வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 13 ஜனவரி, 2014

விளாமுண்டி பகுதி விவசாயிகள் சோகம் காட்டு யானைகள் அட்டகாசம் தொடர்கிறது.

                                         


கோபி அருகே காட்டு யானைகள் அட்டகாசத்தில் கரும்பு பயிர்கள் அழிந்தன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனக்கோட்டப்பகுதிகளான பவானிசாகர், டி.என்.பாளையம், சத்தியமங்கலம்,  வனப்பகுதிகளில் கணிசமான அளவில் காட்டு யானைகள் உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பெய்யாததால் இந்தவனப்பகுதிகளில் போதிய அளவு தண்ணீரும் வன விலங்குகளுக்கான <உணவு பற்றாக்குறையும் நீடித்து வருகிறது.

 இதனால் உணவு  மற்றும் தண்ணீரைத்தேடி வன விலங்குகள் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள ஊருகளுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

 குண்டேரிப்பள்ளம், விளாங்கோம்பை, விநோபா நகர், பண்ணாரி, தாளவாடிசாலை, விளாமுண்டி, உள்ளிட்ட பகுதிகளில் யானைகள்  ஊருக்குள் புகுவது வாடிக்கையாகி வருகிறது.

 நேற்று  முன்தினம் இரவு விளாமுண்டி வனப்பகுதியிலிருந்து கீழ்பவானி வாய்கால் வழியாக உக்கரம் நோக்கி ஆறு காட்டு யானைகள் வந்துள்ளன.
இருபது கி.மீ கடந்து கூடக்கரைக்கு வந்த இந்த யானைகள் அங்கு முருகேசன் என்ற விவசாயின் கரும்பு தோட்டத்தில் புகுந்து பயிர்களை இரவு முழுவதும் நாசம் செய்துள்ளன.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் தந்த தகவலை அடுத்து அந்தப்பகுதிக்கு வன அலுவலர் ராஜ்குமார் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் வந்தனர்.

பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்ட முயற்சித்தனர். பல மணி நேர முயற்சிக்கு பின்னர் கரும்பு தோட்டத்தை விட்ட வெளியே வந்த யானைகள் அருகிலிருந்த நெல் வயலைச்சேதப்படுத்திவிட்டு அருகிலிருந்த மற்றொரு கரும்பு காட்டிற்குள் சென்றுவிட்டன.

சம்பவம் குறித்து வன அலுவலர் ராஜ்குமார் தெரிவித்ததாவது:வனப்பகுதியில் உள்ள யானைகள் ஊருகளுக்குள் புகுதாபடி அகழிகள் வெட்டப்பட்டுள்ளன. ஆனால் விளமுண்டி வனப்பகுதியை பொருத்தவரை வனத்தை ஒட்டி கீழ்பவானி வாய்க்கால் உள்ளதால் அந்த வாய்க்காலை பயன்படுத்தி யானைகள் ஊருகளுக்குள் புகுந்துவிடுகின்றன.

 விரைவில் இதற்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

பக்கங்கள்