வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 5 செப்டம்பர், 2011

தமிழக அரசுக்கு சிவகிரி தி.மு.க கண்டணம்.

                               தமிழக அரசுக்கு சிவகிரி தி.மு.க கண்டணம்.

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் நகர தி.மு.க வின் பொது உறுப்பினர்கள் கூட்டம்
நடந்தது.

  கூட்டத்துக்கு  நகர அவைத்தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார்.
 பொதுக்குழு  உறுப்பினர் கதிர்வேல், மாவட்ட முன்னாள்  துணை செயலாளர்
இளஞ்செழியன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அரசு, ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.

  நகர செயலாளர் கோபால் வரவேற்றார்.
  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:

  தமிழக உள்ளாட்சி தேர்தலில் சிவகிரி பேரூராட்சியில் உள்ள வார்டு உறுப்பினர்,
மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க வின் சார்பில் போட்டியிடுவது.

தி.மு.க வின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்ட கழக அலுவலகத்தில்
வேட்பாளருக்கான தகுதி விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிப்பது.

 தி.மு.க வின் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள்
மீது  நில அபகரிப்பு பொய் வழக்கு போடும் ஜெயலலிதா தலைமையிலான
அ.இ.அ.தி.மு.க அரசை வன்மையாக கண்டிப்பது.

கருணாநிதி கொண்டுவந்த சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தொடர நீதி மன்ற
அங்கீகாரம் பெற போராடிய கழக தலைவருக்கும், முன்னணியினர், மற்றும்
தோழர்களுக்கும் பாராட்டு தெரிவிப்பது.

 தூக்கு தண்டணை கைதிகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன்,
முருகன், ஆகியோரின் தண்டணையை ஆயுள் தண்டணையாக குறைக்க
தமிழக அமைச்சரவை கூடி மத்திய அரசை வலியுறுத்தவேண்டும்.
என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



                                                        

  முடிவில் பேரூர் துணை செயலாளர் பாபுராஜா நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்