வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 4 நவம்பர், 2011

பசுமை …

பசுமை …பலநேரங்களில்.. உயிர்களுக்கு  ஜீவாதாரமாய் அமைவதுண்டு..
இது தான் உலக நியதி..
இருந்தபோதிலும்… களைகளும் பசுமையாய் இருப்பதுண்டு.
அதனால் அவற்றை  இனங்கண்டு அழிப்பதுண்டு நாம்.
இதனை கடமையாய் கொண்டவர்கள் விவசாயிகள்.
விவசாயத்துக்கு ஆதரமாய் உள்ள நீர் கொண்டு செல்லும்
அரசின் கால்வாய்,  களைகளால் பசுமையாய் காட்சி தந்தால்
அது பார்பதற்கு நன்றாய் இருக்கும் .மற்றபடி அதனால் ஆபத்தே
அதிகமிருக்கும்…அந்த வகையில் ஆகாயத்தாமரை(களை)
உடலில் அணிந்துகொண்டு…  ஓடும் கடமையை மறந்து,

காண்பவருக்கு அச்சத்தை தரும் இந்த  கால்வாயின் பெயர் காலிங்கராயன்.
அமைந்துள்ள இடம் கொடுமுடி  தீ அணைப்பு நிலையம் அருகே.

மழைநீர்

த மிழகம் முழுவதும் பெய்த தொடர்மழையால் பல்வேறு ஊர்களில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வருகின்றன.
ஈரோடு மாவட்டத்தில்  ஒரு காலத்தில் கொளாநல்லி நஞ்சையும் சரி,
கொல்லங்கோயில் புஞ்சையும் சரி, என அடைமொழியால் அழகு பெற்ற  கொல்லங்கோயில் கிராமத்தில் அமைந்துள்ள  ஒரு மழைநீர்  ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து … சாலையை தழுவிக்கொண்டு ஓடும் காட்சி.

சிந்தின துளிகள்


 வானம் விழி திறக்க…
  சிந்தின மழைத்துளிகள்
துளிகளில் நீராடிய நிலமகள்…ஓடவிட்ட நீர்..
உள்ளங்கள் மகிழவும்…உயிர்கள் வாழவும்…
வெள்ளமாய் பெருக்கெடுத்து  சென்ற  காட்சி..
இடம் : சிவகிரி அருகே உள்ள கொளத்துப்பாளையம் குரங்கன் ஓடை…

பக்கங்கள்