வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 18 நவம்பர், 2013

வனக்குழுக்களால் வாழ்வாதாரம் பாதிப்பு சோழகர் இன மக்கள் ஆட்சியரிடம் முறையீடு

.

 சோழகர் இன மக்களின்
வாழ்வாதாரத்தை காப்பாற்றிட கூட்டுறவு சங்கத்தை துவங்க உத்தரவு தரக்கோரி மலைவாழ் இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

ஈரோடு மாவட்டம்  தாமரைக்கரை பகுதியைச்சேர்ந்த  மலைவாழ் மக்களான சோழகர்  இன மக்கள் மாவட்ட ஆட்சியர் சண்முகத்திடம் மனு ஒன்று தந்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: அந்தியூர், மற்றும் பர்கூர் யூனியன் பகுதிகளில் 33 வன கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசித்துவரும் சோழகர் பழங்குடி இன மக்களின் வாழ்க்கை தரமேம்பாட்டை  கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்ட தொழில் மையமானது மூலிகை பதப்படுத்தும் தொழில் கூட்டுறவு சங்கத்தை செயல்படுத்த அனுமதி தந்துள்ளது.

இதன் பயனாக  காட்டுப்பகுதியில் விளையும் விளக்குமாற்று புல், புளி, நெல்லிக்காய், கடுக்காய், தேன், மாகாளிக்கிழங்கு, கல்பாசி உள்ளிட்ட வனப்பொருட்களை சேகரித்து விற்பனை செய்யப்பட்டது.

 அப்படி விற்பனை செய்யப்பட்ட பொருளில் கிடைத்த வருவாயைக்கொண்டு சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு கூலியை தந்துவிட்டு மீதம் உள்ள பணத்தை சங்கத்தின் பெயரில் வங்கியில் சேமிக்கப்பட்டது. இந்த தொகை மக்கள் நலனுக்கு பயன்படுத்தப்பட்டது.
தற்போது வனத்துறையை சேர்ந்த  அதிகாரிகள் தாளக்கரை பகுதியைச்சேர்ந்த பசுவன், கண்ணப்பன் என்ற இருவர் பெயரில் வன குழுக்களை அமைத்துள்ளனர்.

 இந்த வனக்குழுக்கள் லிங்காயத்து மக்களை வனத்துக்குள் அனுப்பி வனப்பொருட்களை சேகரித்து நகர்பகுதியில் விற்பனை செய்து லாபம் பெற்று வருகின்றது.

இதனால் கடந்த 12 வருடங்களாக இந்த தொழிலில் ஈடுபட்டு வந்த சோழகர் இன மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது.
எனவே மாவட்ட ஆட்சியர், சோழகர் இன மக்கள் வனத்தில் பொருட்கள் சேகரிக்க அனுமதி தருவதுடன், மூலிகை பதப்படுத்தும் தொழில் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்தவும் உத்தரவு இட வேண்டும் என மனுவில்  கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்