வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

கள்ளுக்கான விவாதத்தில் பங்கேற்க தயாரா? கம்யூனிஸ்ட் கட்சிக்கு கள் இயக்கம் சவால்.

            
                                                             
கள்ளுக்கான விவாதத்தில் பங்கு கொண்டு வெற்றிபெற்றுவிட்டால் எங்களது கோரிக்கையை கைவிட்டு விடுகிறோம் . விவாதத்துக்கு தயாரா? என்று மார்க்ஸிஸ்ட் கட்சியின் மகளிர்பிரிவுக்கு  தமிழ்நாடு கள் இயக்கம் சவால் விட்டுள்ளது. இது குறித்து அந்த இயக்கத்தின்  கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி விட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
 உலகில் 108 நாடுகளில் பனை, தென்னை மரங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டுமே கள் இறக்குவதற்கும், பருகுவதற்கும் தடை உள்ளது. ஊழக்கு வித்திடும் வகையில் இந்த தடை உள்ளது.
  இந்த தடை அரசியலமைப்பு சட்டத்துக்கும், உச்சநீதி மன்றதீர்ப்புக்கும் எதிரானது. இது குறித்து கடந்த 11 ம்தேதி திண்டுக்கல் எம்.எல்.ஏ., பாலபாரதியிடம்  விளக்கிகூறியபோது   எங்கள் கட்சியின் விவசாயபிரிவு கள்ளை ஆ தரிக்கிறது. மகளிர் பிரிவு எதிர்க்கிறது என்ற பதிலை கூறினார்.
     கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்ககோருவதில் நியாயமே இல்லை இல்லை என நிரூப்பிப்பவர்களுக்கு ஒரு கோடி பரிசு தொகை வழங்குவதாக அறிவித்தோம். இந்த அறிவிப்புகள் வெளியிட்டு ஐந்து ஆண்டுகளாகிவிட்டது.
     பரிசை கேட்க ஒருவரும் வரவில்லை. இது வரை எந்த ஒரு அரசியல் கட்சியும், அரசும் கள்ளுக்கான விவாதத்துக்கு முன்வரவில்லை.
   இந்த நிலையில் தமிழ்நாடு மார்க்ஸிஸ்ட் கட்சியின் மகளிர் பிரிவு இந்த அரிய வாய்ப்பை பங்கு கொண்டு பரிசு தொகையை பெறலாம்.
   மகளிர் அமைப்புடன் கள் இயக்கம் விவாதம் நடத்த முடிவு செய்துள்ளது. அந்த அமைப்பின் சார்பில் இருவர் கலந்துகொள்ளலாம். கள் இயக்கத்தின் சார்பில் ஒருவர் மட்டுமே பங்கேற்பார்.
 மகளிர் அணியியே நடுவரைத்தேர்வு செய்து கொள்ளலாம். ஊடகங்கள் பார்வையாளராக பங்கேற்பர். விவாதத்தில் மகளிர் அமைப்பு வென்றுவிட்டால், தமிழ்நாடு கள் இயக்கம் கள்ளுக்கான  தனது போராட்டத்தை விலக்கிக்கொள்ளும்.
மன்னிப்பும் கேட்கும். விவாதத்துக்கு தயாரா? என குறிப்பிட்டுள்ளது.
    

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்