வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

நீதி மன்ற புறக்கணிப்பு..

             
 கொடுமுடியில் உள்ள மாஜிஸ்திரேட்
டெல்லியில் உயர்நீதி மன்றத்தின் ஐந்தாம் எண் நீதி மன்ற நுழைவு வாயிலில்
தீவிரவாதிகளால் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில்
12 பேர் இறந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். சம்பவத்தில் தொடர்புடைவர்களை
டெல்லிபோலிசார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக காஷ்மீரை சேர்ந்த
இண்டர் நெட் மைய உரிமையாளர் ஒருவரையும் அவரது சகாக்கள் இருவரையும்
போலிசார் கைது செய்துள்ளனர்.

  மேற்கொண்டு தேடுதல் நடந்து வருகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும்
அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது.

   இன்று ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்
வழக்குரைஞர்கள் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களை
கைது செய்யக்கோரியும் கண்டணம் தெரிவித்தும் ஒரு நாள் நீதி மன்ற
புறக்கணிப்பு செய்தனர்.

புறக்கணிப்புபோராட்டத்தில் வழக்குரைஞர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன்,
செயலாளர் தணிகாசலம், பொருளாளர் ரமேஷ் உள்ளிட்ட வழக்குரைஞர்கள்
கலந்துகொண்டனர்.                                               

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்