வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 23 நவம்பர், 2013

ஈரோட்டில் நடமாடும் ஆலோசனை மையம் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் துவக்கி வைத்தார்.

          

 ஈரோட்டில் நடமாடும் ஆலோசனை
மையத்தை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் துவக்கி வைத்தார்.

ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் நடமாடும் ஆலோசனை மையத்துவக்க விழா நடந்தது.

விழாவுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் சண்முகம் தலைமை வகித்தார். ஆலோசனை மையத்தை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா துவக்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதா பள்ளிக்கல்வித்துறைக்கு நிறைய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

 இந்த  நிதியாண்டில்  மட்டும் ரூ 17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு  14 வகையான  நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 இந்த திட்டங்கள் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தபடவில்லை. அரசின் திட்டங்களை மாணவ மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும். அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக நடமாடும் ஆலோசனை மையத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் இது போன்று 10 நடமாடும் ஆலோசனை மையங்கள்  செயல்படுத்தப்படுகிறது. இந்த மையங்களில் பிரச்சனைகளுக்கு தீர்வு கூறும் ஆலோசகர்கள் இருப்பார்கள். மூன்று மாவட்டங்களுக்கு  ஒரு நடமாடும் ஆலோசனை மையம் செயல்படும். மாணவ மாணவிகள் தங்களது பிரச்சனைகளை நடமாடும் ஆலோசனை மையத்தின் <உளவியல் ஆலோசகர்களிடம் மனம் திறந்து பகிர்ந்து கொள்ளலாம்.

 விரைவில் பொதுத்தேர்வுகள் தொடங்கப்பட உள்ளது. மாணவிகள்  நன்கு படித்து மாநில அளவில் முதலிடம் பெற வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பெ.அய்யணன். மனித வள மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்கள் ஷோபிதா ராஜகோபால், சுவேதா சான்டல்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




கருத்துகள் இல்லை:

பக்கங்கள்