வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 5 செப்டம்பர், 2011

சாலை ஆக்கிரமிப்பு....

                                                                 

                                                           சாலை ஆக்கிரமிப்பு....

        கொடுமுடியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடு

விலங்குகளின் புகழிடமாக மாறியுள்ளது.

 கொடுமுடியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், பொது நூலகம், நீதிமன்றம்,

அரசு மருத்துவமனை, பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

போன்றவைகள் அமைந்துள்ள பிரதான சாலை நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில்

உள்ளது.

     ஏமகண்டனூர் ரயில்வே கேட் முதல் கடைவீதி வரை உள்ள பகுதிகளில்

சாலை ஆக்கிரமிப்பு உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

மேலும், சாலை ஓரத்தில் குதிரை, ஒட்டகம், மாடு உள்ளிட்டவைகள் கட்டி

வைக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விலங்கினங்கள் கட்டப்படுவதால் இங்கு

வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தமுடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

  கழிவுகளால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்

கேடு ஏற்படுகிறது.
  
   இது குறித்து கொடுமுடி பொது நலச் சங்க அமைப்பாளர் பாலசுப்ரமணி

கூறியது: ரோடு ஆக்ரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டி

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தோம்.

இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
                                                         


  விலங்குகளால் பொது மக்களுக்கும்,

பள்ளிக் குழந்தைகளுக்கும் பய உணர்வு ஏற்படுகிறது  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு

 அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்