வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 20 நவம்பர், 2013

நிதி உதவி...

 

 ஈரோட்டில்
தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் சார்பில் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு துவக்க நிதி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சண்முகம் தலைமையில் நடந்தது. விழாவில 73 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு துவக்க நிதியாக  தலா ரூ50 ஆயிரம் வீதம் ரூ36.50 இலட்சத்துக்கான காசோலைகளை அவர் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியாவது: ஈரோடு மாவட்டத்தில் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்  2012-13 ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக அந்தியூர் , அம்மாபேட்டை, கோபி, மற்றும் மொடக்குறிச்சி ஆகிய நான்கு வட்டாரங்களில் உள்ள 78 கிராம ஊராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஊரக ஏழை மக்களுக்கு வலுவான மற்றும் உயிரோட்டமான அமைப்புகளை உருவாக்கி வாழ்வாதாரத்தினை உயர்த்தி  நிதி மற்றும் பல்வேறு சேவைகளை முறையாக பெற வழிவகை செய்து குடும்ப வருமானத்தை பெருக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது.

மேலும் வறிய நிலையில் உள்ள ஏழை மக்களை கண்டறிந்து சுய உதவிக்குழுக்களாக ஒருங்கிணைந்து அவர்களுக்கான நிலைத்த நீடித்த தன்மையுடைய அமைப்புகளை உருவாக்கி சுயமாக நிர்வாகம் செய்ய பல்வேறு திறன் பயிற்சிகள் அளித்து லாபம் தரக்கூடிய சுயதொழில் வாய்ப்புகளைஏற்படுத்தி அவர்களது வாழ்வாதார நிலையை உயர்த்துவது இந்த திட்டத்தின் சிறப்பம்சம்.

முதற்கட்டமாக நான்கு ஊராட்சிகளை சார்ந்த 78 கிராம ஊராட்சிகளில் மிகவும் ஏழை, நலிவுற்றோர் , மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு இவர்களின் பட்டியல் கிராம சபையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

மேலும் 71 ஊராட்சிகளில் 73 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் துவங்கப்பட்டுள்ளது.

கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்களுக்கு புத்தக பராமரிப்பு பயிற்ச்சி வழங்கப்பட்டுள்து. தற்போது வழங்கப்படும் கிராம வறுமை ஒழிப்பு சங்க துவக்க நிதியிலிருந்து கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு தேவையான தளவாட பொருட்கள் மற்றும் பதிவேடுகளை வாங்கிட வேண்டும். ஊராட்சியில் சிறப்பாக செயல்படும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ8 லட்சம் முதல் ரூ10 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இந்நிதியைக்கொண்டு ஊராட்சிக்கு தேவைப்படும் கட்டமைப்பு வசதிகளை அமைத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில்   மகளிர் திட்ட அலுவலர் ரேணுகாதேவி, நபார்டு உதவிபொதுமேலாளர் சந்தானம், மாவட்ட முதன்மை முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



கருத்துகள் இல்லை:

பக்கங்கள்