வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

2500 கி.மீ... 5 வருடம்...

 நமது செல்லவளர்ப்பு பிராணிகள் காணாமல்போனால் என்னசெய்வோம்
ஓரிரு நாட்கள்

அதனைத்தேடுவோம், பிறகு மனதைத்தேற்றிக்கொண்டு அன்றாட அலுவல்களை தொடருவோம்.

   காணாமல்போன வளர்ப்பு பிராணிமீது நாம் வைத்துள்ள பாசம் அத்துடன் முடிவுக்கு வரும்.

ஆனால் அமெரிக்கர்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகள் காணாமல் போனால் அவ்வளவு லேசில்

விடுவதில்லை, அந்த பிராணியை கண்டுபிடிக்க செய்திதாள்களிலும், சேனல்களிலும்

விளம்பரங்களை தருவது, பிராணிகள் பாதுகாப்பு குறித்த உறுப்பினர்களின் கவனத்துக்கு

 கொண்டுசென்று அவற்றை தேடுவது.

  ஏன் போலிசில் கூட அந்த நிகழ்வைப்பற்றி புகார் செய்வது உள்ளிட்ட  என ஏகப்பட்ட தேடல்

 முயற்சிகளில் ஈடுபடுவர்.

   சரி விஷயத்துகு வருவோம்... அமெரிக்காவில் உள்ள ராக்கிமலைப்பகுதியில் வசித்துவருபவர்

 கிரிஸ். இவர் ஆசை ஆசையாக ஒரு பூனையை தனது வீட்டில் வளர்த்துவந்தார்.
 
அதற்கு வில்லோ என்று பெயரும் இட்டுள்ளார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக

வளர்ந்த அந்த பூனை, தனது எஜமான் கிறிஸ்ஸின்

வீட்டில் நடந்த ஒரு வேலையின்போது ஹாயாக வெளியேறிவிட்டது.

 இந்த சம்பவம் கடந்த 2006 ம் ஆண்டில் நடந்துள்ளது. காணாமல்போன பூனையை  கண்டுபிடிக்க

 கிறிஸ் தம்பதியினர் இரண்டாவது பாராவில் குறிப்பிட்டதுபோன்ற முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

   தளராத மனதுடன் முயற்ச்சி செய்தும் வில்லோவை கண்டுபிடிக்க முடியவில்லை.

நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களான நிலையில்

ஒரு நாள் நியூயார்க் நகரிலிருந்து கிறிஸ்சுக்கு அழைப்பு வந்துள்ளது.

   அந்த அழைப்பைக்கண்டு பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைந்த கிறிஸ் தம்பதியினர்

மறுபுறம் ஆச்சர்யமும் அடைந்துள்ளனர். இவர்களையும் மட்டும் இந்த ஆச்சர்யம்

தொற்றிக்கொள்ளவில்லை. கிறிஸ் தம்பதியினருக்கு நெருக்கமானவர்களும் இந்த

 ஆச்சர்யத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

   ஆமாங்க நீங்க யூகித்ததுபோலவே காணாமல் போன வில்லோபூனை  நியூயாக்கில்

கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. என்ற செய்திதாங்க அது.

   அது சரி...ஆச்சர்யத்துக்கு என்ன காரணம் என்கிறீர்களா?

ஐந்து வருடங்களுக்கு முன்னாள் கொலராடோ மாநிலத்திலிருந்துகாணாமல்போன அந்த பூனை

அந்த மாநிலத்தை அடுத்துள்ள ஆறு மாநிலங்களைக்கடந்து

ஏறக்குறைய  2 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவை அனாசயமாக கடந்து

நியூயார்கில் உள்ள மன்ஹாட்டன் சாலையில் வீர நடைபோட்டிருக்கிறது.

அந்த வீர நடையைக்கண்ட ஒரு நல்ல மனசுக்காரர் அது கூட என்ன ஒப்பந்தம்போட்டாரோ

 தெரியவில்லை அதனை   சமாதானப்படுத்தி  நியூயார்க்கில் உள்ள பிராணிகள் காப்பகத்தில்

 சேர்த்துள்ளார்.

வழிநெடுக உள்ள ஆபத்துக்களை கடந்து வெற்றிகரமாக நியூயார்க்கிற்கு வந்த

அந்த பூனைக்கு பழைய வீட்டு வாழ்க்கை பழையபடி கிடைத்திருக்கிறது.

  சரிங்க... ஐந்து வருடத்துக்கு முன்னாள் காணாமல்போனபூனை  அது தான்னு எப்படி சொல்ல

 முடியும் என நீங்கள் கேட்பது எனக்கு கேட்குதுங்க... பெரும்பாலும் அமெரிக்கர்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகள் காணாமல் போனா, அத  வேறு யாரும் உரிமை கொண்டாடக்கூடாதுங்குற தெளிவில.!

வளர்ப்பு பிராணிகளின் உடலில் மைக்ரோ சிப்பை பொருத்திடுவாங்க...

 ஆமாங்க...   அந்த சிப்பிலே வளர்ப்பு பிராணி யாருதுங்கிற விபரம் எல்லாம்

இருக்குமுங்க...

 அப்படிதாங்க வில்லோ ஒடம்புலேயும் பொருத்தப்பட்டிருந்த சிப்பை வெச்சுகிறிஸ் தம்பதிதான்

 வில்லோ வின் உரிமையாளர்கள் என்பதை கண்டுபிடிச்சிருக்காங்க.



கருத்துகள் இல்லை:

பக்கங்கள்