வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 18 நவம்பர், 2013

பிரதமரை நேரில் சந்திக்கிறோம். வை.கோ தகவல்.


ரும்புக்கு
ரூ3 ஆயிரத்து 500 வழங்க வலியுறுத்தி வை.கோ. பேசினார்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ மறுமலர்ச்சி பயணம் நடத்தினார். இதற்கு மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி தலைமை வகித்தார்.

கொடுமுடியில் கொட்டும் மழையில் நடந்த இந்த பயணத்தின்போது வை.கோ. பேசியதாவது: விவசாயிகளின் நலனைக்கருத்தில் கொண்டு கரும்புக்கான விலையை ரூ3 ஆயிரத்து 500 உயர்த்தி வழங்கவேண்டும். அருவடை செய்யப்படும் கரும்புக்கான தொகையை 15 நாட்களுக்குள் வழங்கவேண்டும். தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சர்க்கரைக்கு தடை விதிக்கவேண்டும். இறக்குமதி வரியை நூறு சதவிதமாக்கவேண்டும். வருகிற 9 ம்தேதி சென்னையில் நடைபெறும் கரும்பு விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு ம.தி.மு.க ஆதரவு தரும். அந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க எம்.பி கணேசமூர்த்தி கலந்துகொள்வார்.

கரும்பு விவசாயிகளின் நலனைக்கருத்தில் கொண்டு வருகிற 12ம் தேதி பிரதமரை கணேசமூர்த்தி நேரில் சந்தித்து பேசுவார். தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நூறு சதவிகித மதுவிலக்கை ஏற்படுத்த ம.தி.மு.க போரடும்.

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்திட காங்கிரஸ் கட்சி முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியா அதில் கலந்துகொண்டது பெரிய விஷயமல்ல. போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என இங்கிலாந்து பிரதமர் கேமரொன் கூறியுள்ளதை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்