வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 15 செப்டம்பர், 2011

எந்திரமனிதர்கள்...

 மருத்துவமனைக்கு செல்லப்போகிறீர்களா? அங்கே

உங்களுக்கு தேவையான
புரதம்,வைட்டமின் இன்னும் என்னென்னவோ சொல்வாங்களே அவை அனைத்தும்
கலந்த சுவையான... சக்தியான உணவுவகைகளை உங்களுக்கு பரிமாற
எந்திர மனிதர்கள் காத்திருக்கிறார்கள்.
 
  உணவுகளை ஏந்தியபடி மருத்துவமனையை வலம் வரும் இந்த எந்திரமனிதர்கள்,மருத்துவனைக்கு
வந்துள்ள நோயாளிகள் யார்? யார்? அவர்களுக்கு எந்த நேரத்தில் என்ன உணவு வழங்கலாம்?
அவர்களுக்கு தேவையான ஆடைகள் எவை என்பதை எல்லாம் தெரிந்து கொண்டு
மிகச்சரியான நேரத்தில் சரியானபடி அவற்றை வழங்குவார்கள்.
    
   நீங்கள் இந்த எந்திர மனிதர்களுக்கு  கையூட்டு தரவேண்டியதில்லை.
காரியம் ஆகவேண்டுமே.. என்ற எண்ணத்தில் கடுப்புகளை மறைத்துக்கொண்டு நீங்கள்
 சிரிக்கவேண்டியதில்லை.
 
  கேட்க நன்றாகத்தான் இருக்கிறது இது சாத்தியமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
உண்மைதாங்க இந்த அரங்கேற்றம் இந்தியாவில் இல்லைங்க.. ஆஸ்திரேலியாவில் நடக்கபோகிறது.
எப்போது என்கிறீர்களா? எல்லாபணியும் முடிந்த நிலையில் அடுத்த ஆண்டு கடைசியில் காட்சிக்கு
வருதுங்க... எந்த மருத்துவனையில் என்று நீங்கள் கேட்கும் முன்னே சொல்லிடறமோங்க... ஆஸ்திரேலியாவில்
உள்ள ராயல் நார்த்ஷோர் மருத்துவமனையில்தாங்க எந்திர மனிதர்களின் அரங்கேற்றம் நடக்குதுங்க.



                                                                        

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்