வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 5 செப்டம்பர், 2011

நகை ஏற்றுமதியில் ரூ611கோடி ஊழல்.

                                                                       

                                  தங்க நகை ஏற்றுமதியில் ரூ611கோடி ஊழல்.

 மத்திய அரசின் மினிரத்னா நிறுவனமாக கொல்கத்தாவைச்சேர்ந்த
எம்.எஸ்.டி.சி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் மத்திய இரும்பு மற்றும் எஃகு அமைச்சகத்தின்
கீழ் செயல்பட்டு வரும் துணைநிறுவனமாக உள்ளது.

    இந்த நிறுவனம்  வெளிநாடுகளுக்கு தங்க நகைகள் ஏற்றுமதி செய்வதை
ஒழுங்கு படுத்தும் நிறுவனமாக உள்ளது.

    இந்த நிறுவனத்திற்கான கணக்குகளை மத்திய தணிக்கை அதிகாரி தணிக்கை
செய்தார். தணிக்கை அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

 நிர்வாகத்தில் உள்ள சிலர் லாபம் பெறுவதற்காக

ஏற்றுமதி ஒப்பந்தத்தில் விலை நிர்ணயம் தொடர்பாக குளறுபடி நடந்துள்ளது.

  இடர்பாடுகள் பற்றி எண்ணாமல் தனிப்பட்டவர்களின் லாபம் குறித்தே எண்ணப்பட்டுள்ளது.

    தங்க நகை ஏற்றுமதிக்கா தேர்வு செய்யப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள்
47 ல் 18 நிறுவனங்கள் தங்க நகை வியாபாரத்தில் தொடர்பே இல்லாதவை.

     தங்க நகை ஏற்றுமதியில் இந்த நிறுவனங்கள் 39 சதவிகிதம்
நகைகளை வாங்கியுள்ளன. ஏற்றுமதியின்போது ஏற்படும் எதிர்பாராத இடர்பாடுகளை
சமாளிக்க இந்த நிறுவனங்கள் இன்ஷயூரன்ஸ் செய்யவில்லை.

  வெளிநாட்டு நிறுவனங்கள் சில, பெருமளவான தொகையை நிலுவையில் வைத்துள்ளன.

   இதனை வசூலிக்க தெரியாமல் எம்.எஸ்.டி.சி நிறுவனம் திணறிவருகிறது.

    இந்த நிலைக்கு தவறான ஏற்றுமதி ஒப்பந்தம் காரணமாக உள்ளது.

   இதனால் ரூ 611 கோடி மதிப்புக்கு ஊழல் நடந்துள்ளது. இவ்வாறு தணிக்கை
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்