வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 23 நவம்பர், 2013

முடிவு...முடிவு....முடிவு....

ரோடு மாவட்டத்தில்

மக்கள் நீதிமன்றத்தின் மூலம் நேற்று 60 ஆயிரம் வழக்குகள் பைசல்  செய்யப்பட்டதாக மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.
நேற்று நாடு முழுவதும்  தேங்கி கிடந்த வழக்குகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் விதமாக லோக்அதாலத் மக்கள் நீதி மன்ற  நடவடிக்கை தொடங்கப்பட்டது.

இதனை உச்சநீதி மன்ற நீதிபதி சதாசிவம் துவக்கி வைத்தார்.

இதன் மூலம் இந்தியா முழுவதும் 39 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தமிழகத்தில் 9 லட்சம் வழக்குகல் பைசல்  செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில்  மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் மக்கள் நீதிமன்ற நடவடிக்கை நடந்தது. இதில் மாவட்ட  முதன்மை அமர்வு நீதிபதி சதீஷ்குமார் பேசினார்.

ஈரோடு மாவட்டத்தில் ஆயிரம் வழக்குகள் முடிவடையும் நிலையில் <உள்ளது. மொத்தமாக 2 ஆயிரம் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனைத்தவிர 10 ஆயிரம் விபத்து வழக்குகளும், 59 ஆயிரம்  வாகன விதிமீறல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இவற்றில்  விதிமீறல் வழக்குகள் 59 ஆயிரமும் ஆயிரம் சிவில் வழக்குகளும் மக்கள் நீதிமன்ற நடவடிக்கையால் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சண்முகம் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்