என்ற மாகாணத்தின்

ஆளுமைக்குள் வாழ்ந்த இந்த சிறுநகரத்தை..செலவினங்களை

கட்டுப்படுத்துவதாய்சொல்லி...

அந்த நகரத்தை அடுத்திருந்த ..  ட்ரெவி என்ற நகரத்துடன் இணைப்பதாக

கூறியது அரசு.

 இதனை ஏற்க மறுத்த பிலொட்டினா... தான் சுதந்திரநாடு

என அறிவித்துக்கொண்டது.

அத்துடன் பியொரிட்டா என்ற பெயரில் நாணயத்தையும்

அச்சிட்டு வெளியிட்டுக்கொண்டுள்ளது.

இந்த ரோஷக்கார  நகரத்தில் வாழும் மக்கள் தொகையின்

எண்ணிக்கை

550  மட்டுமே... 

அவர்கள் மானஸ்தர்கள்

அப்படித்தான் நடக்கும்.

பலகோடி மக்களை கொண்ட ஒரு இனத்தின்

கருக்குழிகள் அழிக்கப்பட்டதையும் ,அழிக்கபடுவதையும்...

தப்பிய கருக்குழிகளில்  மாற்று இனத்தின் வித்துக்கள் விதைக்கப்படுவதையும்

பார்த்துக்கொண்டிருக்கும் நாமும் மானஸ்தர்கள்தான்...

இல்லையா பின்னே...

புத்தனைப்பெற்ற ராமன் அல்லவா நாம்...

லவ குசர்கள் செத்தால் நமக்கென்ன...நடப்பது நடக்கட்டும்..

நாளைய சரித்திரம் நம்மை கொண்டாட்டும்....


எந்திரமனிதர்கள்...

 மருத்துவமனைக்கு செல்லப்போகிறீர்களா? அங்கே

திண்டாட்டம்...




 உலக பணக்கார நாடுகளில் ஒன்றாக கருதப்படும் பிரிட்டனிலும்
வேலையில்லாத்திண்டாட்டம் என்றால் நம்ப முடிகிறதா?!

புதன், 14 செப்டம்பர், 2011

ராஜபக்சே வாங்கும் பத்திரிக்கைக்கு ஆசிரியராகிறார் இந்திய பத்திரிக்கையாளர்.

இலங்கை அதிபர் ராஜபக்சே வாங்கப்போகும் பத்திரிக்கை ஒன்றுக்கு
இந்தியாவைச்சேர்ந்த ஆங்கிலப்பத்திரிக்கையாளர் ஒருவர் ஆசிரியர் ஆகிறார். அவருக்கு
மாதச்சம்பளம் இரண்டு லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக

இலங்கை மந்திரியின் திட்டத்தை தவிடுபொடியாக்கிய அமெரிக்க செயலாளர்.


     யாழ்பாண மாணவர்களை அமெரிக்க அதிகாரி சந்திக்கவிடாமல் தடுக்க முயற்ச்சித்தார்
இலங்கை அரசின் தமிழ்மந்திரி அவரது திட்டத்தை தவிடுபொடியாக்கினார் அமெரிக்க
அதிகாரி.
   

இலங்கையின் வடக்கு பகுதியில் தமிழ்போலிஸ்.அமெரிக்க அரசாங்க செயலாளர் கருத்து.

இலங்கையின் வடக்கு பகுதியில் தமிழ் போலிசாரை பணியில்
நியமிக்கவேண்டும். அத்துடன் துணை ராணுவக்குழுக்களின்
செயல்களை குறைக்கவேண்டும்” எனஇலங்கை சென்ற அமெரிக்க

அமெரிக்காவில் ஏழைகள் அதிகம்...




அமெரிக்காவில் வாழும் நடுத்தர மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே செல்லும்
நிலை அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

எல்லையில் வாலாட்டும் சீனா.





     இந்தியாவின் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம் அந்தப்பகுதியில்
இந்திய ராணுவநிலைகள் அமைத்திருந்த பதுங்கு குழிகளை

திங்கள், 12 செப்டம்பர், 2011

கொடுமுடியில் சாலை மறியல் போராட்டம்...

