வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பதவியிலிருந்து நீக்ககோரி நீதி மன்றத்தில் மனு





 தமிழக முதல்வர் ஜெயலலிதாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என சென்னையைசேர்ந்த டிராபிக் ராமசாமி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
  அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: உயர்பதவிகளில் உள்ளோர்  மீது குற்றச்சாட்டு எழுந்தால் அது குறித்து கேள்வி எழுப்ப அதிகாரம் உள்ளது என்று   மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையாளராக இருந்த தாமஸைப்பதவி நீக்கம் செய்த வழக்கில் உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.
 இந்த மாதிரியான வழக்குகளில் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் தனிநபரின்
குணத்துக்குதான் முக்கியத்துவம் அளிக்கவேண்டுமே தவிர குற்றச்சாட்டுக்கு உள்ளானவரின்
பதவிக்கு முக்கியத்துவம் தரக்கூடாது என்று கடந்த 2009ல் நீதிபதி கண்ணதாசன் வழக்கில் உச்சநீதி மன்றம் தனது கருத்தை தெரிவித்துள்ளது.
        ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான கர்நாடாகவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மகாராஷ்டிரா முதல்வர் அசோக்சவாண் ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
   கடந்த 14 ஆண்டுகளாக சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தமிழக முதல்வர்
ஜெயலலிதா  முதல்வர் பதவியில் நீடிக்ககூடாது. அவரை பதவிநீக்கம் செய்ய உச்சநீதி மன்றம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
   என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்