வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 5 செப்டம்பர், 2011

நேரில் ஆஜராக உத்தரவு...

                                                                        

                       சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக உத்தரவு.

சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என
பெங்களூரு நீதி மன்றம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
வருமானத்து அதிகமாக சொத்துசேர்த்ததாக கூறப்படும் வழக்கு பெங்களூரு நீதி
மன்றத்தில் நடந்து வருகிறது.

  இந்த வழக்கில் தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா
,இளவரசி, மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

   இந்த வழக்கில்  தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதாலும்,
மாநில முதல்வராக இருப்பதாலும், அதி உயர் பாதுகாப்பு வளையத்தில் இருப்பதாலும்,
நேரில் ஆஜராக முடியவில்லை. அதற்கு பதிலாக வீடியோ கான்பரசிங் முறையில்
வழக்கில் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதிக்கவேண்டும் என
எழுத்துபூர்வமான மனு மூலம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.

   இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் வழக்கில் நேரில் ஆஜர் ஆவதிலிருந்து விலக்கு
கேட்பது என்பது வழக்கை தாமதப்படுத்தும் செயல், நேரில் ஆஜராகவேண்டும்
என அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்