வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 8 செப்டம்பர், 2011

நகரில் நலப்பணிகள் செய்ய வேண்டும்..

 ஈரோடு மாவட்டம்   சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 32 வது கிளை

மாநாடு நடந்தது.


மாநாட்டிற்குகல்யாணசுந்தரம், ராஜசுலோச்சனா, ரணதிவேல்

ஆகியோர் தலைமை வகித்தனர்.

  முருகேசன் வரவேற்றார்.  சோமசுந்தரம் கொடி ஏற்றினார். செயல்பாடு மற்றும் அமைப்பு நிலை அறிக்கையை வரதராஜன் வாசித்தார். உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை கொடுமுடி ஒன்றிய செயலாளர் குணசேகரன் வழங்கினார்.

 தேசிய செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின்குணசேகரன்  அரசியல் விளக்க உரை நிகழ்த்தினார்.

   மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:

 சிவகிரியில் புதிய பேருந்து நிலையம் அருகிலும், பழைய பேருந்து நிலையம் அருகிலும்அரசு மதுபானக்கடைகள் இயங்கி வருகின்றன. மக்கள் நடமாட்டம் அதிகள் உள்ள இப்பகுதியில் பெண்கள், குழந்தைகள், செல்வதற்கு மிகவும்

சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகளும் கடும் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர்.

எனவே இந்த மதுபானக்கடைகளை ஊர் எல்லைப்பகுதிக்கு மாற்றிட நடவடிக்கை எடுக்குமாறுஈரோடு மாவட்ட  ஆட்சியரை கேட்டுக்கொள்கிறோம்.

  சிவகிரி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பொரசமேடு, மற்றும் ராமமூர்த்தி நகரில்

 புறம்போக்கு நிலத்தில் வசித்து வருபவர்கள் பலருக்கு  இன்னும் வீட்டுமனைப்பட்டா  கொடுக்கப்படவில்லை.

வருவாய் துறையில் பலமுறை முறையிட்டும் பட்டா வழங்கப்படாமல் உள்ளது.  வீடற்றஏழை மக்கள் தொடர்ந்து  வாடகை  வீடுகளில்  வசித்து வருகின்றனர். அவர்களுக்குஇலவச வீடு கட்டித்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஈரோடு வட்டத்தில் பெரிய ஊராக உள்ள சிவகிரியிலிருந்து அலுவல்களுக்காகவும்,

 பள்ளி கல்லூரிகளுக்கும் பெரும் எண்ணிக்கையில் பலர் பயணம் மேற்கொள்கின்றனர்.

 ஏற்கனவே சிவகிரி வழியாக முத்தூர் , வெள்ளகோயில், பகுதிகளுக்கு இயக்கப்பட்டுவந்த

 தனியார் பேருந்துகள் நேராக விளக்கேத்தி மோளபாளையம் வழியாகச்செல்ல அனுமதிக்கப்பட்டதன்

 விளைவாக சிவகிரி பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர், எனவே அலுவலகம் பள்ளி கல்லூரி

செல்லும் நேரங்களிலும், திரும்பும் நேரங்களிலும் சிவகிரிக்கும் ஈரோட்டுக்கும் கூடுதல் நகரப்பேருந்துகளை இயக்க வட்டார போக்குவரத்து அலுவலர்

நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 சிவகிரி வட்டாரத்தில் பல குழந்தைகள் காப்பகங்கள் வாடகை கட்டிடங்களிலும், தனியார் கட்டிடங்களிலும் இயங்கி வருகின்றன. அவை போதுமான இடவசதி இல்லாததால் சுகாதாரமற்ற நிலையில் குழந்தைகள் இருக்கவேண்டியுள்ளது. எனவே ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத்திட்ட அலுவலர்  தலையிட்டு உரிய கட்டிட வசதிகளை ஏற்படுத்தி தருமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

 சிவகிரியில் முக்கிய வணிகப்பகுதியாக உள்ள சிவகிரி பழையபேருந்துநிலையப்பகுதியில்  நிழற்குடை மற்றும் இலவச சிறுநீர் கழிப்பிடமும்  அமைத்து தரவேண்டும்.

 சிவகிரியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு குடிநீர் வசதியும் இலவச சிறுநீர் கழிப்பிட வசதியும்  ஏற்படுத்தி தரவேண்டும்.

 சிவகிரி குமரன் தெருவில் உள்ள  பாதுகாப்பற்ற நந்தவனக்கிணற்றுக்கு சுற்றுச்சுவர் ஏற்படுத்தி தரவேண்டும். அத்துடன் அந்தக்கிணற்றின் தண்ணீரை சுத்தப்படுத்தி தரவேண்டும்.

திரு.வி.க தெரு, நால்வர் மடம் அருகில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை பழுது பார்த்து தரவேண்டும்.

சிவகிரி வேளாண்மைத்துறை அலுவலகத்தின் தென்பகுதியில் உள்ளகாலியிடத்தில் சிறுவர் பூங்கா அமைத்துதரவேண்டும்.

 சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட எல்லப்பாளையத்தில் கழிப்பிட வசதியில்லை, போதுமான சாலை வசதியும், சாக்கடை வசதியும் இல்லை. இந்த வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

நெசவாளர் காலனிக்கு சாக்கடை வசதியும், சாக்கடை வசதியும்  ஏற்படுத்திதரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்