வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 20 நவம்பர், 2013

கோமாரிநோய்க்கான சிறப்பு கிராமசபா கூட்டம்.



 ரோடு மாவட்டத்தில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு கிராம சபா
கூட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய் தடுப்பு நடவடிக்கை மற்றும் நோய்க்கிளர்ச்சியின் போது கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக விவசாயகள் மற்றும் உழவர் பெருமக்கள் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது.

மொடக்குறிச்சி வட்டாரத்தில் உள்ள லக்காரபுரம் ஊராட்சியில் நடந்த கிராமசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முகம் கலந்துகொண்டு கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய் தடுப்பது குறித்து சிறப்புரையாற்றினார்.

மேலும் அவர் பேசும்போது கால்நடைகளுக்கு கோமாரி நோய் அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருந்தகம் அல்லது கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி கால்நடைகளை தனிமையாக பாதுகாப்பான முறையில் வளர்க்கப்பட வேண்டும், தொழுவம் மற்றும் சுற்றுப்புறங்களை பிளிச்சிங் பவுடர், சலவைசோடா கரைசல் மற்றும் சுண்ணாம்பு கொண்டு தூய்மையாக பராமரித்திட வேண்டும், நோய் பாதித்த கால்நடைகளை வாங்கவோ விற்கவோ கூடாது, நோய்தாக்கி இறந்த கால்நடைகளை எக்காரணம் கொண்டும் நீர்வள ஆதாரங்களில் அடக்கம் செய்யவோ, தூக்கி எரியவோ, திறந்த வெளியில் விட்டுச்செல்லவோ கூடாது, உரிய முறையில் அடக்கம் செய்யவேண்டும், இறந்த கால்நடைகள் குறித்த விபரங்களை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கோ அல்லது ஊராட்சி மன்றத்திற்கோ தெரிவிக்கவேண்டும் என  தெரிவித்தார்.

 கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குநர், கால்நடை மருத்துவ அலுவலர்கள், மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றியக்குழுத்தலைவர் மற்றும் துணைத்தலைவர், ஒன்றியகுழு உறுப்பினர்கள்,  உள்ளாட்சி பிரதிநிதிகள், பால்கூட்டுறவு உற்பத்தியாளர்கள்,விவசாயிகள் மற்றும் மகளிர் சுய <உதவிக்குழு உறுப்பினர்கள் <உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


கருத்துகள் இல்லை:

பக்கங்கள்