வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 15 செப்டம்பர், 2011

சுதந்திரநாட்டில் 550 பேர் மட்டுமே...

ஆதிக்கவெறிபிடித்து...

அடுத்த நாட்டின் கைபிடித்து... சொந்தமக்களையே.. அழித்தொழித்து..

மிஞ்சியவர்கள்... தஞ்சம் என வந்தவர்கள்...

அனைவரையும் சிறைகளுக்குள்... சிறகொடித்து...

சிறு அசைவும் குற்றம் என  சட்டம் வகுத்து...
  
மூச்சுவிடும்போதுகூட காற்றில் அசைவு கூடாது

என

முள்வேலிகளுக்குள் முக்கி வைத்து

அழகு பார்க்கும் நாடுகள் மத்தியில்...

 என்னைக்கேட்காமல்

அடுத்த நகரத்துடன் ....

எப்படி நீ என்னை இணைக்கலாம்.

என் சுதந்திரம் என்ன, உன் வீட்டின்

முற்றத்தில் முளைத்துள்ள புல்லா...?

என்ற கோபத்தில் கொப்பளித்த சிறுநகரம் ஒன்று...

தனது நகரத்தை சுதந்திர நகரமாக..நாடாக அறிவித்ததுடன்..நில்லாமல்..

தனது நகரின் அடையாளமாய்... தனி நாணயத்தையே வெளியிட்டுள்ளது..

எங்கே இது நடந்தது என்கிறீர்களா?

இந்தியாவின் மருமகளாய்.. மதிக்கப்படும்..

சோனியா பிறந்த தேசத்தில் நடந்துள்ளது இந்த சம்பவம்.

இத்தாலியில் உள்ள சிறுநகரம் பிலெட்டினோ...பிரேசினன் என்ற மாகாணத்தின்

ஆளுமைக்குள் வாழ்ந்த இந்த சிறுநகரத்தை..செலவினங்களை

கட்டுப்படுத்துவதாய்சொல்லி...

அந்த நகரத்தை அடுத்திருந்த ..  ட்ரெவி என்ற நகரத்துடன் இணைப்பதாக

கூறியது அரசு.

 இதனை ஏற்க மறுத்த பிலொட்டினா... தான் சுதந்திரநாடு

என அறிவித்துக்கொண்டது.

அத்துடன் பியொரிட்டா என்ற பெயரில் நாணயத்தையும்

அச்சிட்டு வெளியிட்டுக்கொண்டுள்ளது.

இந்த ரோஷக்கார  நகரத்தில் வாழும் மக்கள் தொகையின்

எண்ணிக்கை

550  மட்டுமே... 

அவர்கள் மானஸ்தர்கள்

அப்படித்தான் நடக்கும்.

பலகோடி மக்களை கொண்ட ஒரு இனத்தின்

கருக்குழிகள் அழிக்கப்பட்டதையும் ,அழிக்கபடுவதையும்...

தப்பிய கருக்குழிகளில்  மாற்று இனத்தின் வித்துக்கள் விதைக்கப்படுவதையும்

பார்த்துக்கொண்டிருக்கும் நாமும் மானஸ்தர்கள்தான்...

இல்லையா பின்னே...

புத்தனைப்பெற்ற ராமன் அல்லவா நாம்...

லவ குசர்கள் செத்தால் நமக்கென்ன...நடப்பது நடக்கட்டும்..

நாளைய சரித்திரம் நம்மை கொண்டாட்டும்....


கருத்துகள் இல்லை:

பக்கங்கள்