வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 18 நவம்பர், 2013

கோமாரியை கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு அறை துவக்கம்.



ரோடு மாவட்டத்தில் கோமாரி
நோயை கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கோமாரி நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த விவசாயிகள் நோய் தாக்கிய கால்நடைகளை தனிமைப்படுத்தி வைக்கவேண்டும். அத்துடன் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தந்து சிகிச்சை அளிக்கவேண்டும்.

 பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாய் மற்றும் கால்களை பொட்டாசியம் பெர்மாங்கனட் கரைசலால் கழுவிய பின்னர் போரிக் ஆசிட் கிளிசரின்  கலவையை தடவ வேண்டும். கால்குளம்புகளில் வேப்ப எண்ணெயால் தடவவேண்டும். தொழுவத்தினை சுத்தம் செய்து 10 சதவிகித சோடா கரைசல் தெளிக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மாடுகளை மேய்சலுக்கு அனுப்பக்கூடாது. தவிர அவற்றை வாங்கவோ, விற்கவோ கூடாது.

பாதிப்படைந்த கால்நடைகள் உண்பதற்கு  கேழ்வரகு கஞ்சியுடன் தேன் கலந்து தரவேண்டும். பிளிச்சிங் பவுடர் 5 கிராம் எடுத்து 100 லிட்டர் தண்ணீரில் கலந்து குடிப்பதற்கு தரவேண்டும்.

நோயினால் இறந்த கால்நடைகளை 6 அடி குழி தோண்டி சுண்ணாம்பு பவுடர் தூவி புதைக்கவேண்டும்.

அந்தக்கால்நடைகளுக்கா பயன்படுத்திய தீவனத்தட்டு மற்றும் பசுந்தீவனத்தினை அப்புறபடுத்தி எரித்துவிட வேண்டும்.

 மேலும் தகவல் அறிய மாவட்ட கால்நடை பராமரிப்புதுறையின் மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் துவக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் 0424-2257512 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என  அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்