வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 21 நவம்பர், 2013

வழிகாட்டி...


ரோடு அருகே
உள்ள ஆர்.என்.புதூரில் 60 வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவின்  மாநில நிறைவு விழா நடந்தது.

விழாவில் மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ கலந்துகொண்டு 262 பயனாளிகளுக்கு ரூ2.66 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப்பேசினார்.

அவர் பேசியதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா தனியாக தேர்தல் ஆணையம் அமைத்து கூட்டுறவு தேர்தல்களை நடத்த சாதனை புரிந்துள்ளார். தமிழக கூட்டுறவுத்துறை இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது.

கூட்டுறவு தேர்தல் மூலம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 859 இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தி.மு.க வின் ஐந்தாண்டுகால ஆட்சியில் ரூ9 ஆயிரத்து 188 கோடி அளவில் மட்டுமே பயிர்க்கடன் வழங்கப்பட்டிருந்தது. தற்போதைய அ.தி.மு.க வின் இரண்டாண்டு கால ஆட்சியில் 9ஆயிரத்து 333 கோடி பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் வட்டியில்லா பயிற்கடன் வழங்கப்பட்டு வருகிறது. 2012-13  ம் ஆண்டில் 10 லட்சத்து 20 ஆயிரத்து 845 விவசாயிகளுக்கு ரூ 4 ஆயிரத்து 69 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

இது 2013-14 ம் ஆண்டில் 4 ஆயிரத்து 500 கோடியாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்ற தி.மு.க ஆட்சியில் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் வருவாய்க்கு மீறி செலவு செய்து பினாமிகள் பெயரில் கடன் பெற்று திரும்ப செலுத்தாத காரணத்தால் சங்கங்கள் நலிவுற்றன.

நலிவடைந்தஇந்த சங்கங்கள் மீண்டும் செயல்பட ரூ80 கோடி மான்யத்தை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார். தமிழகத்தில் ஆயிரத்து 128 நலிவுற்ற சங்கங்கள் உள்ளன. இவை தற்போது வேளாண் கருவிகளை விவசாயிகளுக்கு வாடகைக்கு விட்டு செயல்பட்டு வருகின்றன.

  சென்ற தி.மு.க ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் வைப்புத்தொகை ரூ 26 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போதைய ஆட்சியின் இரண்டாண்டு காலத்தில் இந்த தொகை ரூ39 ஆயிரத்து 600கோடியாக உள்ளது.

 தர்மபுரியில் உள்ள துறிஞ்சிப்பட்டி தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அகில இந்திய அளவில் சிறந்த கூட்டுறவு சங்கமாக தேர்வு செய்யப்பட்டு முதல் இடத்தை பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில் வருவாய்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், விளையாட்டுத்துறை அமைச்சர் ராமலிங்கம், கூட்டுறவு சங்க பதிவாளர் சீதாராமன், மாவட்ட ஆட்சியர் சண்முகம்,ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம், பவானி எம்.எல்.ஏ., நாராயணன், ஈரோடு பால்வளத்தலைவர் பி.சி. ராமசாமி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்