வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 5 செப்டம்பர், 2011

வழக்குரைஞர்கள் மோதல்.

                               
                                                                              

                                     நீதிபதி முன்பு வழக்குரைஞர்கள் மோதல்.

 முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ஜாமின் வழங்ககோரி எழுந்த பிரச்சனையில்
விழுப்புரம் நீதி மன்றத்தில் அரசு வழக்குரைஞருக்கும், தி.மு.க தரப்பு வழக்குரைஞர்
களுக்கும் மோதலால் ஜாமின் மனு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

       தி.மு.க வின் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது நில அபகரிப்பு
தொடர்பாக வந்த புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் நீதி மன்றத்தில் அவருக்கு ஜாமின் தரக்கோரி மனு தரப்பட்டது.
அந்த மனு விசாரணைக்கு வந்தபோது அதற்கு அரசு தரப்பு வழக்குரைஞர்
சுப்பிரமணியன் ஆட்சேபம் தெரிவித்தாரர்.

இதனை தி.மு.க தரப்பு வழக்குரைஞர்கள் எதிர்த்தனர். இதனால் அரசு தரப்பு
வழக்குரைஞர் பிரிவுக்கும் தி.மு.க தரப்பு வழக்குரைஞர் பிரிவுக்கும் மோதல்
ஏற்படும் சூழ்நிலை உருவானது.

 இதனை உணர்ந்த நீதிபதி மனோஜ்குமார்  வழக்கு விசாரணையை
 செப்டம்பர் 8 ம்தேதிக்கு தள்ளி வைத்தார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்