வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 7 செப்டம்பர், 2013

வருவாய்துறை ஆவணங்களை கணிணி மயமாக்க முதல்வர் உத்தரவு அமைச்சர் தகவல்.





 பெருந்துறை அருகே உள்ள திங்களூர் ஊராட்சியில்
அம்மாதிட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு ஈரோடு மாவட்ட  ஆட்சித்தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.

வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ரூ7லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 60 பயனாளிகளுக்கு வழங்கிப்பேசினார்.
அவர் பேசியதாவது: அதிகாரிகளை தேடி மக்கள் சென்ற நிலையை மாற்றி மக்கள் சிரமப்படாமல் அவர்களின் குறைகளை அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே தெரிவித்திடும் வண்ணம்  தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட மக்களை தேடி அம்மாதிட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் மக்கள் குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படுகிறது. இம்முகாமில் காலையில் மனுக்கள் அளித்தால் தகுதியான மனுக்களுக்கு அன்று மாலையிலேயே நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவருகிறது.

இந்த திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் திட்டங்கள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் உள்ள 1.85 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்திற்கு முதல் கையெழுத்திட்டார். இத்திட்டம் இரண்டாண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தங்கம் விலை கடுமையாக உயர்ந்தாலும் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு முதல்வர் தாய்வீட்டுச்சீதனமாக 10 படித்த பெண்களுக்கு ரூ25 ஆயிரமும், பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு முடித்த பெண்களுக்கு ரூ50 ஆயிரமும் திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கமும் வழங்கி வருகிறார்.

இந்த இரண்டாண்டு ஆட்சிக்காலத்தில் வருவாய்த்துறையின் பணிகளை மேம்படுத்திட 34 புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வருவாய்துறையின் அனைத்து ஆவணங்களும்  கணிணி மயமாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பெருந்துறை தொகுதியில் 8 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்துகள் விடப்பட்டுள்ளது. மேலும் மக்களின் சிரமங்களைப்போக்கும் வகையில் 4 வழித்தடங்களில்  நீட்டிப்பு செய்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சிறுவலூர் கெட்டிச்செவியூர் சாலை 1.92 கோடி மதிப்பீட்டில்  இருவழிச்சாலையாக விரிவு படுத்தப்பட்டுள்ளது.

 திங்களூர் தோரணவாவி வழி ராசாக்கவுண்டன்பாளையம் சாலை 3.4 கி.மீ நீளத்திற்கு ரூ47 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையம் முதல் வேப்பம்பாளையம் வரை 3 கி.மீ சாலை ரூ34 லட்சம் மதிப்பில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. மாக்கினாங்கோம்பை சாலையில் திங்களூர் அருகில் 1.2 கி.மீ சாலை ரூ71 லட்சம் மதிப்பில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.

 நெடுஞ்சாலைத்துறையின் மூலம் இந்த 4 சாலைகளும் ரூ 4 கோடி மதிப்பில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.

திங்களூர் துணை மின்நிலையம் அருகில் உள்ள தரைமட்டப்பாலம் தற்போது ரூ85 லட்சம் மதிப்பில் உயர்நிலை பாலமாக கட்டும் பணி நடந்து வருகிறது. பெருந்துறை ஒன்றியத்தில்  ஆற்று குடிநீர் வழங்கப்படாத 130 குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு ரூ15 கோடி நிதியினை முதல்வர் அனுமதித்து ஆணை வழங்கியுள்ளார்.

திங்களூர் ஊராட்சியில் கடந்த இரண்டாண்டுகளில் 45 பணிகள் 1.84 கோடி மதிப்பில் நடந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்