வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 5 செப்டம்பர், 2011

மீட்பு....


                                                                   மீட்பு....

     தமிழகத்தில் நில ஆக்ரமிப்பாளர்களிடமிருந்து நிலத்தை மீட்ககோரி வந்துள்ள புகார்களில்
நாமக்கல் மாவட்டம்  அதிக புகார் மனுக்களை பெற்றுள்ளது.

   புதிய அரசு பதவி ஏற்றவுடன் நிலமோசடி குறித்து விசாரணை செய்ய அனைத்து
மாவட்டங்களிலும் தனிப்பிரிவு தொடங்கப்பட்டது.

இந்த பிரிவிடம் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இது வரை வந்த
புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுத்த வகையில்  மொத்தம்
 ஆக்ரமிப்பாளர்களிடமிருந்து ரூ450 கோடி மதிப்பிலான
700 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

   நில மோசடிவழக்கில் தி.மு.க மட்டும் அல்லாதுஆளுங்கட்சியை சேர்ந்த சிலரும்
சிக்கி வருகின்றனர்.

   அந்த வகையில் தி.மு.க வைச்சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டிஆறுமுகம்,
பொன்முடி, நேரு ஆகியோர் சிக்கியுள்ளனர்.

   நீலகிரி, கோவை, திருப்பூர்,  ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி,
நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டல போலிஸ் பிரிவில்
 கடந்த மே மாதம் 15 ம்தேதி முதல்  கடந்த 3 ம்தேதி வரையில் மொத்தம்
ஆயிரத்து 820 மோசடி புகார்கள் பெறப்பட்டுள்ளன.

     கோவை மாவட்டத்தில் 21 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை
பதியப்பட்டுள்ளது. இதன்பேரில் 78 பேர் கைதாகியுள்ளனர்.

  ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட  748 புகார்களில் முதல் தகவல் அறிக்கை8 மனுக்களில் மீது
பதியப்பட்டுள்ளது.

    நீலகிரி, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா106,433,867
புகார்கள் பெறப்பட்டுள்ளன.

மேற்கு மண்டலத்தில் மொத்தம்168 முதல் தகவல் அறிக்கைகள்
பதியப்பட்டுள்ளன. அவற்றில் 941பேர் குற்றவாளிகளாக
சேர்க்கப்பட்டுள்ளனர்.

       147பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும்
பெறப்பட்ட மொத்த புகார்கள் 4 ஆயிரத்து820. இந்த புகார்களில்
இன்னும் 168 புகார்களுக்கு  மட்டுமே ரசீதுகள் தரவேண்டியுள்ளது.

    விசாரணையில் 2 ஆயிரத்து 133 புகார்கள் உள்ளன. மற்றவை
விசாரிக்கப்பட்டுவிட்டன.

   நாமக்கல் மாவட்டத்தில்  வந்த  ஆயிரத்து 24 புகார்களில் 20 புகார்கள் மட்டுமே
முதல் தகவல் அறிக்கைக்கு தகுதியானதாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

   நில மோசடி பிரிவின் கீழ்  சிக்கியுள்ளவர்களில் 87 பேர் அரசியல்
வாதிகள். தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் ரூ162 கோடியே 45 லட்சத்து20 ஆயிரத்து100
மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.
   
    
  

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்