ஒப்பந்தத்தை நிறைவேற்ற
மறுக்கும் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக்
கண்டித்து செப்.17-ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

நேரத்தை நீட்டிக்க வலியுறுத்தல்...






தமிழகத்தின்

சிறந்த சுற்றுலாத் தலமாகவும்,

நீதி மன்ற புறக்கணிப்பு..

             
 கொடுமுடியில் உள்ள மாஜிஸ்திரேட்

பூட்டை உடைத்து...


கொடுமுடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து

பேருந்துகளை இயக்க கோரிக்கை...




புதிய வழித்தடங்களில்
பேருந்துகளை இயக்க வேண்டுமென

முதல் இடம்...

        
ஈரோடு மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகளில்...

வியாழன், 8 செப்டம்பர், 2011

மனுநீதி நாள் முகாம்...

                                                              
    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள காகம் கிராமத்தில்..                                     

நகரில் நலப்பணிகள் செய்ய வேண்டும்..

 ஈரோடு மாவட்டம்   சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 32 வது கிளை

மாநாடு நடந்தது.


மாநாட்டிற்குகல்யாணசுந்தரம், ராஜசுலோச்சனா, ரணதிவேல்

ஆகியோர் தலைமை வகித்தனர்.

  முருகேசன் வரவேற்றார்.  சோமசுந்தரம் கொடி ஏற்றினார். செயல்பாடு மற்றும் அமைப்பு நிலை அறிக்கையை வரதராஜன் வாசித்தார். உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை கொடுமுடி ஒன்றிய செயலாளர் குணசேகரன் வழங்கினார்.

 தேசிய செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின்குணசேகரன்  அரசியல் விளக்க உரை நிகழ்த்தினார்.

   மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:

 சிவகிரியில் புதிய பேருந்து நிலையம் அருகிலும், பழைய பேருந்து நிலையம் அருகிலும்அரசு மதுபானக்கடைகள் இயங்கி வருகின்றன. மக்கள் நடமாட்டம் அதிகள் உள்ள இப்பகுதியில் பெண்கள், குழந்தைகள், செல்வதற்கு மிகவும்

சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகளும் கடும் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர்.

எனவே இந்த மதுபானக்கடைகளை ஊர் எல்லைப்பகுதிக்கு மாற்றிட நடவடிக்கை எடுக்குமாறுஈரோடு மாவட்ட  ஆட்சியரை கேட்டுக்கொள்கிறோம்.

  சிவகிரி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பொரசமேடு, மற்றும் ராமமூர்த்தி நகரில்

 புறம்போக்கு நிலத்தில் வசித்து வருபவர்கள் பலருக்கு  இன்னும் வீட்டுமனைப்பட்டா  கொடுக்கப்படவில்லை.

வருவாய் துறையில் பலமுறை முறையிட்டும் பட்டா வழங்கப்படாமல் உள்ளது.  வீடற்றஏழை மக்கள் தொடர்ந்து  வாடகை  வீடுகளில்  வசித்து வருகின்றனர். அவர்களுக்குஇலவச வீடு கட்டித்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஈரோடு வட்டத்தில் பெரிய ஊராக உள்ள சிவகிரியிலிருந்து அலுவல்களுக்காகவும்,

 பள்ளி கல்லூரிகளுக்கும் பெரும் எண்ணிக்கையில் பலர் பயணம் மேற்கொள்கின்றனர்.

