வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

அறுபதுக்குள் அடங்கும் உயிர்கள்...

இந்தியாவில்
தவறான பழக்கவழக்கங்களால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதாகவும்.,
 இதனால் இந்தியர்களின் ஆயுள்காலம் குறைந்து வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம்
தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் சீரற்ற உணவு பழக்கம், போதைபொருட்கள் நுகர்வு, புகைபிடித்தல், உடற்பயிற்சிகளில்
அக்கறை காட்டாமல் இருப்பது, அதிகப்படியான வேலைச்சுமை, மற்றும் மன அழுத்தம்,
 ரத்த அழுத்தம், போன்றவை அதிகப்படியாக உள்ளது.
  
 இந்தியாவில் வாழும்  ஏழை மக்கள் சுகாதரமற்ற சூழலில் வாழ்தல் உள்ளிட்ட காரணங்களால்
இளவயது மரணத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இந்தியாவில்  ரத்த அழுத்தநோய், சர்க்கரைநோய், மாரடைப்பு, புற்றுநோயால்
அதிகப்படியான மக்கள் பலியாகின்றனர்.

  இந்தியாவில் இதயநோய் 24 சதவிகிதம், சுவாசகோளாறுநோய் 11 சதவிகிதம்,
சர்க்கரைநோய்,12 சதவிகிதம் என மரணத்தின் தூதுவர்களாக உள்ளன.

   இது தவிர போதுமான ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பலியாவோரின் எண்ணிக்கையும்
 அதிகரித்துவருகிறது. என குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்