வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 5 செப்டம்பர், 2011

எட்டுலட்சம் மக்கள்உயிர்விடப்போகும்எச்சரிக்கை செய்தி..

                               
 
                                       உணவில்லாமல்  உயிர்விடப்போகும்
                                    எட்டுலட்சம் மக்கள்: எச்சரிக்கை செய்தி


ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றானசோமாலியாவில் தற்போது மிகவும் மோசமான வறுமை நிலவிவருகிறது.
உள்நாட்டுப்போர், போதைபொருள் கும்பலின் அட்டகாசம், பொருளாதார சீர்குலைவு, இனக்குழுக்களுக்கி
டையேயான மோதல் என பல்வேறு வடிவங்களில் அந்த நாடு கடந்த சில வருடங்களாகவே சின்னாபின்னமாகி
வருகிறது.
மக்கள் தங்கள் உணவு தேவைக்கு ஆயுதம் ஏந்தவேண்டிய கட்டாய நிலையும் காணப்படுகிறது. இந்த நிலை


தொடருமானால் வரும் 4 மாதங்களுக்குள்  அந்த நாட்டில்

 7 லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானபேர் பட்டினியில் உயிரை இழப்பார்கள்  என ஐ.நா எச்சரிக்கிறது.

 60 வருடங்களில் கிழக்கு ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பஞ்சம்

இது, தெற்கு ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை

 அல் கைதாவுடன் தொடர்புடைய அல் ஷாபாப் இஸ்லாமிய குழு தனது

 கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதõல், அங்கு  மிக மோசமான
 பட்டினி நிலைமை காணப்படுகிறது என ஐ.நா கூறியுள்ளது.

தற்போது மிக அவசரமாக 12 மில்லியன் சோமாலியர்களுக்கு உணவு உதவி
தேவைப்படுவதாக அவசர கோரிக்கை விடுத்துள்ள ஐ.நா, பே நகரத்தை
சோமாலியாவின் 6 வது பஞ்சம் தலைவிரித்தாடும் பிரதேசமாக ஐ.நா. அறிவித்துள்ளது.

 4 மில்லியனுக்கு மேற்பட்ட சோமாலிய மக்கள் வறுமையில்
 வாடிவருகின்ற போதும், 7. லட்சத்துஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பேர் அடுத்து வரும் நான்கு
 மாதங்களில்
உயிரிழக்கும் நிலையில் உள்ளனர் என ஐ.நா எச்சரித்துள்ளது.

சோமாலியாவில் இது வரை  உயிரிழந்தோரின் அரைவாசிப்பேருக்கு மேல் சிறுவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பட்டினி, பஞ்சம் ஆகியவை டிஜிபுட்டி, எரித்திரியா,
எதியோப்பியா, கென்யா மற்றும் உகண்டா போன்ற நாடுகளையும் பாதிக்க
 தொடங்கியுள்ளது.
பஞ்சம் தலைவிரித்தாடும் பகுதிகளை ஐ.நா பேமன் பகுதிகள் என உத்தியோகபூர்வமாக
அறிவிக்கிறது. இந்த பேமன் பகுதிகள் என்பது

அப்பகுதியில் உள்ள 30% வீதத்துக்கு மேலான குழந்தைகள் ஊட்டசத்து
 குறைபாட்டினால் பாதிக்கபட்டிருத்தல், தினந்தோறும் 10,000 பேர்களில்
 இரு ஆண்கள் அல்லது நான்கு சிறுவர்கள்  உண்ண உணவின்றி உயிரிழத்தல்
 என்ற அறிகுறிகள் கொண்டது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்