 ஏற்கனவே சிவகிரி வழியாக முத்தூர் , வெள்ளகோயில், பகுதிகளுக்கு இயக்கப்பட்டுவந்த

 தனியார் பேருந்துகள் நேராக விளக்கேத்தி மோளபாளையம் வழியாகச்செல்ல அனுமதிக்கப்பட்டதன்

 விளைவாக சிவகிரி பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர், எனவே அலுவலகம் பள்ளி கல்லூரி

செல்லும் நேரங்களிலும், திரும்பும் நேரங்களிலும் சிவகிரிக்கும் ஈரோட்டுக்கும் கூடுதல் நகரப்பேருந்துகளை இயக்க வட்டார போக்குவரத்து அலுவலர்

நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 சிவகிரி வட்டாரத்தில் பல குழந்தைகள் காப்பகங்கள் வாடகை கட்டிடங்களிலும், தனியார் கட்டிடங்களிலும் இயங்கி வருகின்றன. அவை போதுமான இடவசதி இல்லாததால் சுகாதாரமற்ற நிலையில் குழந்தைகள் இருக்கவேண்டியுள்ளது. எனவே ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத்திட்ட அலுவலர்  தலையிட்டு உரிய கட்டிட வசதிகளை ஏற்படுத்தி தருமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

 சிவகிரியில் முக்கிய வணிகப்பகுதியாக உள்ள சிவகிரி பழையபேருந்துநிலையப்பகுதியில்  நிழற்குடை மற்றும் இலவச சிறுநீர் கழிப்பிடமும்  அமைத்து தரவேண்டும்.

 சிவகிரியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு குடிநீர் வசதியும் இலவச சிறுநீர் கழிப்பிட வசதியும்  ஏற்படுத்தி தரவேண்டும்.

 சிவகிரி குமரன் தெருவில் உள்ள  பாதுகாப்பற்ற நந்தவனக்கிணற்றுக்கு சுற்றுச்சுவர் ஏற்படுத்தி தரவேண்டும். அத்துடன் அந்தக்கிணற்றின் தண்ணீரை சுத்தப்படுத்தி தரவேண்டும்.

திரு.வி.க தெரு, நால்வர் மடம் அருகில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை பழுது பார்த்து தரவேண்டும்.

சிவகிரி வேளாண்மைத்துறை அலுவலகத்தின் தென்பகுதியில் உள்ளகாலியிடத்தில் சிறுவர் பூங்கா அமைத்துதரவேண்டும்.

 சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட எல்லப்பாளையத்தில் கழிப்பிட வசதியில்லை, போதுமான சாலை வசதியும், சாக்கடை வசதியும் இல்லை. இந்த வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

நெசவாளர் காலனிக்கு சாக்கடை வசதியும், சாக்கடை வசதியும்  ஏற்படுத்திதரவேண்டும்.

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

செருப்பு வாங்க தனிவிமானம் அனுப்பும் முதல்வர்...

                                   

      செருப்பு வாங்குவதற்காக தனிவிமானம் அனுப்பினார். இந்திய நாட்டின்
மாநில முதலமைச்சர் என்ற தகவலை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

திங்கள், 5 செப்டம்பர், 2011

சாலை ஆக்கிரமிப்பு....

                                                                 

                                                           சாலை ஆக்கிரமிப்பு....

        கொடுமுடியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடு

விலங்குகளின் புகழிடமாக மாறியுள்ளது.

 கொடுமுடியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், பொது நூலகம், நீதிமன்றம்,

அரசு மருத்துவமனை, பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

போன்றவைகள் அமைந்துள்ள பிரதான சாலை நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில்

உள்ளது.

     ஏமகண்டனூர் ரயில்வே கேட் முதல் கடைவீதி வரை உள்ள பகுதிகளில்

சாலை ஆக்கிரமிப்பு உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

மேலும், சாலை ஓரத்தில் குதிரை, ஒட்டகம், மாடு உள்ளிட்டவைகள் கட்டி

வைக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விலங்கினங்கள் கட்டப்படுவதால் இங்கு

வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தமுடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

  கழிவுகளால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்

கேடு ஏற்படுகிறது.
  
   இது குறித்து கொடுமுடி பொது நலச் சங்க அமைப்பாளர் பாலசுப்ரமணி

கூறியது: ரோடு ஆக்ரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டி

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தோம்.

இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
                                                         


  விலங்குகளால் பொது மக்களுக்கும்,

பள்ளிக் குழந்தைகளுக்கும் பய உணர்வு ஏற்படுகிறது  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு

 அவர் கூறினார்.

பக்கங்கள்