வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 14 செப்டம்பர், 2011

அமெரிக்காவில் ஏழைகள் அதிகம்...




அமெரிக்காவில் வாழும் நடுத்தர மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே செல்லும்
நிலை அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

 அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் வெளியிட்டுள்ள
குறிப்பிலிருந்து இது தெரியவருகிறது.

      கடந்த 2009, மற்றும் பத்தாம் ஆண்டுகளில்  செய்யப்பட்ட ஆய்வுகளின்படி
அந்நாட்டில் 46 மில்லியன் மக்கள்வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்துவருவது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

      அமெரிக்க பொருளாதாரப்படி சராசரி  ஆண்டுவருமானம் ரூ 10 லட்சத்துக்கு
மேல் இருந்தால் அவர் வறுமைக்கோட்டுக்கு மேல் வாழ்பவர். அதற்கும் கீழே ரூ 5லட்சம்
வருமானம் கொண்டுள்ளவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் என்று
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  இதன் படி கடந்த ஆண்டு செய்யப்பட்ட ஆய்வின்படி  அந்நாட்டின் மொத்த மக்கள்
தொகையில் ஆறில் ஒருவர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வதாக அறியப்பட்டுள்ளது.

                                                                   

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்